ஆவன்னா ரூனா நிர்மல வதனா – 5 – நிறைவு
அள்ளக் குறையா அன்பாம் அமுதினைத் துள்ளியே என்னிடம் தா… எனச் சொல்லவேண்டிய என் காதலர் புரு அஸ்தினாபுரம் போகிறாராம்.. மன்னரிடம் நீதியாம்… அரசகுமாரியைப் பணிப்பெண்ணாக்கி அழகு பார்த்துப் பின் அவளின் அழகைப் பார்த்த பொல்லாத யயாதி மன்னனிடம்.. நீதி கிடைக்குமா என்ன?…