சின்னு சாமி சந்திரசேகரன்

இவரது சிறுகதைகள் தினமணி கதிர், கொலுசு, மல்லிகை மகள் போன்ற அச்சு இதழ்களிலும், இளமை விகடன், கல்கி, மங்கையர் மலர், சஹானா, வாசகசாலை போன்ற இணைய இதழ்களிலும் வெளி வந்துள்ளன. இவரது ‘காவடி ஆட்டமும் காந்திமதியின் காதலும்’ என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய ஜெயஸ்ரீராஜ் நினைவு சிறுகதைப்போட்டியில் ரூ.3000/ பரிசு பெற்றுள்ளது. இவரது ‘ஓர் ஒடுங்கிய உழவனின் கதை’ என்ற சிறுகதை திருப்பூர் மக்கள் மாமன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு(ரூ 1000/‍) வென்றுள்ளது. மேலும் ‘குடைக்காம்பு’ என்ற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ‘பறை முழக்கம்’ விரைவில் NCBH Chennai நிறுவனத்தால் வெளியிடப்பட உள்ளது.

புனரபி மரணம்

பரந்து கிடந்த அந்த ஹாலில் பரமசிவம் மரணித்து மல்லாக்கப் படுத்திருந்தார். மன்னிக்கவும்… படுக்க வைக்கப் பட்டிருந்தார். காலையில் எழுந்திருக்காமல் மேலூர் போய்ச் சேர்ந்திருந்ததால், அவருக்கு ஹார்ட் அட்டாக் என்று முடிவு செய்திருந்தனர் அவர் வீட்டார். பரமசிவம் அந்த ஊருக்கு நாட்டாமை என்பதால்,…

Read more