அவன் வராமல் போன அன்று..
அந்தக் கடற்கரைசாலையின் மதிய வெயில்இதமாய்க் குளிர்ந்ததுஅலைபேசி அழைப்புகளைநிராகரித்த அவனுடையஅவசர வேலையை சபிக்கிறேன்ஆயினும்இத்தனை கருணையாய்இத்தனைத் தனிமையாய்ஒரு சுதந்திர தினத்தைஇன்று அவன் எனக்காக பரிசளித்துள்ளான்ஆனால்ஒருவர் பரிசளிப்பதுதான் சுதந்திரமெனில்என்னிடம் இருப்பது என்ன?இப்படி எல்லாம் எண்ணங்கள்அலைமோதிக் கொண்டிருக்கையில்அந்தக் கடல் காகங்கள்ஒவ்வொரு முறையும்நீரில் மூழ்கிமீனைக் கொத்திச் செல்கின்றன.