நல்லாச்சி -8
கைபேசியில் தற்படமெடுக்ககற்றுக்கொண்டுவிட்டாளாம் பேத்திகால் பாவாமல் தாவிக்கொண்டேயிருக்கிறாள் பூக்களின் பின்னணியில் ஒன்றுபூவுடன் முகம் பொருத்தி ஒன்றுகன்றுக்குட்டியுடன் கன்னமிழைத்து இன்னொன்றுகலர் கோழிக்குஞ்சைதலையிலமர்த்தி மற்றொன்றெனகைபேசியின் மூளையைபடங்களால் நிரப்பிக்கொண்டேயிருக்கிறாள். சாக்கு சொல்லி தப்பித்துக்கொண்டிருந்ததாத்தாவைக்கூடசெய்தித்தாள் வாசிக்கும்அசந்த நேரத்தில்காலையொளியின் பின்னணியில் படமெடுத்தாயிற்று ‘எல.. போட்டோ புடிச்சா ஆயுசு கொறையும்’என நழுவிக்கொண்டிருக்கும்நல்லாச்சிக்கும்ஆசை…