நாள்: 19 தொடர்ச்சி & 20ம் நாள்
நமக்கே தெரியாம ஒரு விஷயத்த ஏதோ ஒரு நாள் நல்லா செஞ்சுருவோம்ல…அந்த மாதிரிதான் இன்னைக்கு விசே. 2 வாரத்துக்கு அப்பறம் தலைவனே இப்போதான் கேரவன்ல இருந்து கேமுக்குள்ள வராப்ல. வழக்கம் போல எந்திரிங்க, சொல்லுங்க, உக்காருங்க மோடுதான் அப்டின்னாலும் ரொம்ப மேம்போக்கா இல்லாம இன்னைக்கு பிரச்சனைகள கொஞ்சம் அலச முயற்சி பண்ணாப்ல. ஆனாலும் ஹவுஸ்மேட்ஸ் கூடஉரையாடல் அப்டின்றது மிஸ்ஸிங்க்.
கலர் குருவி கக்கா போனாப்ல ஒரு கோட்டோட வந்தாரு விசே.
“இந்த வாரம் பரபரப்பா இருந்துச்சோ இல்லையோ எல்லாரும் சேர்ந்து நம்மள படபடப்பாக்கிட்டாங்க. எல்லாரும் சப்போட்டா இருந்து விளையாடுவானுங்கன்னு பாத்தா சார்பட்டா பரம்பரை ஃபைட்டு மோடுல இருக்கானுங்க. உள்ள வரதுக்கான இன்டர்வியூ அப்போ எல்லாரும் இந்த உலகத்துக்கு என்னய காட்ட விரும்புறேன்னு சொல்லிட்டு நாம விரும்பாத விஷயங்களையா காட்டிட்டு இருக்கானுங்க.
எப்போ எந்த நேரத்துல உள்ள இருந்து 4 பாடி வரும்னு வெயிட் பண்ணிட்டு இருக்க வேண்டியதா இருக்கு. என்ன கதைன்னு இந்த கிங்கரர்கள் கிட்டயே கேப்போம் வாங்க. அதுக்கு முன்னாடி இவனுங்க வெள்ளிக்கிழமை ஏத்துன விளக்கு என்னன்னு பாப்போம்” அப்டின்னு வீட்டுக்குள்ள காமிச்சாரு.
19ம் நாள் இரவு
அக்க்யூஸ்டுங்க ரெண்டு பேரும் உள்ளதான் இருக்கானுங்களா? இல்ல ஷஷாங்க் ரெடெம்ப்ஷன் மாதிரி சைடுல சுரங்கம் தோண்டி சந்து வழியா பெட்ரூமுக்கு வந்துட்டானுங்களான்னு பாக்கலாம்ன்ற மாதிரி வாட்டரும், கலையும் கேசுவலா வெளிய வந்து நின்னானுங்க.
இதப் பாத்த பாருவும், கமரும்..
பாரு: அங்க பாத்தியா…தின்ன சோறு செரிக்காம திண்ணையில வந்து பேசுற மாதிரி நம்மள நோட்டம் பாக்குறானுங்க
கமரு: ஆமா மத்தவனுங்க நம்மள வெறுப்பா பாத்தா இவனுங்க நம்மள வெறுப்பேத்தவே பாக்குறானுங்க
பாரு: அங்க பாரு…வாட்டரையெல்லாம் நான் என் வாட்டர் கேனுல அடச்சு கைல வச்சுருந்தேன். இன்னைக்கு மீட்டர் போடாத ஆட்டோ மாதிரி ஹாயா சுத்துறான், ரெண்டு பேரும் என்னமோ பேசுறானுங்க…லிப் மூவ்மென்ட்ட வச்சு என்ன பேசுறானுங்கன்னு சொல்லு
வாட்டர்: கலை, பார்க் பக்கத்துல விக்குற வடை அவ்வளவா நல்லா இருக்காது
கமரு: பாரு பக்கத்துல நிக்கிறது நல்லா இருக்காது
கலை: கம கமன்னு வாசனை வந்தா மட்டும் நல்ல வடையா?
கமரு: கமருதீன் வந்து நின்னா மட்டும் நல்லா இருக்குமா மடையா?
வாட்டர்: ஓட்டல்ல கூட ரெண்டு பேரும் நல்லா சாப்பாட மொத்தியிருக்கலாம்
கமரு: ஓட்டிங்க்ல கூட ரெண்டு பேரையும் நல்லா குத்தியிருக்கலாம்
கலை: இங்க பாரு கேன கொட்டிறாதயா
கமரு: பாரு….கே…கூ
பாரு: டேய் டேய் டேய்….போதும் நீ டப்பிங்க் குடுத்தது. நீ அவனுங்கள விட மானத்த வாங்குவ போல//
நாள் 20
மறுபடியும் டைனிங்க் ஏரியால உக்காந்து வாட்டரும், கலையும் பாரு மேட்டரத்தான் பேசிட்டு இருந்தானுங்க.
இங்குட்டு ஜெயில்ல இருந்த பாருவையும், கமருதீனையும் ரிலீஸ்ன்னு சொன்னாங்க.
பாரு: அய்யோ எனக்கு உள்ள போகவே வெறுப்பா இருக்கு. இங்கயே இருக்கலாம்
கமரு: ஆமால்ல
கதவ திறந்து விட்டதும்
பாரு: ரிலீஸ் பண்ணதுக்கு நன்றி பிக்பாஸ். எப்படா உள்ள போவோம்னு இருக்கு
கமரு: ஆமால்ல
பாரு: மறுபடியும் எப்படா ஜெயிலுக்கு போவோம்னு இருக்கு பிக்பாஸ்
கமரு: ஆமால்ல
பாரு: (மை.வா: ஆகா…வாட்டர நம்பி இப்டி ஒரு ஃப்ரெஷ் பீஸ இவ்வளவு நாள் விட்டுட்டோமே. இவன் மட்டும் கூட இருந்திருந்தா இன்னேரம் ஈபிள் டவரையே சண்ட போட்டு வாங்கியிருக்கலாமே….) உள்ள போயி சுபிக்ஷாவ அசிங்கமா பேசலாம்
கமரு: ஆமால்ல
பாரு: ரகுவரன் ஐ நோ சொன்ன மாதிரி எவ்வளவு ஆமாம் சாமி போடுறான் பாரு…செம்மடா//
இங்க பெட்ரூமுல வினோத்தும், கமரும் காமெடி பண்றேன்னு அநியாயமா வாட்டர வம்பிழுத்துட்டு இருந்தானுங்க.
சும்மா இல்லாம கமரு வெளிய வந்து கேமராகிட்ட “வாட்டரால இங்க உள்ள பெண்களுக்கு பாதுகாப்பில்ல”ன்னு சொல்ல, அந்தப்பக்கமா வந்த சுபி “இந்தாப்பா இந்த வீட்ல பெண்கள்ன்னு 7 பேரு இருக்கோம். நாங்க 7 பேரும் பாதுகாப்பா தான் இருக்கோம். நீ எந்த வீட்டுப் பெண்களப் பத்தி பேசுற”ன்னு கேக்க, “நாங்க வயலன்டா பேசுறோம்னு சில பேரு ப்ரொஜெக்ட் பண்றாங்க”ன்னு சொன்னப்போ பின்னாடி இருந்த கனியக்கா ப்ரவீன் கிட்ட எதுக்கோ “உங்களுக்கு வேணும்னா அப்டி சொல்லுங்க”ன்னு சொன்னத கிறுக்கு கமருதீன் சுபி அவன சொன்னதா நெனச்சிக்கிட்டு மறுபடியும் சுபிகிட்ட வந்து
கமரு: நீ ஏன் என்னால பாதுகாப்பில்லன்னு சொன்ன?
சுபி: குடிச்சிருக்கியா? நான் எங்கடா அப்டி சொன்னேன்? நீ பொண்ணுங்களுக்குன்னு சொன்ன நான் அப்டி இல்லன்னு சொன்னேன்
கமரு: நான் பொண்ண பத்தி சொன்னேன் ஆனா உன்னப் பத்தி சொல்லல
சுபி: அப்ப என்னய ஆம்பளன்னு சொல்ற?
கமரு: என்னய ஆம்பளன்னு சொன்னேன்
சுபி: அதான் என்னய ஆம்பளன்னு சொன்ன?
கமரு: இல்ல என்னய ஆம்பளன்னு சொன்னேன்
சுபி: அதாண்டா நானும் சொல்றேன்….என்னய ஆம்பளன்னு சொல்ற?
இப்போ பாரு கமரு பக்கத்துல வர…
கமரு: நல்ல வேள பாரு வந்தா…நீ தான் ஏமாத்துக்காரி, துரோகி, நயவஞ்சகி, பார்வதி
பாரு: டேய் அது நான்டா….! யம்மா சுபி உன் கேரக்டரே ஏமாத்துறது….நீ நல்லவ இல்ல
சுபி: அதாவது நீ நல்லவ இல்லன்னு சொல்ற?
பாரு: ஆமா நீ நல்லவ இல்லன்னு சொன்னேன்
சுபி: அதான் நீ நல்லவ இல்லேன்னு சொல்ற?
பாரு: ரைட்டு….பால திருப்புறா…நாம வண்டிய திருப்புவோம்//
விசே உள்ள வந்தாரு. பாவக்காய் ஜூஸு குடுத்து குடிக்க சொன்னாப்ல. “இப்டிதாண்டா போன வாரம் நீங்க எங்களுக்கு குடுத்தீங்க”ன்னு சொல்லிட்டு சாட்டையை சுழற்ற ஆரம்பிச்சாரு. எதிர்பார்த்தத விட குறைவா இருந்தாலும் நிறைவாவே பாருவையும், கமருதீனையும் அடிச்சாப்ல. கமருதீனுக்கு ஓப்பனாவே வார்னிங்க் குடுத்தாரு. “எவனையும் ஷோ பாக்க விடாம பண்ணிட்டு யாருக்குடா ஷோ நடத்துறது? ஒழுங்கு மரியாதையா விளையாடுங்க இல்லேன்னா ஓட்டப்பத்தி எல்லாம் கவலப்படாம வீட்டுகு ஓட்டி விட்டுருவேன். ஆல்ரெடி ரெட்கார்டுக்கு இன்னும் ஏன் வேலை வரல?ன்னு கேக்குறாய்ங்க பாத்துக்கோங்க”ன்னு சொல்லிட்டு போயிட்டாப்ல.
முடிஞ்சதும் பாருகிட்ட கமருதீன்
கமரு: ரைட்டு, ரெட் கார்டுக்கு ரெக்கமெண்டேஷன் வந்துருச்சு. இனி நான் ஒழுங்கா இருப்பேன்
பாரு: நான் இல்லடா நாம
கமரு: இல்ல நான்தான். உன் கூட சேர்ந்ததாலதான் எனக்கு மரண அடி விழுது அதனாலதான் என்னய அவாய்ட் பண்றானுங்கன்னு விசே சொன்னாரு
பாரு: அடேய் அது அப்டி இல்லடா உங்கிட்ட பேசுனா நீ கைய நீட்டுவன்னு யாரும் பேசுறது இல்லன்னு சொன்னாரு
கமரு: நீ கூடதான் பேசும்போது கைய நீட்டி நீட்டி பேசுற
பாரு: (மை.வா: அய்யோ சரியான நேரத்துல தப்பா யோசிக்கிறானே) இங்க பாரு…நான் பாரு! என்னய நம்பு எல்லமே உன் கெட்டதுக்குதான்….ச்சீ…நல்லதுக்குதான் சொல்றேன்
கமரு: இல்ல…இனி நான் சுதந்திரப் பறவை….இனி எல்லார் கூடவும் வச்சுக்குவேன் உறவை…
பாரு: அடுத்த வாட்டர் லெமன் ஸ்டார் உருவாகிட்டான்…//