இதழ்கள்

தமிழே! அமிழ்தே! – 6

This entry is part 8 of 25 in the series தமிழே அமிழ்தே

இன்னும் சில சிலேடைகள். கவிஞர்களின் தனிச்சிறப்புகளுள் ஒன்று உடனடி மொழித் திறனும் இரட்டுற மொழிதலும். 24-ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு மன்னராக வருவார். அவரை வாழ்த்த வரும் புலவர் ஒருவர் அவரைப் பார்த்து “அண்டங் காக்கையே” என்று இரட்டுற மொழிவார். மிகவும்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 15

பொருளாதாரக் கொள்கை பற்றி நான் நண்பர்களிடத்தில் பேசும் பொழுதெல்லாம், அவை ஏதோ நவீன காலச் சிந்தனைப் போக்கின் வெளிப்பாடு என்றும், தகவல் பரிமாற்றம் மற்றும் அச்சகத்துறை, அது சார்ந்த இயந்திரங்களின் வளர்ச்சியால் விளைந்த ஒன்று என்றும்தான் அவர்கள் சொல்வார்கள். அவர்களுக்கு, ‘மனிதர்கள்…

Read more

சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 1-முன்னுரை

This entry is part 1 of 12 in the series பயணக்கட்டுரைத் தொடர்

பயணங்கள் செய்வதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? புது ஊர், புதிய இடங்கள் பார்ப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை விட, ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து சிறிது காலத்திற்காவது விடுபட்டுப் போகும் ஆனந்தமே பல நடுத்தரக் குடும்பப் பெண்களுக்கு, அந்தப் பயணங்களை ஆவலோடு எதிர்நோக்க வைக்கும். ஆனால்,…

Read more

தமிழே அமிழ்தே – 5

This entry is part 5 of 25 in the series தமிழே அமிழ்தே

சொல் விளையாட்டு! நட்பிற் சிறந்த அரசர் ஒருவரும் நற்றமிழ்ப் புலவர் ஒருவரும் காலார நடந்தனர். புலவர் மன்னருக்குக் குடை பிடித்தார். அதை விரும்பாத மன்னர் அக்குடையைப் பெற்று, கற்றறிந்த புலவருக்கு அரசனாகிய தானே குடை பிடிக்க விரும்புவதாகச் சொன்னார். உடனே புலவர்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 14

சென்ற அத்தியாயத்தில் கூறிய கிறிஸ்தவ சமய வணிகத் தொடர்பு உதாரணத்தைப் போல், இந்து சமயத்தில் காட்டலாமெனப் பார்த்தால், அத்தகைய செய்திகளைச் சொல்லும் கல்வெட்டுகளோ, செப்புப் பட்டயங்களோ நம்மிடத்தில் இல்லை. கல்வெட்டுகள் எல்லாம் கோயிலில் இருந்து கிடைக்கப்பெற்றவைகளாக இருக்கின்றன. அக்காலத்தில் கோயிலில் கல்வெட்டுகளில்…

Read more

அசுரவதம்: 19 – பறக்கும் அதிசயம்.

This entry is part 19 of 54 in the series அசுரவதம்

​பஞ்சவடியின் ஆகாயம் அன்று ஏனோ ஒரு விசித்திரமான கோலத்தைக் கொண்டிருந்தது. மேற்கே சாயத் தொடங்கியிருந்த கதிரவன், தன் பொற்கரங்களால் மேகங்களைத் தழுவிக்கொண்டிருந்தாலும், அந்த வானம் தங்க முலாம் பூசியதாகத் தோன்றவில்லை. மாறாக, போர்க்களத்தில் சிந்த இருக்கும் வீரர்களின் உதிரத்தை அள்ளித் தெளித்தது…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 7 – மொழியாக்கம்

முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஒரு பணக்கார எலிக்குடும்பம் இருந்தது. அப்பா எலி, அம்மா எலி, மகள் எலி என மூன்று எலிகளைக் கொண்டது அந்தக் குடும்பம். மகள் எலி மிகவும் அழகானது, நல்ல குணங்கள் கொண்டது. அப்பா எலியும் அம்மா எலியும்…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 1 – மொழியாக்கம்

தெலுங்கு மூலக்கதை : டாக்டர். எம். ஹரிகிஷன் குள்ளன் ஒரு ஊரில் ஒரு கிழவி இருந்தாள். அந்தக் கிழவி தினமும் காலையிலே வீட்டு முற்றத்தைச் சுத்தமாகப் பெருக்கிச் சாணம் தெளித்து அழகாகக் கோலம் இடுவாள். ஒருநாள் வீட்டு முற்றத்தில் பெருக்கிக் கொண்டிருந்தபோது,…

Read more

பரிசோதனை

ஆச்சரியமாகத் தான் இருந்தது. ஒரு புறம் பச்சைப் பசேல் மற்றும் செம்பழுப்புப் புதர்கள், மறுபுறம் சரேலெனக் கொஞ்சம் கொஞ்சமாய் உயர்ந்து இருக்கும் மலை, அதிலும் ஆங்காங்கே பச்சைச் செடிகள், இடையில் கொஞ்சம் கண்விழித்துப் பார்க்கும் பாறைகள். நடுவில் செம்மண் சாலை. ஒரு…

Read more

நல்லாச்சி – 18

This entry is part 18 of 41 in the series நல்லாச்சி

கண்புரை ஏற்பட்டிருக்கிறதாம் நல்லாச்சிக்குஅறுவை சிகிச்சைக்குப் பயப்படுகிறாள் அவள்தைரியம் சொல்பவர் சிலர்அதன் பெயரால்அதைரியப்படுத்துபவர் இன்னும் சிலர் தொடச்சுப்போட்ட டியூப்லைட் மாதிரிபளீர்ன்னு தெரியும் ஒலகம்அழகுபோல சீரியல் பாக்கலாம்எனத்தெம்பூட்டுகிறாள்சிகிச்சையால் பலன் பெற்ற செல்லாச்சிநப்பாசையால் சம்மதிக்கிறாள் நல்லாச்சிமுற்றத்து வெயில் முகத்தில் படாதுவெக்கை அணுகாதுஅருகிலிருந்து பேத்தி பேச்சுத்துணையாகஅந்தப்புரத்து ராணி…

Read more