அசுரவதம் -7: வழிநடத்தும் வல்வினை
” உன் பிரிவையும் விட அதிகமாய் சுட்டுவிடுமா அந்தக் காடு? என் தந்தை தவறு செய்துவிட்டார், உன்னை ஆண்மகன் என்று நினைத்தல்லவா என்னை உனக்கு மணமுடித்தார். தன் மனைவியைக் காப்பாற்ற இயலாத கோழை என்று அவர் அறிந்திருக்கவில்லை. ” என்றெல்லாம் பலவாறாக அவள் இராமனைத் தூண்டினாள்.