புலம் பெயர்ந்தவர்களின் தீபாவளிக் கொண்டாட்டம்

தீபாவளி உலகெங்கும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப் படுகிறது. எங்கிருந்தாலும் தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தை மறப்பதில்லை. நான் தற்சமயம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன். தீபாவளி வேலை நாளில் வருவதால் வீட்டில் புதுத்துணி உடுத்தவோ மகிழ்ச்சியாகக் கொண்டாடவோ இயலாததால் அந்த வார இறுதியில் விடுமுறை நாளில் கொண்டாடுகின்றனர்.

அந்தக் காலத்தில் கூட்டுக்குடும்பமாகக் கொண்டாடியதைப் போல், தங்களுக்குள் ஒருவர் வீட்டில் அனைவரும் புதுத்துணி உடுத்திச் சென்று, பலகாரங்கள் உண்டு மகிழ்ச்சியாகக் கூடிக் கொண்டாடுகின்றனர். மற்ற எல்லாப் பண்டிகைகளும் இப்படித்தான் கொண்டாடுகின்றனர். ஆண்டாள் திருப்பாவை 27 வது பாசுரத்தில் ‘கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்’ என்று பாடியது போல் அனைவரும் ஒன்றாக இணைந்து, பண்டிகைகளைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

அவரவர் வீட்டிலிருந்து செய்து கொண்டு வந்த உணவுகளைப் பகிர்ந்து உண்டு மகிழ்கின்றனர். வண்ண மத்தாப்புகளை மட்டும் உபயோகிக்கலாம், மற்ற எதுவும் இங்கே கிடையாது. ஆகவே, மத்தாப்புகளைக் கொளுத்தி மகிழ்கின்றனர். இது அனைவரும் ஊரிலிருந்து கொண்டாடும் உணர்வைத் தருகிறது.

இங்குள்ள தமிழ்ச் சங்கமும் தீபாவளியை மற்றொரு நாளில் கொண்டாடுகின்றனர். தமிழ்ச் சங்கம் தமிழ்ப் பள்ளி நடத்துகிறது. அதில் மாணவர்களுக்கு வாரத்தின் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் தமிழ் சொல்லிக் கொடுக்கின்றனர். நம்முடைய கலாச்சாரம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

எங்கிருந்தாலும் ‘தமிழ்’ என்ற மூன்றெழுத்து அனைவரையும் ஒருங்கிணைக்கிறது.

Author

Related posts

நாள்: 20

நாள்: 19

வழி நடத்தும் நிழல்கள்