பண்புடன் இணைய குழுமம் என்பது தமிழை நேசிக்கும் தமிழர்களுக்கான குழுமம். ‘மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்’ என்ற வள்ளுவனின் வரிகளின் ஆதாரத்தில் தமிழர்களுக்கிடையில் மானுட நேயம் பரப்பி தமிழர்களை ஒருங்கிணைக்கும் தமிழ்க்குழுமம். பண்புடன் இதழ் பண்புடன் இணைய குழுமத்தின் நீட்சி.
தண்டகாரண்யத்தின் பஞ்சவடியிலிருந்து சற்று விலகி, கோதாவரி நதியின் கரையில், காமவள்ளி மற்றும் வித்யுத்ஜிவா தங்கள் காதலின் அமைதியான உலகில் மூழ்கியிருந்தனர். வனத்தின் மரங்கள், பறவைகளின் கீதங்களுடன் இலைகளை அசைத்து, அவர்களின் மகிழ்ச்சியை ஆசிர்வதித்தன. வித்யுத்ஜிவா, காமவள்ளியை மென்மையாக அணைத்து, அவளது வயிற்றைத்…
போலி சிலையை கோவிலுக்குள் வைக்கும் முன் நன்றாக சுத்தப்படுத்துங்கள் என்கிறார் நாயர் நம்பூதிரியிடம். இசுலாமியன் தொட்டு விட்டானாம் 🙂 போலவே, நாயரை ஓரம் கட்டி விட்டு அந்த முஸ்லிம் நம்பூதிரியிடம் நேரடியாக சிலையை வாங்கச் செல்லும்போது சுத்தபத்தமாக தேவி சிலையை ஒப்படைக்கிறார் நம்பூதிரி. ‘நாலாம் மதக்காரன்’ தொட்டால் ‘அயித்தம்’ ( தீண்டாமை) அல்லவா?
இதில் எனது பார்வை என்பது அறிவியல்பூர்வமானதாகவும் இயன்ற அளவு ஒரு சார்பற்ற தன்மையுடையதாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன். நாய்களின் கோணத்தில் இருந்தும் மனிதர்களின் கோணத்தில் இருந்தும் இந்தப் பிரச்சனையை அணுகுவது சிறந்த முறையாகப்பட்டது. நாய்கள் குறிப்பாக தெருநாய்கள் சார்பாக நான் வழக்காட…
அந்நாளைய அரபு சமூகம் அடிமைத்தனம், பெண்களிடம் அவமதிப்பு, இன-இனம் பிரிவினை, வன்முறை, மது, சூதாட்டம் போன்ற அநீதிகளால் நிரம்பியிருந்தது. ‘கஅபா’ என்றழைக்கப்படும் இறைஇல்லத்தில் நூற்றுக்கணக்கான சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அநீதியும், அடக்குமுறைகளும், ஆதிக்க மனப்பான்மையும், சாதீய அடிமைத்தனங்களும் நிறைந்திருந்த சூழலில் பிறந்தார் அல்-அமீன் – நம்பிக்கையின் மனிதர் என்று மக்காவாசிகளால் அன்புடன் அழைக்கப்பட்ட முகம்மது நபியவர்கள்
நாட்டு நாய்கள் தெரு நாய்களான பிறகு அவைகளுக்கு உணவாக கிடைத்தவை எல்லாம் வீட்டுகளில் போட படும் மிச்சமான உணவு மற்றும் குப்பைகள் தொட்டிகள் கிடைக்கும் குப்பையாக போட படும் உணவு பண்டங்கள் தான். அதனால் தான் அவை கிடைக்கும் இடங்களில் தெரு நாய்கள் கூட்டமாக இருக்கிறது.
நல்ல கஜல் வரிகள் கிடைத்தால் போதும், உம்ராவ் அதை முணுமுணுத்துக்கொண்டே நிலையில் சாய்ந்திருந்து சுட்டு விரலில் என்னைச் சுற்றிச்சுற்றி அவிழ்ப்பாள். பம்பரத்தில் சாட்டையைச் சுற்றுவதுபோல் அடுக்கடுக்கான வரிகளாக இல்லாமல் கோணல்மாணலாக இருந்தாலும் அழகாக இருப்பேன், சுற்றப்படுவது அவள் விரலில் அல்லவா. கடைசிச் சுற்றில் நான் நிற்கும்போது சுட்டுவிரலின் நுனியைப் பார்ப்பேன், சிவந்து போயிருக்கும், அவளுக்குத் தெரியாமல் லேசாக வருடிக்கொடுத்துவிடுவேன். மருதாணிச் சிவப்பும் இரத்தம் கன்றிய சிவப்புமாக ரோஜாவையே தோற்கடிக்கும் நிறத்தில் அப்பப்பா விரல்களா அவை.
ஒரு குழந்தை கடந்த ஐந்து வருடங்களாக என்னுடைய கதைகளைப் படித்து அவ்வப்போது உரையாடி வருகின்றாள். இந்த கொரோணோ காலத்திற்கு இடையில் சந்தித்தபோது லாக்டவுன் நாட்களில் ஆங்கில நூல்களைத் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்துவிட்டாள் என்று அவளுடைய பெற்றோர் மகிழ்ந்தனர். “அடுத்த என்ன தமிழ் புத்தகத்தினை வாசிக்க இருக்கின்றாய்? என்ன என்ன வாங்கத் திட்டம்?” என்று கண்காட்சியில் கேட்டேன். தமிழில் இனி வாசிக்கும் எண்ணமே இல்லை என்றார்.
ஒருவரை ஆபாசமாகத் திட்டுவது கோழைத்தனத்தைக் காட்டுகிறது. இதுவே வீரம் என்று நினைப்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்: தற்போது சைபர் கிரைம் பிரிவு வலுப்பெற்றுள்ளது. நீங்கள் செய்யும் அனைத்துச் செயல்களையும் எளிதாகக் கண்டறிய முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்பதே நம் கடமை. அதுவே அறம்.
மகாபலி அரசனின் கதையின்றி திருவோணத்தைச் சொல்ல முடியாது. உலகையே தானம் செய்ய முனைந்த அவனது உள்ளம், “தர்மம்” எனும் சொல்லின் உயிர்மெய்யாக விளங்கியது. வாமனன் வந்தபோது, மூன்று அடிகள் நிலம் கேட்டார். இரண்டு அடியில் பூமியும் விண்ணும் அளந்ததும், மூன்றாவது அடியை வைக்க மகாபலி தன் தலையைத் தாழ்த்தினான்.
இறைவன் காலடியில் பணிந்த மகாபலி – “தியாகம்” என்ற சொல்லின் சிலையாக என்றும் நிலைத்தான். அவனது தாராள உள்ளத்தால் ஈர்க்கப்பட்டு, ஆண்டுதோறும் திருவோண நாளில் மக்களைக் காண வருகிறான் எனும் நம்பிக்கை இன்றளவும் வாழ்கின்றது.