உணர்ச்சி கட்டுப்பாடும், பிள்ளை வளர்ப்பும்
பல பெற்றோர்கள் பிஸியான வாழ்க்கை, உறவுகள் தரும் அழுத்தம், குடும்ப பொறுப்புகள் மற்றும் நிதி சிக்கல்கள் ஆகியவற்றால் எளிதில் மனச்சோர்வு அடைவார்கள். இந்த மன அழுத்தங்கள் நேரிடையாக குழந்தைகளிடம் வெளிப்படுகின்றன. பெற்றோர் கோபம் அடையும் போது, குழந்தைகளும் அதையே பின்பற்றுகிறார்கள். அதனால், பெற்றோர்கள் தங்களது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.