சரஸ்வதி தியாகராஜன், Saraswathi Thyagarajan

தனது இனிய குரலால் ‘தென்றல்’ வாசகர்கள், எழுத்தாளர்கள் என்று பலரை வசீகரித்து வைத்திருப்பவர் சரஸ்வதி தியாகராஜன். தன் வயதைப் பொருட்படுத்தாமல் ஒரு சிறுமியின் உற்சாகத்துடன் நாள்தோறும் பலரது படைப்புகளுக்கு குரலால் உயிர் கொடுத்து வருகிறார். தென்றலில் தொடங்கி வேறு பிற இதழ்களுக்கும் தொடர்ந்து பங்களித்து வருகிறார்.

தென்றல் பத்திரிக்கைக்காக 6800 ஒலிவடிவங்களுக்கு மேல் தந்திருக்கிறார். சொல்வனத்தில் வந்த கதை கட்டுரைகளை ஒலிவடிவம் செய்து காணொளியாக்கி 800க்கும் மேல் சொல்வனத்தின் ஒளிவனத்தில் இட்டிருக்கிறார். தற்போது எழுத்தாளர்களுடன் நேர்காணல், அவர்களது படைப்புகள் மீது கலந்துரையாடல் போன்றவற்றை சொல்வனத்திற்காகக் காணொளியாகச் செய்து சொல்வனம் YouTube channel -இல் பதிவு செய்து வருகிறார்.

தர்பாரி ராகம், தரையில் இறங்கும் விமானங்கள், ஶ்ரீரங்கத்து தேவதைகள், மிளகு, தினை, அதிரியன் நினைவுகள், உபநதிகள், மாலன் அவர்களின் தோழி , இ. பா வின் குருதிப்புனல், சியாமளா கோபுவின் மோகமே மௌனமாய் போன்ற பல படைப்புகள் இவரால் ஒலிவடிவம் செய்யப்பட்டுள்ளன.

தமிழ் இலக்கிய ஆளுமை இரா. முருகன் எனது நினைவுகளில்.

தமிழ் இலக்கியப் பரப்பில் தனித்துவமானதொரு அடையாளத்தை உருவாக்கி, தமது படைப்புகளின் வழியாக வாசகர்களின் மனங்களில் நீங்காத இடம்பிடித்த எழுத்தாளர் இரா. முருகன் அவர்களின் மறைவு, தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். ஒரு சிறந்த எழுத்தாளரை மட்டுமல்ல, மொழியின் நுட்பங்களையும்,…

Read more