இதழ் – 3

பண்புடன் இணைய குழுமம் என்பது தமிழை நேசிக்கும் தமிழர்களுக்கான குழுமம். ‘மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்’ என்ற வள்ளுவனின் வரிகளின் ஆதாரத்தில் தமிழர்களுக்கிடையில் மானுட நேயம் பரப்பி தமிழர்களை ஒருங்கிணைக்கும் தமிழ்க்குழுமம். பண்புடன் இதழ் பண்புடன் இணைய குழுமத்தின் நீட்சி.

வரலாற்றில் பொருளாதாரம்:- 5

இதுவரைக்கும் பண்டமாற்று முறை பற்றியும் நாணயங்கள் தோன்றியதின் அவசியத்தை பற்றியும் சொல்லி இருந்தேன். நாணயங்கள் எப்படி ஒரு மனித சமூகத்தை ஒவ்வொரு நிலையாய் முன்னேற்றி கொண்டு சென்றது என்பதை பற்றி இனி சொல்லப் போகிறேன். அதற்கு முன்பு மனிதர்கள் எப்படி கூட்டமாக…

Read more

சஞ்சாரம் – யாழினி சென்ஷி

பள்ளத்தில் மீந்திருந்த
மழை நீரில்
மரணத்தைத் துழாவிக்கொண்டிருக்கின்றது
இரு மீன்கள்.
இலையோடு
உதிர்ந்த நிழலையும்
உள்வாங்கிய நீர்
மெல்ல வற்றியதும்
இலைகள் சிறகாகி
பறக்கத்தொடங்கியது
மீன்கள்

Read more

ஆவன்னா -ருனா -நிர்மல வதனா -2

ஆல விழுதாக அஞ்சுபத்து பெத்துபுட்டு
..அழகா வாழ்வேன்னு நினச்சேனே எங்கண்ணே
காலம் ஏன்வந்து சுழன்றடிச்சுக் கன்னியுனை
…காத்தில் ஒளிச்சுடுச்சே தெரியலையே என்கண்ணே

Read more

நல்லாச்சி -8

This entry is part 7 of 12 in the series நல்லாச்சி

கைபேசியில் தற்படமெடுக்ககற்றுக்கொண்டுவிட்டாளாம் பேத்திகால் பாவாமல் தாவிக்கொண்டேயிருக்கிறாள் பூக்களின் பின்னணியில் ஒன்றுபூவுடன் முகம் பொருத்தி ஒன்றுகன்றுக்குட்டியுடன் கன்னமிழைத்து இன்னொன்றுகலர் கோழிக்குஞ்சைதலையிலமர்த்தி மற்றொன்றெனகைபேசியின் மூளையைபடங்களால் நிரப்பிக்கொண்டேயிருக்கிறாள். சாக்கு சொல்லி தப்பித்துக்கொண்டிருந்ததாத்தாவைக்கூடசெய்தித்தாள் வாசிக்கும்அசந்த நேரத்தில்காலையொளியின் பின்னணியில் படமெடுத்தாயிற்று ‘எல.. போட்டோ புடிச்சா ஆயுசு கொறையும்’என நழுவிக்கொண்டிருக்கும்நல்லாச்சிக்கும்ஆசை…

Read more

கொங்கு வட்டார வழக்கு -7: சொலோர்னு

This entry is part 4 of 11 in the series கொங்கு வட்டார வழக்கு

சொலோர்னு. மரகதத்தை ஊட்லதான் நாங்க சிறுசுக(கொழந்தைங்க) அத்தன பேரு ஒன்னா வளந்தோம்.ஓரியாட்டம் ( சண்டை) போட்டுகிட்டு,அத்தன குஷியா போகும் லீவு நாளெல்லாம்.மாமாக்கு ஒடம்பு சரியில்லாம போனதுல அங்க சூழல் மாறி,யாருமே அங்க வர்றதில்ல இப்ப.ஊடே சொலோர்னு (வெறுமையா)கெடக்குது இப்ப. ஊட்ல சிறுசுக…

Read more

உமா ஷக்தி கவிதைகள்

உள்ளுக்குள் ஓர் வலி

நெடு நெடுவென வளர்ந்தபடி இருக்க

வெகு அருகாமையில் சந்தித்த விழிகள்

கூர்மையுடன் உயிர் கிழிக்கிறது

Read more