Series%WP_TITLE_SEP%அசுரவதம்

This entry is part 1 of 12 in the series அசுரவதம்

அசுரவதம் – இராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரமான சூர்ப்பணகையின் பார்வையில் செல்லும் கதை.

அசுரவதம் -1 முதல் சந்திப்பு

This entry is part 1 of 12 in the series அசுரவதம்

காமவள்ளி. இவளை இந்தப் பெயரால் அறிந்தவர்கள் குறைவு. அவள் நகரில் அவளின் மீனைப் போன்று  அழகிய கண்களைக் கண்டு  பெண்களும் அவளை மீனாக்ஷி என்றே  அவர்கள்  அழைப்பதுண்டு.  

அந்த இளங்காலைப் பொழுதில் பகலவனின் பொன்னிற ஒளி கோதாவரியை தங்கமென அடித்து வைத்தது.  சூரியன் அவளை தன் கிரணங்களால் தழுவிடக் கண்டவர்களால்  அவளின் அழகையும்  கோதாவரி நதியின் அழகையும் ஒப்பிட்டு எந்த அழகு சிறந்தது என்று கூறிட முடியாமல் திகைத்து  நிற்பர்.

Read more

அசுரவதம் : 2 – காலகேய தானவன்.

This entry is part 2 of 12 in the series அசுரவதம்

காமவள்ளி தன் எச்சரிக்கையை மீறி தன்னை நோக்கி வருவதைக் கண்ட அந்த இளைஞன் சட்டென்று தன் இடையில் இருந்த அந்தக் குறுவாளை எடுத்து அவளை நோக்கி வெகு  வேகமாக வீசினான்.    அந்நேரத்தில் ஒரு பெரிய  ஆண் சிங்கம் காமவள்ளியின் பக்கவாட்டில்…

Read more

அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன்

This entry is part 3 of 12 in the series அசுரவதம்

3- வேள்வியின் நாயகன். அந்த முனிவர் வேக வேகமாய் நடக்க, ஆரம்பத்தில் தடுமாறினாலும் இரு இளைஞர்களும் அவரின் வேகத்துக்கு ஈடு கொடுத்து நடக்க ஆரம்பித்தனர். ” குருவே, தங்களின் ஆசிரமம் இன்னும் எவ்வளவு தூரம் ” என்றான் இராமன். முனிவர் சிரித்துக்…

Read more

அசுரவதம் : 4 – மாயமான மாரீசன்

This entry is part 4 of 12 in the series அசுரவதம்

கௌசிக முனிவரின் ஆசிரமத்தில் வேள்வி ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. ஆனால், இலக்குவனின் மனம் அமைதியற்று இருந்தது. தாடகையை இராமன் வீழ்த்தியது அவனுக்கு மகிழ்ச்சி தந்தாலும், மற்றொரு பக்கம் அவன் மனதில் ஒரு புரியாத அச்சம் தோன்றியிருந்தது. “அண்ணா,” என்று இலக்குவன்…

Read more

அசுரவதம் 6: – முந்திச் செல்லும் விதி

This entry is part 6 of 12 in the series அசுரவதம்

இராவணனின் மனம், அவமானத்தினால் உண்டான தீயில் எரிந்து கொண்டிருந்தது. தசாணனன், பத்துத் தலையுடையவன், அரக்கர்களுக்கெல்லாம் மன்னன், உலகை ஆளும் பேராண்மையின் உருவம், ஆனால் அவன் இதயம் இன்று அமைதியை இழந்திருந்தது. மிதிலையின் அரசன் ஜனகன், சானகியின் சுயம்வரத்துக்கு உலகின் எல்லா மன்னர்களையும்…

Read more

அசுரவதம் -7: வழிநடத்தும் வல்வினை

This entry is part 7 of 12 in the series அசுரவதம்

” உன் பிரிவையும் விட அதிகமாய் சுட்டுவிடுமா அந்தக் காடு? என் தந்தை தவறு செய்துவிட்டார், உன்னை ஆண்மகன் என்று நினைத்தல்லவா என்னை உனக்கு மணமுடித்தார். தன் மனைவியைக் காப்பாற்ற இயலாத கோழை என்று அவர் அறிந்திருக்கவில்லை. ” என்றெல்லாம் பலவாறாக அவள் இராமனைத் தூண்டினாள்.

Read more

அசுரவதம்:- 8 – வீழ்ந்தக் காதல்.

This entry is part 8 of 12 in the series அசுரவதம்

தண்டகாரண்யத்தின் பஞ்சவடியிலிருந்து சற்று விலகி, கோதாவரி நதியின் கரையில், காமவள்ளி மற்றும் வித்யுத்ஜிவா தங்கள் காதலின் அமைதியான உலகில் மூழ்கியிருந்தனர். வனத்தின் மரங்கள், பறவைகளின் கீதங்களுடன் இலைகளை அசைத்து, அவர்களின் மகிழ்ச்சியை ஆசிர்வதித்தன. வித்யுத்ஜிவா, காமவள்ளியை மென்மையாக அணைத்து, அவளது வயிற்றைத்…

Read more

அசுரவதம் : 9 – வஞ்சின வஞ்சி.

This entry is part 9 of 12 in the series அசுரவதம்

தண்டகாரண்யத்தின் அடர்ந்த காடு, நிலவொளியில் குளித்து, ஒரு அசாத்தியமான மௌனத்தில் உறைந்திருந்தது. ​கோதாவரி நதியின் அலைகள், பௌர்ணமி நிலவின் ஒளியில் வெள்ளிப் பளபளப்பாய் மின்ன, கரையோர மூங்கில் மரங்களின் நிழல்களை அலைகளில் நடனமாடச் செய்தன. வழக்கமாக இந்த இயற்கை எழில் காமவள்ளிக்கு…

Read more

அசுரவதம்: 10 – பழியின் பயணம்.

This entry is part 10 of 12 in the series அசுரவதம்

தண்டகாரண்யத்தின் பஞ்சவடி, பகல் நேரத்துச் சூரிய ஒளியில் பொன் தகடாக மிளிர்ந்தது. கோதாவரி நதி, வெயிலின் பிரதிபலிப்பில் வெள்ளிப் பளபளப்பாய் மின்ன, கரையோர மூங்கில் மரங்களின் நிழல்களை அலைகளில் மெல்ல அசைத்தது. இந்த உயிரோட்டமான வனத்தின் மத்தியில், சூர்ப்பனகையாக உருமாறிய காமவள்ளி,…

Read more