காந்தி கௌசல்யா கவிதைகள்
அன்புதான்
கொஞ்சம் கொஞ்சமாய்த்
தின்று தீர்த்துவிட்டு
கைகால் நீட்டி சாவகாசமாய்
ஓய்வெடுக்கிறது…
அன்புதான்
கொஞ்சம் கொஞ்சமாய்த்
தின்று தீர்த்துவிட்டு
கைகால் நீட்டி சாவகாசமாய்
ஓய்வெடுக்கிறது…
பள்ளத்தில் மீந்திருந்த
மழை நீரில்
மரணத்தைத் துழாவிக்கொண்டிருக்கின்றது
இரு மீன்கள்.
இலையோடு
உதிர்ந்த நிழலையும்
உள்வாங்கிய நீர்
மெல்ல வற்றியதும்
இலைகள் சிறகாகி
பறக்கத்தொடங்கியது
மீன்கள்
கண்கள் மற்றவர்கள் போலில்லைகள் வடிக்கும் கண்களைபெற்றிருக்கிறாள்கடந்து போவதற்கும்கரைந்து போவதற்கும்அவை வழிகாட்டிகள்** அவரின்கண்களைக் கசக்கி மூடிவிட சொன்னார்கள்என் விரல்களுக்கும் உள்ளங்கைக்கும் கசக்கும் வித்தை தெரியவில்லைவெறித்த விழிகளில்கடைசியாக எதைப் பார்த்திருப்பார் என எதிர் திசையைப் பார்த்தேன்அவரே நின்றுக் கொண்டிருந்தார்** எந்தக் கண்களை தானம் செய்வதுஏற்கனவே…