பாரதிராஜன் அம்பத்தூர், Bharathirajan Ambathoor

ஓய்வுபெற்ற அரசு ஊழியர். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு எழுத ஆரம்பித்திருக்கிறார். தினமணி கவிதை மணி பகுதியில் சுமாராக 20 வாரம் கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. திருக்குறள் 109-வது அதிகாரமான “வறுமை” என்ற குறளதிகாரத்திற்கு 10- சிறுகதைகள் எழுதி 2022ல் பெரம்பலூர் தாய்த்தமிழ்க்குழு மூலமாக வெளியிடப்பட்டது.
மின்னிதழ்களில் சிறுகதைகள், கவிதைகள் எழுதி வருகிறார்.  உரத்த சிந்தனை, வானமே எல்லை, அமுதசுரபி, அத்திப்பூ, கல்வெட்டு மாத இதழ்களில் விமர்சனங்கள் வெளிவருகின்றன.

புதுமைப்பெண்

சென்னையை அடுத்த புறநகர்ப்பகுதியான செங்குன்றத்தில் உள்ள ஒரு அரவைமில்லில் ஒரே போலீஸ் கூட்டம். நிறைய அதிகாரிகள், அதில் ஒரே ஒரு பெண் சாதாரண உடையணிந்து, பேசிக்கொண்டிருந்தாள். அவள் பெயர் மணிமேகலை. சொற்பத் தொகையான ரூபாய் 1,000/_க்கு, மணிமேகலையும் அவள் குடும்பமும் முழுக்க…

Read more