- குறுக்காட்றது.. கொங்கு வட்டார வழக்கு -4
- அரக்கியுடறது.. கொங்கு வட்டார வழக்கு -3
- கூடப்போடறது.. கொங்கு வட்டார வழக்கு -2
- சீராட்டு: – கொங்கு வட்டார வழக்கு – 3
குறுக்காட்றது
முத்தக்கா..
முத்தக்கோவ்…
எதுக்கு ,இந்த முக்கு முக்கற,யாரு செவுடா கெடக்கறாங்கனு..
மாமனுமு,சித்தப்பனுமு சரியான சண்ட,மேவரத்துக்காட்ல,அதாஞ் சொல்லலானு ஒடியாந்த..
எளவெடுத்த பள்ளிக்கிருவிக்கி,என்ன போங்காலம் வருமோ தெரில,நாள் நாளைக்கு ஒருக்கா ஏடு எடுத்துக்கறானுவ.
போய்,குறுக்காட்டுவனு( தடுத்து நிறுத்துவது) வந்து சொன்னா,நீ இங்க நின்னு வார்த்த
பேசி என்னாவப்போவுது.
அங்க போய் குறுக்காட்டியுடு போ..
அவனுககோட எந்த முண்ட பேசுவா..எக்கேடோ கெட்டுத் தொலையறானுவ.
நாம் போவுல போ.
என்னமோ பண்ணு..☺