தீபாவளித்துப்பாக்கி
நூறு நாட்கள் இருக்கும்போதே கவுண்ட்டவுன் ஆரம்பித்துவிடும். அதாவது தினசரி காலண்டரில் தீபாவளி தேதியில் ஜீரோ என்று எழுதுவோம். அதன் முன்நாள் ஒன்று, அதற்கும் முதல்நாள் இரண்டு… இப்படியே நடப்பு தேதி வரை எண்கள் இடுவோம். கிட்டத்தட்ட தொண்ணூறு, நூறு வரை எண்கள்…