ஜப்பானிய சிறுவர் கதைகள் 2 – மொழியாக்கம்
முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானிய நதியோரத்தில் தாத்தாவும் பாட்டியும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. அதனால், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் குழந்தைகளைப் போல் விளையாடிக்கொண்டும் தங்களுக்குள் விளையாட்டாகக் கேலி செய்துகொண்டும் வாழ்ந்தனர். தாத்தா காலையில் எழுந்து காட்டுக்குள் சென்று மரங்களிலிருந்து…