நல்லாச்சி – 6
தொட்டுப்பொட்டு வைத்துக்கொள்ளலாம்போல்கரேலென்றிருக்கும் வானத்தில்ஆட்டுக்குட்டிகளாய்மேய்ந்து கொண்டிருக்கின்றன மேகங்களெல்லாம் தலைப்பிரசவம்போல்எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடும்மழையின் வீச்சிலிருந்துநெல்லைக்காப்பாற்றும் முகமாய்சாக்குப்பையில்மரக்காலால் அள்ளி நிறைக்கிறாள் நல்லாச்சிஉழக்கு போல் ஒட்டிக்கொண்டு இழையும் பேத்திகேட்கிறாள்மழை எப்போது பெய்யுமென ‘மழை பெய்யறதும் மக்க பொறக்கறதும்மகேசன் கணக்குல்லா’பதிலாகவும் புலம்பலாகவும்ஒரே நேரத்தில் சொன்னபடிமெலிதான இடிச்சத்தத்தைச் செவிமடுக்கும் ஆச்சியைதாக்குகிறது…