இளையவன் சிவா, Ilayavan Siva

கி. சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர்  அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர். பிறப்பு  திண்டுக்கல் மாவட்டத்தில் பழநிக்கு அருகில் அய்யம்பாளையம். இருப்பு  திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் நரசிங்காபுரம். இவரது கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி, கொலுசு, புன்னகை,  ஏழைதாசன், தமிழ்ப் பல்லவி, தினத்தந்தி, தினபூமி, மனித நேயம், புதிய உறவு, புதிய ஆசிரியன், உரத்த சிந்தனை, வானவில்,பொற்றாமரை போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. நூல் விமர்சனங்களில் நிறைய பரிசுகளைப் பெற்றுள்ளார். பல்வேறு இணைய இதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல் விமர்சனக் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. 1.மின்மினிகள்(1999)
2.தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022)
3.தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது)
4.அன்பு மொழி(2024)
5.மீன் சுமக்கும் கடல் (2025)
      என   ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
கோவை மேன்மதி மன்றம் இவருக்கு “தாய்த் தமிழ் காவலர்” விருது வழங்கி சிறப்பித்துள்ளது. பல்வேறு அமைப்புகள் நடத்திய கவியரங்கங்களில் கலந்துகொண்டு கவி பாடியுள்ளார். உடுமலை இலக்கியக் களம் என்ற அமைப்பின் செயலாளராகப் பணிபுரிகிறார்

கைப்பேசியும் கண்ணாடியும்

ஆளை அழகாய்க் காட்டுமேஆசை நெஞ்சில் கூட்டுமேமுன்னே நிற்கும் எதனையும்முழுதாய்க் காட்டும் கண்ணாடி வள்ளுவரின் கூற்றைப் போல்வாய்மை மறப்பதில்லையேகள்ளமற்ற செயலையேகருத்தில் நிறைக்கும் கண்ணாடி துணடு துண்டாய் உடையினும்தொழிலைச் செய்யும்கண்ணாடிகண்டு மகிழும் யாவரும்கவனம் வைப்போம் கடமையில். 2காணும் திசையெலாம் கைப்பேசிகவனத்தைக் கூட்டும் கைப்பேசிபேணும் வாழ்வெலாம்…

Read more