Rajesh Garga

இலவசக்கொத்தனார்  என்ற புனைபெயரிலும் எழுதி வரும் ராஜேஷ் கர்கா, ஒரு தமிழ் எழுத்தாளர். இவர் எழுதிய புத்தகங்களான ‘ஈசியாக எழுதலாம் வெண்பா’, செவ்வியல் தமிழ்க் கவிதை வடிவமான வெண்பா இலக்கணம் பற்றியது, ‘ஜாலியாத் தமிழ் இலக்கணம்’ தமிழ் இலக்கணத்தை எளிமையாகச் சொல்லும் ஒன்று. பெரு நாட்டில் பெற்ற பயண அனுபவங்களை ‘பெரு(ம்) பயணம்’ என்ற பெயரில் தமிழிலும், ‘Perambulating in Peru’ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் புத்தகமாக இவர் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் இடையில் படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். பல தமிழ்ப் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

கள் தந்த போதை! 

இந்த இதழ் சிறார் இலக்கியச் சிறப்பிதழாக வெளிவருகிறது என்பதால் சிறுவர் இலக்கியத்தைப் பற்றித்தான் எழுத வேண்டுமென நினைத்திருந்தேன். ஆனால் இந்தச் சிறப்பிதழை அறிமுகப்படுத்தி ஷாந்தி மாரியப்பன் எழுதிய குறிப்பைப் பார்த்த பொழுது என் எண்ணம் மாறிவிட்டது.  “பண்புடன் மின்னிதழின் குழந்தைகள் தினச்…

Read more

எத்தனைப் பண்டங்கள்! எத்துணைச் சுவை!

“ஐயா ராஜேஷ் அவர்களே, தீபாவளி நெருங்குகிறதே, தங்கள் இல்லத்தில் எத்துணைத் தித்திப்புப் பண்டங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள்?” என்று சங்கத்தமிழில் பேசிக்கொண்டே வீட்டுக்குள்ளே நுழைந்தான் சுரேஷ். “என்னடா? தமிழ் எல்லாம் ரொம்ப பலமா இருக்கு? என்ன விஷயம்?” “நீ வேற கதை,…

Read more

மோடி செய்த மோதி

முன் குறிப்பு : இது அரசியல் பதிவு… இல்லை! எழுதுவது குறித்து ஒரு நண்பரோடு பேசிக் கொண்டிருந்தேன். பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும் முறை பற்றிப் பேச்சு திரும்பியது. ஒலிக்கும் முறையிலேயே தமிழில் எழுதுகிறோம் என்பதால் அச்சொற்களின் உச்சரிப்புக்கு எவ்வளவு…

Read more