கவிதை

நல்லாச்சி – 22

This entry is part 22 of 39 in the series நல்லாச்சி

சாப்பிடுவதற்குசெரை படுத்தாத பேத்திஏனோசில பொழுதுகளில் சுணங்குவதுண்டு‘காத்தாட சாப்பிடுதேன்’ என்றபடிகிணற்றடிக்குத் தட்டுடன் செல்பவள்துலக்கி மினுக்கி மீள்வாள்அம்மட்டில் திருப்தியுற்ற நல்லாச்சிகண்டுகொள்ளாதிருக்கிறாள் சின்னவளை ‘காத்தாட’ தனித்துண்ணும் பொழுதுகள்சந்தேகத்தை விதைக்கின்றனஅன்னையின் மனதில்செல்லப்பேத்தியைச் சொல்லுக்கு ஆளாக்கினால்ஆச்சி வீசுவாள் கண்டனக்கணையைஅகிலமே ஆச்சிக்கு அஞ்சும்போதுஅன்னை எம்மாத்திரம்எனினும்புகையை ஒளிக்க இயலுமோ!! கரையவிட்ட தோசைகள்…

Read more

திருவை கவிதைகள்

1. ‎சும்மா கிறுக்குகிறேன் என்பாள்‎கிறுக்கி கிறுக்கிக் கிழித்தாள்‎அந்தப் பக்கம் களர்நிலம் போன்றது என்பாள்‎படுபயங்கரமான விளைச்சல் உள்ள களர்நிலம்‎எல்லா இரகசியமும் ஒளிந்த பக்கம்‎யாவருக்கும் கிறுக்கல்களின் குவியல்‎தனக்கே அது உரித்தான பக்கங்களாய்‎ஒவ்வொரு நோட்டுகளும்‎தாங்கும் அப்பக்கங்களின் சுமை அதிகம்‎அவை தனித்தே இருப்பவை‎அடையாளங்களோடு… ‎*********************************************************2.பழுதாகும் பொழுதுகளில் எல்லாம்…

Read more

நல்லாச்சி – 21

This entry is part 21 of 39 in the series நல்லாச்சி

விதைத்த சோளக்காடு அறுவடைக்கு நிற்கிறதுதளவாடங்களுடன் கிளம்புகிறது குடும்பம்கோணிகளோடு நல்லாச்சியும்சிறு பையுடன் பேத்தியும் தொடர்கின்றனர் கும்பிட்டு அறுத்தமுதல் கதிரே சாவியாய் இருக்கஅடுத்தடுத்த கதிர்களும் அப்படியேபோனால் போகிறதெனஒன்றிரண்டு சோளமுத்துகளைச் சுமந்துவெறுஞ்சிப்பியாய் பிளந்திருக்கின்றன மீதமுள்ளவைபறவைகள் பாதி நாம் மீதியெனபிரிக்கத்தேவையின்றிகாலிப்பாத்திரத்தை வைத்திருக்கிறாள் மண்மாதாமலைத்து நிற்கின்றனர் மற்றவர்பரிகசிக்கிறாள் பேத்தி…

Read more

அணுவினுள் ஆழ்கடல் வள்ளுவம்

வள்ளுவன் தந்த பொதுமறைபிறவிக் கடல் நீந்தப் பொற்கலம்!ஈராயிரங் கால நீதிநூல்வாழ்வியல் செறிவாக்கிடும் நற்பாடம்!முப்பாலின் முத்தான பாக்கள்பண்பு நெறியூட்டும் நல்லுரம்! அன்பும், அறமும், கல்வியும்,அரசு முறையும், குடி கடமையும்பாங்கே படிப்பிக்கும் போதிமரம்!அருளும், நட்பும், இன்சொல்லும்இன்பமும், இல்லறமும், காதலும்சேர்ந்தே பொதிந்துள்ள நித்திலம் ! அல்லவை,…

Read more

பேசும் வானம் [11 குறுங்கவிதைகள்]

​1. இருள் தளரநீலத்தில் தேயும் விண்மீன்கள்விரியும் காலை! 2. வெண்மேகம் விலகஒளி சிந்தும் சூரியன்பேசும் பகல்! 3. மேக நிழல்கள்மண்ணில் வரையும் சித்திரங்கள்வானமெனும் குழந்தை! 4. வானம் திறக்கஇலைகளைத் தொடும் வெயில்மென்மையான வாழ்வு! 5. மலை மேல் சூரியன்குருவியின் குரல் கரையமறையும்…

Read more

நல்லாச்சி – 20

This entry is part 20 of 39 in the series நல்லாச்சி

தொலைத்த இடத்தில்தான் தேடணும்என்கிறாள் நல்லாச்சிதினமும் ஏதேனுமொன்றைத்தொலைக்கும் பேத்தியிடம்அவள்எங்கோ தொலைத்ததையெல்லாம் கண்டுபிடிக்கும்மந்திரக்கோலன்றோ நல்லாச்சிஎனினும்அல்லல் அதிகமானால் அலுத்தும்கொள்வாள் பொருட்களைத்தொலைத்தே பழக்கப்பட்ட பேத்திஒருநாளில்நல்லதோர் நட்பையும் தொலைக்கிறாள்பிரிவென்ற பெயரில்;அவ்வன்பை எங்கே தேடுவதெனக் குழம்புகிறாள்பெற்றோரின் அன்போஉற்றாரின் அன்போஇன்னபிற களித்தோழரின் அன்போஇணைவைக்க இயலாமல் தத்தளிக்கின்றனதூக்கமின்றி ஏக்கத்தில் மெலிகிறாள் பேத்திமாற்றமொன்றே மருந்தாகும்…

Read more

அறிவே அனைத்துமாக

விரையும் காலத்தின் ஓட்டத்தில்விரும்பும் தேவைகளும் அதிகரிக்ககற்கும் கல்வியின் நோக்கத்தால்கருத்தினில் கூடிடும் மாற்றங்கள். கல்வியின் முறைகள் மாறிடவேகற்பிக்கும் திறன்களில்கலந்திடும் புதுமைகள். புதுமைகளின் வரவால்கூடிடும் கவனத்தில்படிப்பின் புரிதல் உயர்ந்திடுமே. புரிதல் காட்டும் பாதையிலேசெயலின் தாக்கம் நீண்டிடுமே.செய்முறை காணும் களத்தினிலேபடைப்பவர் வாழ்வியல் வளர்ந்திடுமே. படைப்பும் பண்பும்…

Read more

அவன் வராமல் போன அன்று..

அந்தக் கடற்கரைசாலையின் மதிய வெயில்இதமாய்க் குளிர்ந்ததுஅலைபேசி அழைப்புகளைநிராகரித்த அவனுடையஅவசர வேலையை சபிக்கிறேன்ஆயினும்இத்தனை கருணையாய்இத்தனைத் தனிமையாய்ஒரு சுதந்திர தினத்தைஇன்று அவன் எனக்காக பரிசளித்துள்ளான்ஆனால்ஒருவர் பரிசளிப்பதுதான் சுதந்திரமெனில்என்னிடம் இருப்பது என்ன?இப்படி எல்லாம் எண்ணங்கள்அலைமோதிக் கொண்டிருக்கையில்அந்தக் கடல் காகங்கள்ஒவ்வொரு முறையும்நீரில் மூழ்கிமீனைக் கொத்திச் செல்கின்றன.

Read more

நல்லாச்சி – 19

This entry is part 19 of 39 in the series நல்லாச்சி

விருந்தொன்று வந்திருக்கிறதுநல்லாச்சி வீட்டுக்குஅன்புமிக்கதுதான் அந்நெஞ்சமும்எனினும்இருண்டதும்பேத்தியின் மேல் அன்புசற்றே வறண்டதும் கூட வந்த நாள் முதல்அதன் அட்டகாசங்களையெல்லாம் சகிக்கின்றனர்உறவின் பெயரால்தலைமேல் தாங்குகின்றனர்அன்பின் பெயரால்;பேத்தியின் நனையும் கண்களையும்வெதும்பும் நெஞ்சத்தையும்மரியாதை நிமித்தம் வாளாவிருப்பதையும்கண்ணுறாதவளல்ல நல்லாச்சிவந்த உறவின் மனக்காயம் புரியாதவளுமல்ல எல்லை மீறிய ஓர் நாளில்அருகிருத்தி உரைக்கிறாள்…

Read more

நல்லாச்சி – 18

This entry is part 18 of 39 in the series நல்லாச்சி

கண்புரை ஏற்பட்டிருக்கிறதாம் நல்லாச்சிக்குஅறுவை சிகிச்சைக்குப் பயப்படுகிறாள் அவள்தைரியம் சொல்பவர் சிலர்அதன் பெயரால்அதைரியப்படுத்துபவர் இன்னும் சிலர் தொடச்சுப்போட்ட டியூப்லைட் மாதிரிபளீர்ன்னு தெரியும் ஒலகம்அழகுபோல சீரியல் பாக்கலாம்எனத்தெம்பூட்டுகிறாள்சிகிச்சையால் பலன் பெற்ற செல்லாச்சிநப்பாசையால் சம்மதிக்கிறாள் நல்லாச்சிமுற்றத்து வெயில் முகத்தில் படாதுவெக்கை அணுகாதுஅருகிலிருந்து பேத்தி பேச்சுத்துணையாகஅந்தப்புரத்து ராணி…

Read more