தமிழே அமிழ்தே – 4
கடந்த பதிவில் சில மயங்கொலிச் சொற்களைச் சிந்திக்கச் சொல்லியிருந்தேன். அவை: கட்டடம் என்றால் கட்டப்பட்ட இடம் – வீடு என்று பொருளாகும். கட்டிடம் என்றால் வீடு முதலியன கட்டுதற்குரிய இடம் (Plot, Site) என்றாகும். (தமிழறிஞர் பா. வரதராசனாரும் இதனைச் சுட்டியுள்ளார்…