கிளி ஜோசியம்
ஆலய வாசலின் முன்னிருந்தஆரவாரமிக்கப் பூக்கடைகளைத் தாண்டிவீதியின் அமைதியான ஓரத்தில்சாயம் போன குடைக்குக் கீழ்மூங்கில் கூண்டிற்கு உள்ளேசைகைக்காகக் காத்திருக்கிறது கிளி. வருவோர் போவோரைக் கவரும்வாய்கொள்ளாப் புன்னகையுடன்பச்சைக்கரையிட்ட மஞ்சள் வேட்டியும்இளஞ்சிகப்பில் சட்டையும், நெற்றியில்விபூதிப் பட்டையுடன் சந்தனமும் குங்குமமும்தரித்த ஜோஸியர்விரல்களைச் சொடுக்கவும்தாவிக் குதித்து வெளியே வருகிறது…