சமன்பாடில்லா சமவெளிப் பயணம் -12 (இறுதிப் பகுதி)
பனிவிழும் மலர்வனம் புடாபெஸ்டிலிருந்து திரும்பியது ஒரு முடிவல்ல; ஒரு தொடக்கம். என்னுடைய ஆராய்ச்சி தீவிரமடைந்தது. நல்ல முடிவுகள் வரத் தொடங்கியிருந்தன. UCLA நடத்தும் குளிர்கால மாநாட்டுக்கு அனுப்பிய கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த ஒப்புதல் கடிதத்தைப் படித்தபோது, அது ஒரு சாதாரணக் கடிதமல்ல…