சிறுகதை

இருட்டால் ஒரு வெளிச்சம்

“நாம கெளம்பலாம்… எப்படியோ தங்கிக்க எடம் கெடச்சிருச்சு! அதுவும் நம்ம அபார்ட்மெண்ட்டிலேயே!! ஆனா, அஞ்சாவது மாடில, 512-ம் நம்பர்ல!” என்று, குளத்திலிருந்து கரையேறியவன்போல ஈரஞ் சொட்டச்சொட்ட கதவுக்கு வெளியே நின்று நடுநடுங்கியபடி தன் குடும்பத்தாரிடம் செல்வராஜ் சொன்னபோது நள்ளிரவு போலிருந்தது. ஆனால்…

Read more

வெக்கை

காலையில் கண் விழிக்கும்போதே ‘இன்னக்கிப் போயி பெரிய மகளைப் பாத்துட்டு வரணும்’ என்ற எண்ணம் மாரிச்சாமியின் மனதில் அழுத்தமாய் எழுந்தது. இரண்டு நாட்களாகவே இந்த எண்ணம் மனதில் எழத்தான் செய்கிறது என்றாலும், மே மாத அக்னிவெயில் புலரும்போதே எதையோ எரிக்கும் ஆவலோடு…

Read more

நேர் கொண்ட பார்வை

“எம்.டி. இப்போது பிஸியாக இருக்கிறார். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்கள் சார்” என்று அவரது உதவியாளர் ராம் சொல்லிவிட்டுப் போய் ஏறக்குறைய இரண்டு மணி நேரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இப்போது ரகுவுக்கு என்ன செய்யவேண்டுமென்று புரியவில்லை. ‘ஒருவேளை திரும்பவும் சென்று நினைவூட்ட…

Read more

மோப்பக் குழையும்

“சரி, நான் வச்சுரட்டுமா? உனக்கு ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு வேலை இருக்கும். அடுத்த வாரம் பேசு…” அம்மா போனை வைத்துவிட்டாள். ‘அப்படி என்ன பெரிய வேலை எனக்கு ஞாயிற்றுக்கிழமை இருக்கிறது?’ என்று சொல்லி போனை கட் செய்தாள் அம்மா? அவள் பேசிய விதமும்…

Read more

கோழி மொட்டு கம்பெனி

கோவையிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில், பல்லடத்திற்கு அருகில் சுக்காம்பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது ‘ஆரண்ய குஞ்சு பொரிப்பகம்’. ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த முட்டை குஞ்சுப் பொரிப்பகத்தை ஊர் பொதுமக்கள் என்ன பெயரில் அழைக்கிறார்கள் என்று கேட்டால் அதன்…

Read more

கொய்யாக் கவிதை

”கவிதை சொல்ல வந்தீங்களா?” ”ஆமாங்க” நான், அந்தப் பெண், இன்னும் ஒரே ஒருவர்… மொத்தமே மூவர் தான் இருந்தோம்… செல்லைப் பார்த்தேன். 1:54 ரெண்டு மணிக்குக் கவியரங்கம்னு அமைப்பாளர் கிட்ட இருந்து மெசேஜ் வந்திருந்தது. ”யாரும் வர்லீங்களா?” “தெரிலீங்க…… நான் பன்னெண்டரைக்கு…

Read more

அதிர்ஷ்டம்

சாரதா டீச்சர் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அவரின் வார்த்தைகளிலிருந்து புரிந்துகொண்டான் ப்ரகாஷ். பணிக்காலம் முடிந்த ஓய்வு காலத்தில் இப்படியான சிக்கல் அவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டாம்தான். யாரும் நம்புவதற்கே சிரமம்தான். “குனிஞ்ச தலை நிமிராம எவ்வளவு நேரம்ப்பா நடப்பாரு?” என்ற வார்த்தைகளில் எவ்வளவு…

Read more

மீட்சி

கொல்லைப்புறத்திலிருந்த தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுவின் அருகில் நின்று, அதன் முகத்தை மெதுவாக வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தார் சுந்தரம். ஐந்து நாட்களாக இரை எடுக்காமல் தண்ணீர் எதுவும் அருந்தாமல் பிடிவாதமாக கொலைப்பட்டினியாகக் கிடந்தது அந்தப்பசு. வழக்கமாக கொடுப்பதையெல்லாம் தின்றுவிட்டு போதாக்குறைக்கு கொடியில் காயும் துணிகளையும் ருசி…

Read more

காலவெளி மருத்துவன்

காலமும் வெளியும் அந்த அறையில் எப்போதோ உறைந்து போயிருந்தது. அந்த அறையின் அரையிருளில் நான் அமர்ந்திருந்தேன். அறையின் நிசப்தத்தை நாற்காலியின் கால்கள் தரையில் உரசும் சத்தம் மெலிதாகக் கீறியது. எதிரே வந்து அமரும் உருவங்கள் இருளின் திரையிலிருந்து மெல்ல நழுவி வருபவை…

Read more

கொரோனா

நள்ளிரவின் கனத்த நிசப்தம். இருளின் ஏதோவொரு மூலையிலிருந்து உறக்கம் பதுங்கிப் பார்த்துக் கொண்டிருந்தது. காற்றில் பரவிய அந்தக் கொடும் நோய்த்தொற்று தொண்டையை இறுக்கி, பிராணவாயுவிற்காக உடல் பதைபதைத்துத் துடித்த அந்த நாட்களின் தொடர்ச்சி இது. மூச்சுக்காகத் திணறியபோது, அதை மீட்க மருத்துவர்களால்…

Read more