இளம்பருவ தனிமை: வளர்வதால் வரும் தனிமை
இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை மூன்று காரணத்தால் தனிமையில் இருப்பதாகப் பார்த்தோம். அதில் முதல் பிரிவினரைப் பார்ப்போம் – அதாவது சூழ்நிலையால் தனிமையில் வாழ நேரிடுபவர்கள். இது நமக்கு மிகவும் பழக்கமானது, ஆனால் அதன் ஆழத்தை நாம் முழுமையாக உணரவில்லை. சில சமயம், நாம் அறிந்திருந்தாலும், நம்மை பாதிக்காதவரை அது நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஒரு வித மறுப்பில் (denial) இருப்போம்.