அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.
தண்டகாரண்யத்தின் பஞ்சவடி, நடுப்பகலின் வெய்யில் தாக்கத்தில் பளீரென மின்னுவது போல ஒளிர்ந்திருந்தது. அந்த ஒளி இலக்குவனின் ஆணையை ஏற்று யாரும் அருகில் வர வேண்டாம் என்று எச்சரிப்பது போல பார்ப்பவரின் கண்கள் கூசும் வண்ணத்தில் இருந்தது. கோதாவரியின் அலைகளும் கூட ,…