சரவணன் பார்த்தசாரதி, Saravanan Parthasaradhi

முனைவர் சரவணன் பார்த்தசாரதி

குற்றங்கள், நோய்கள், சுற்றுச்சூழல் சீர்கேடுகள் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளை செயற்கை நுண்ணறிவின் துணையுடன் முன்னறிந்து, சரி செய்வது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆராய்ச்சியாளர். ஆய்வு நிறுவனம் ஒன்றின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இதுவரை, முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை மொழியாக்கம் செய்துள்ளதுடன், பத்து நூல்களையும் எழுதியுள்ளார். அறிவியலை எளியமுறையில் மாணவர்களுக்குக் கொண்டுசேர்க்கும் நோக்கில் ‘விஞ்ஞானி வீராச்சாமி’ என்ற கதாப்பாத்திரத்தை உருவாக்கி, அறிவியல் புனைகதைகளையும் எழுதிவருகிறார். இவை தவிர, இலக்கியம், கல்வி, வரலாறு, சுற்றுச்சூழல், அரசியல் சார்ந்த இவரது படைப்புகள் பல இதழ்களிலும் வெளியாகியுள்ளன.

 

கடல் அரக்கன், தேவதைப்பூ – இரு கதைகள்

கடல் அரக்கன் மூலம்: ஆபி ஃபிலிப்ஸ் வாக்கர் மொழியாக்கம்: சரவணன் பார்த்தசாரதி கடலுக்கு நடுவே ஒரு தீவு இருந்தது. முழுக்க பாறைகளாலான அந்தத் தீவில் ட்ராகன் போன்ற தோற்றத்தில் ஓர் அரக்கன் வாழ்ந்து வந்தான். பெரிய தலையுடன் பாம்பு போன்ற தோற்றத்தில்…

Read more