சுதாகர் கஸ்தூரி, Sudhakar Kasturi

தூத்துக்குடியில் பிறந்து மும்பையில் வசிக்கும் எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி தமிழ் இலக்கிய உலகில் அறிவியல் புனைகதைகள் (Science Fiction) மற்றும் மர்மத் தொடர்கள் எழுதுவதில் புகழ்பெற்றவர். அறிவியல் உண்மைகள், வரலாறு, உளவியல் மற்றும் தத்துவங்களை இணைத்து வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பரபரப்பான த்ரில்லர் கதைகளை எழுதுவது இவரது தனிச்சிறப்பு. 6174, 7.83 ஹெர்ட்ஸ், நேரா யோசி, டர்மெரின் 384 , வலவன் ஆகியவை இவர் எழுதியவற்றில் சில. பல்வேறு விருதுகளையும் இவரது நூல்கள் வென்றுள்ளன.

ஓர் விஸ்வரூபப் பெருவிருட்சம்

இரா. முருகன் அண்ணனைத் தொடர்பு கொண்டபோது வலைக் குழுமங்களில் அவரது எழுத்துகள் பிரபலமாக இருந்தன. அவரது புதுக்கவிதை ஒன்றில் வசப்பட்டு, பாராட்டி அவருக்கு எழுதியபோது, அவரது சிந்தனைகளின் புதிய கோணம் தெரிந்தது. தெரிந்ததுதானே தவிர புரியவில்லை. அது மாயாஜால யதார்த்தம் என்பது…

Read more