நாள்: 1 தொடர்ச்சி…
நைட்டு ஒரு மணிக்கு படுத்து தூங்காம யார டார்கெட் பண்ணலாம்னு ரம்யாவும், சுபிக்ஷாவும் ப்ளான் பண்ணிட்டு இருந்துச்சுங்க. இவனுங்கள டார்கெட் வச்சு வேற அடிக்கனுமா? இவனுங்க அடிச்சுக்குறத பாத்தா டைரக்டா காம்பவுண்டு சொவத்தத் தாண்டி இவனுங்களே குதிச்சிருவானுங்க போல…
நாள்: 2
Super Deluxe கூடாரத்துல ஒரு பஞ்சாயத்து. விடியக்காலை 5 மணிக்கே எந்திரிச்சு எப்படா டீ கிடைக்கும்ன்னு காலி கப்போட காத்துட்டு இருந்த ரட்சகன், நேரம் ஆக ஆக கையில நரம்பு புடச்சு கோவத்த கழுத்து வழியா ஏத்தி கண்ணுல நிறுத்தி கனலா நின்னுட்டு இருந்தாப்ல.
ரட்சகன்: ஏண்டா, ஒரு பெரிய மனுஷன் காலையில இருந்து ஒரு டீக்காக சுத்திட்டு இருக்கேண்டா…எல்லாரும் எந்திரிச்சு வந்தாதான் அடுப்ப பத்த வைப்பேன்னு கடுப்ப கிளப்புறானுங்க. எந்திரிச்சு வாங்களேண்டா
ரம்யா: ஏங்க, நைட்டு நாங்க தூங்குனதே லேட்டு அதான் பவர் இருக்குல்ல இன்னும் கொஞ்ச நேரம் தூங்குனா என்ன கேடு?
சுபிக்ஷா: குடுத்த பவர யூஸ் பண்ணா அது தவறா?
ரட்சகன்: யம்மா, டீய குடிச்சாதான் எனக்கு காலை கடன தீக்க முடியும்
ரம்யா: நீ வாங்குன கடனுக்கெல்லாம் நாங்க ஏன் தூங்காம திரியனும்? டீயெல்லாம் பொறுமையா மதியம் குடிக்கலாம்
வினோத்து: அவ சொல்றதுலயும் நியாயம் இருக்குல்ல? பவர யூஸ் பண்ணுவோம்
ரட்சகன்: இப்டியே பேசிட்டு இருந்தா நான் காலை கடன முடிக்க கவரத்தான் யூஸ் பண்ணனும்…இப்பிடியே பண்ணிட்டு இருந்தா நான் கட்சி தாவிருவேன் பாத்துக்கோங்க…ஒரு அர கிளாஸ் டீக்கு என்னய தீயெல்லாம் மிதிக்க வச்சிருவீங்க போலயே…
சுபிக்ஷா: வயசான காலத்துல இந்தாளு வேற…வா இவனுக்கு டீ வாங்கி குடுத்த புண்ணியமாச்சும் கிடைக்கட்டும்
இப்டி ஒரு வழியா சுபிக்ஷாவும், ரம்யாவும் மனசு வந்து வெளிய வந்தாங்க.
மார்னிங்க் சாங். மரண மாசு பாட்டு. இன்னைக்கு சூன்ய பொம்ம கொஞ்சம் ஆடுனத பாக்க முடிஞ்சது. கரூர் கலவரத்துக்கு அப்பறம் காணாமப் போன விஜய்ண்ணா மாதிரி இந்த வியன்னாலாம் எங்க இருக்குண்ணே தெரியல.
பாட்டு முடிஞ்சதும், ரம்யா தண்ணி டிப்பார்ட்மென்ட் சபரி கிட்ட போயி
ரம்யா: ஆமா எனக்கு தர வேண்டிய 8 லிட்டர் தண்ணிய குடு நான் போயி குளிக்கனும்
சபரி: அதத்தான் கக்கூஸ் கழுவ எடுத்துட்டுப் போயிட்டானுங்களே
ரம்யா: எதே? அப்போ நான் எப்பிடி கழுவ ஐ மீன் எப்பிடி பல்லு வெளக்கி வாய கழுவ?
சபரி: பல்லு விளக்க தெரியாமயா இவ்வளவு பெருசா வளந்திருக்க?
ரம்யா: பிஞ்சுரும்! நீ என்னோட 8 லிட்டரு, சுபிக்ஷாவோட 8 லிட்டரு. துஷாரோட 8 லிட்டரு ஆக மொத்தம் 8 லிட்டர் தண்ணிய இப்பவே குடு….
சபரி: (மை.வா: இவ கொரொனா பேட்ச்ல பாஸ் பண்ணவ போல) இந்தாம்மா இங்க தண்ணியெல்லாம் இல்ல…தண்ணி டாங்கி மட்டுந்தான் இருக்கு
ரம்யா: எவன் தண்ணியில்லாம எக்கேடு கெட்டா எனக்கென்ன…நீ தண்ணிய குடப்பா
சபரி: இவ யாருடா கட்டிங்க்கு மிக்சிங் கேக்குறா மாதிரி தண்ணி தண்ணின்னு சொன்னதையே சொல்லிட்டு இருக்கா….
அப்டியே கட் பண்ணி உள்ள போனா. காணாமப் போன வியன்னா வந்து ப்ரவீன் கிட்ட தண்ணி சம்பந்தமா எதயோ கேக்க அதுக்கு அவன் மூஞ்சிய திருப்பிட்டு போக, “என்னது என் சுயமரியாதைக்கு சூடு போட்டுட்டு அங்குட்டு சுத்திப் போறான்”னு அவன பிடிச்சிகிச்சு. அப்றம் எல்லாரும் அவன “தம்பி நீ பண்ணது தப்பு”ன்னு சொல்லிட்டு இருக்கும் போது, வாட்டர் லெமன் வாண்டடா வந்து “நீ தண்ணி குடுக்காததால இல்ல…அவள மதிக்காததாலதான் அந்தப் பொண்ணு பொலம்புறா”ன்னு பெர்பார்மென்ஸ் பண்ண, “அதான பொண்ணுன்னா அண்ணனுக்கு கண்ணு செவக்கும்”ன்னு ப்ரவீன் பதில் சொல்ல, பார்வதி வாட்டர் லெமனுக்கு வக்காலத்து வாங்குச்சு.
அரோராவும், ரம்யாவும் வாட்டர் லெமன வேலை வாங்க, சலிச்சுக்கிட்டே பண்ணிட்டு, போற போக்குல கன்ட்ரி ப்ரூட்ன்னு கக்கிட்டு போனாப்ல வாட்டர் லெமன்.
ரம்யா: ஆமா அவன் கண்ட்ரி ப்ரூட்ன்னு எதோ சொல்லிட்டு போறான்? கன்ட்ரின்னா நாடு ப்ரூட்னா….என்னய நாட்டுக்கட்டைன்னு சொல்றானா?
அரோரா: உன் ஆங்கில அறிவுல தீய வைக்க, அதுக்கு அது அர்த்தமில்ல.
ரம்யா: பின்ன முட்டாளுன்னு சொல்றானா?
அரோரா: (மை.வா: உன்னய யாரா இருந்தாலும் அப்டித்தான் சொல்லுவானுங்க) ஆமா அந்த மாதிரிதான்
ரம்யா: இரு இந்தா வந்துடுறேன்….டேய் வாட்டர் லெமன். என்னய கண்ட்ரி ப்ரூட்னு ஏன் சொன்ன?
வாட்டர் லெமன்: நான் என்னயதான் சொல்லிக்கிட்டேன்…உனக்கு படிப்பறிவு இல்லாததால உனக்கு தெரியல
ரம்யா: அடிங்க…T for திருவிழா, K for கோவில், D for டான்ஸுடா என் டால்டா…எனக்கு படிக்கத் தெரியாதா? இருடா இன்னைக்கு உனக்கே உன்ன பிசியோதெரபி பாக்க வச்சுடுறேன்…
இதே ஹை ஸ்பீடுல ரம்யா எகுற, வாட்டர் லெமன் தொகுற…இடையில வந்த FJ க்கும் வாட்டர் லெமனுக்கும் கைகலப்பாகப் போக…ஒரு 10 நிமிஷம் ஓசில பொங்கல் வாங்கப் போன கூட்டம் மாதிரி கும்பலா கத்திட்டு இருந்தானுங்க. இதுல இருந்து தப்பிச்சு வாட்டர் லெமன் கக்கூஸ் கேமராகிட்ட வந்து “வெளிய மாதிரியே இங்கயும் ஊரே ஒண்ணு கூடி அடிக்கிறாய்ங்க. பார்வதிய தவிர. ஆனா நீங்க எதுக்கும் பயப்படாதீங்க என்னய கார்னர் பண்ரவனுங்கள வார்னர் மாதிரி விளாசித் தள்ளுறத வேடிக்கை மட்டும் பாருங்க”ன்னு பிக்கிக்கு ஆறுதல் சொல்லிட்டு போனாப்ல.
Super Deluxe house mates-க்கு லக்சூரி ஐட்டமா முட்டை குடுத்தாரு. அந்த இடத்துல வாட்டர் லெமன், சூன்ய பொம்ம, பாரு மூணு பேரும் பேசிட்டு இருந்தானுங்க. இதுல சூன்ய பொம்ம, “நம்ம மூணு பேரத் தவிர இங்க இருக்குறவனுங்க யாரையும் வெளிய உள்ளவனுங்களுக்கு தெரியாது. அதனால நம்மளத்தான் டார்கெட் பண்ணுவானுங்க”ன்னு ஸ்டார்டஜி சொல்லிட்டு இருந்தான். ஆனா இவன் உள்ள இருக்குறது உள்ள இருக்குறவனுங்களுக்கே தெரியலன்றதுதான் வேதனை.
சுபிக்ஷா பாருவ ஜாடிய தொடைக்க சொல்லி வேல வாங்கிட்டு இருந்தப்ப,
சுபிக்ஷா: இந்தாங்க இங்க கொஞ்சம் அழுக்கு இருக்கு …
பாரு: எங்க? என் கண்ணுக்கு தெரியலயே?
சுபிக்ஷா: கண்ணாடி போடாம இருக்கியே? நீ யார்கிட்ட பேசிட்டு இருக்கேன்னாவது தெரியுதா? இது எத்தனைன்னு சொல்லு பாப்போம்
பாரு: அடியே, யாருகிட்ட? பாருகிட்டயா? சர்வைவர் ஷோவயே சாணில முக்கி அடிச்சவ நான்…எங்கிட்ட இந்த ஜாடை பேசுற வேல வச்சுகிட்டா ஜாடியக்கொண்டி அடிச்சுப்புடுவேன் பாத்துக்க
அங்க இருந்து குடு குடுன்னு ஓடி வந்த சுபிக்ஷா அரோரா அண்ட் ரம்யா ரெண்டு பேரும் ஹாயா சுத்துறதப் பாத்துட்டு “அங்க என்ன பாரு பொரட்டிப் போடப் பாக்குறா…நீங்கல்லாம் நம்ம டீம்தானா? இல்ல அந்த டீமோட அண்டர்கவர் ஏஜெண்டா?”ன்னு கேட்டதும் அரோரா “பல்லு கைல வந்துரும், நீ உரண்டை இழுத்துட்டு அடி வாங்குனதும் இல்லாம எங்களையும் கோத்து விடப் பாக்குறியா?”ன்னு பத்தி விட்டுடுச்சு.
இந்த கேப்புல பாருவும், வாட்டர் லெமனும் ஒரு டீமா செட்டாகிட்டனுங்க. சுபிக்ஷா அண்ட் ரம்யாவ விஷப்பாம்புகள்ன்னு அபீஷியலா அறிவிச்சாங்க பாரு.
குடி தண்ணிய வச்சு குழம்பு வச்சதால விதிமுறை மீறப்பட்டதா அறிவிச்சாரு பிக்கி. சோ ரெண்டு டீம்ல இருந்தும் ஆளுக்கொருத்தரு டீம் மாறிக்கலாம். Super deluxe-ல இருந்து ரட்சகன கழட்டி விடப் பாத்தாய்ங்க…ஹேரிழையில தப்பிச்சாரு. துஷார் நார்மல் ஹவுசுக்கு போக, ஒரு மனதா தேர்ந்தெடுக்கப்பட்ட வியான்னா சூப்பர் டீலக்ஸுக்கு வந்தாங்க. வந்த கையோட இன்னைக்கு அந்தம்மாவுக்கு வாகா சிக்குன ப்ரவீன் கிட்ட மறுபடியும் பஞ்சாயத்துக்கு போச்சு. இந்த பஞ்சாயத்துல நமக்கு தெரிஞ்ச ஒரு விஷயம், வியான்னா இந்த காலத்தின் ஹா ஹா ஹாசினி…அதாவது பயித்தியம்.
இவனுங்க கதை சொல்ற காண்டத்துக்கு வந்துட்டானுங்க. தினமும் 3 பேரு அவனுங்க கதைய சொல்லனுமாம். நல்லா கதை சொன்ன 3 பேருக்கு நாமிநேஷன் ஃப்ரீ பாஸ் கிடைக்குமாம்.
நந்தினி: ஆரம்பின்னு சொல்றதுக்கு முன்னாடியே அழ ஆரம்பிச்சது. இனி ஒரு வேள தண்ணி பிரச்சனை வந்தா நந்தினிய கத சொல்ல சொல்லி குடத்தோட உக்காந்தா 25 லிட்டர் கண்ணீர் கிடைக்கும் அத காய்ச்சி வீட்டு வேலைகளுக்கு பயன் படுத்தலாம்.
கெமி: நல்லா உக்காந்து ஸ்க்ரிப்ட் பண்ணி ஒரு டயாக் ரைட்டரையே மிஞ்சுற அளவுக்கு செம்மயா வசனம் எழுதி இருந்தாங்க. “பாதையில முள் இருந்தா செருப்பு போடலாம், செருப்பே முள் செருப்பா இருந்தா?” காதல்ல தோத்தவனுக்கு வாழ்க்க கை தரும்ன்னு சொல்லுவாங்க, அதானால வாழ்க்கையில தோத்தவனுக்கு காதல் கை தரும்னு நம்புனேன்” இதெல்லம் பட்டாசு வசனங்கள்.
வாட்டர் லெமன்: கண்டிப்பா எடிட் பண்ணிடானுங்கன்னு நெனைக்கிறேன். மறுபடியும் தான் ஒரு மாகா நடிகன்னு அவர அவரே ஏமாத்திட்டு இருந்தாப்ல. இன்னும் சிங்கிளா இருக்குறது மட்டுமே பெரிய கவலைன்னு சொன்னாப்ல.
3 கதையும் ரொம்பவே சுமார்.
பேம்போது தான் ஒரு சாதாரண யூ ட்யூபர்லாம் கிடையாதுன்னு ஒரு வார்த்தைய சொன்னப்ல வாட்டர் லெமன். இத விக்ரம் வந்து யூ ட்யூபர்னா ஒண்ணும் கேவலம் கிடையாதுன்னு மோட்டிவேட் பண்ண பாத்தான்…அவன டீமோட்டிவேட் பண்ணி அனுப்பிட்டாப்ல வாட்டர் லெமன். இத புரிய வைக்க வந்த சபரிய லெஃப்ட் ஹாண்ட்ல டீல் பண்ணி அனுப்பி விட்டாப்ல. இவனுங்க போக்கு எப்டின்னு அடுத்த எப்பிசோட்ல பாக்கலாம்.
1 comment