சூரியன் உச்சியை அடைந்து விட்டான். இருந்தாலும் மேகங்கள் சூழ்ந்திருப்பதால் மெல்லிய வெயில்தான். சூடொன்றும் ஆகவில்லை. இரவில் மழை வந்தாலும் வரலாம். ஆனால் ச்சில்லென்ற காற்று அடித்து எனக்கே ஒரு மாதிரிக் குளிராய் இருக்கிறது. கூடவே என் கண்ணில் நீர். ஆவி அழலாமா…
சில பெண்கள் தான் அழகாக இருக்கிறார்கள். அவர்களில் சரிதா ஒருத்தி. சில பெண்கள்.. ஏன் எவ்வளவோ பெண்கள் சாதாரணமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களில் நான் ஒருத்தி. அழகு என்றால் அகத்தழகு அது இது என்று புத்தகங்களில் எழுதுகிறார்களே அது இல்லை. நான் சொல்வது…