நாள் – 7

இன்னைக்கு நடந்தது என்ன?
விஜய் சேதுபதி வந்தாரா…
வந்தாரு…
விஜய் சேதுபதி பேசுனாரா?
பேசுனாரு…
விஜய் சேதுபதி போயிட்டாரு
ஆமா போயிட்டாரு…
ஒட்டு மொத்த எபிசோடும் “அதுல ஒண்ணும் இல்ல கீழ போட்டுரு” கணக்குதான்.
சும்மா நாளா இருந்தாக் கூட இவனுங்களா பேசி, பொராண்டி, சண்ட போட்டு, கத்தி கூப்பாடு போட்டுன்னு என்னவாச்சும் இருந்திருக்கும். இந்தாளு வந்தாலே கண்டென்டுக்கு நொண்டியடிக்க வேண்டியதா இருக்கு…
வந்ததும் உள்ள போனாரு. கலைமாமணி அவார்டு வாங்க வந்தவனுங்க மாதிரி அம்சமா ட்ரெஸ் பண்ணிட்டு வரிசையா உக்காந்திருந்தானுங்க. “ஆமா இந்த சூப்பர் டீலக்ஸ் ஆளுங்க ஒழுங்கா வேலை வாங்குனீங்களா?”ன்னு கேட்டாப்ல. “இவனுங்கள வேல வாங்கலாம்னு பாத்தா எங்க உயிரத்தான் வாங்குனானுங்க. ஒருத்தனாச்சும் சொன்ன வேலைய செய்யுறானுங்களா? காலுல விழுந்து கெஞ்ச வேண்டியதா இருக்கு”ன்னு பொலம்ப, “டேய், அதாண்டா டாஸ்கே, செய்ய மாட்டேன்னு சொன்னா அவனுங்கள செய்ய வைக்குறதுக்கு என்ன பண்ணனுமோ அத பண்ணுங்கடா. எல்லாத்தையுமா எழுதி குடுக்க முடியும்? அவனுங்கள தூக்கி சூப்பர் டீலக்ஸ்ல போட்டா உங்கள என்ன பாடு படுத்துவானுங்கன்னு மட்டும் பாரு. அத மனசுல வச்சுட்டு விளையாடுங்கடா அப்ரசண்டிகளா”ன்னு சொன்னாப்ல.
பிரேக்ல, கனி, விக்ரம், ப்ரவீன், ஆதிரை, கெமி உக்காந்து பேசுனாங்க
கனி: இந்த வாட்டி சூப்பர் டீலக்ஸ் வீட்டுக்கு எவனயாச்சும் அனுப்பனும்னா…நாம பேசாம பாருவ அனுப்பி விட்டுருவோம். நாமளே அவ அங்க போயி என்ன பண்ணுவா? என்ன பண்ணனும்னு டிஸ்கஸ் பண்ணி அனுப்பி விடுவோம்
விக்ரம்: யாரு அவகிட்ட நீ உக்காந்து இவ்வளவு நிதானமா பேசிருவ? சரி, அவள மட்டும் எப்டி தனியா அனுப்புவ? கூடவே நானும் போறேன்னு வாட்டர் லெமனும் போவானே
ஆதிரை: அவள எங்கயாச்சும் தொரத்தி விடனும்ன்ற உன் உள்ளக்கொதிப்பு புரியுது…ஆனா அதெல்லாம் நடக்குற காரியமா? நம்ம தலையெழுத்து அவ்வளவுதான்.
பிரேக் முடிஞ்சு விசே வந்தாப்ல. சரி உங்க கணிப்புப் படி யாருக்கு அதிக ஹேட்டர்ஸ் உருவாகியிருப்பாங்க? யாருக்கு ஃபாலோயர்ஸ் அதிகமாகி இருப்பாங்க?ன்னு வரிசையா சொல்லுங்கன்னாப்ல.
இன்னைக்கும் பார்வதிக்கு கட்டம் சரியில்ல. ஹேட்டர்ஸ் அதிகமாகி இருக்கும்னு 19 பேருல 14 பேரு பாரு பேரத்தான் பகருனானுங்க. அதே போல ஃபாலோயர்ஸ் அதிகமாகி இருக்கும்னு அனேகம் பேரு சொன்னாங்க. இதுல கலைய எந்திரிச்சு கேக்குறப்போ அவன் “நானெல்லாம் 1000 திருக்குறள அசால்ட்டா சொல்ற ஆளு”ன்னு சொல்ல, “எங்க ஒரு 10 சொல்லு பாப்போம்”னு சொன்னதும் பதறிட்டான். உலகத்துலயே திருக்குறள் சொல்லுன்னு சொன்னதும் எந்த ஒரு மனுஷனும் அகர முதல எழுத்தெல்லாம் தான் சொல்லுவான். இந்த மூதேவி அதயே 6வது குறளா சொல்றான். இவரு அப்டியே 1000 குறள அறுத்துத் தள்ளிட்டாலும். இதுல் டெய்லி கேமராகிட்ட ஒரு குறள் சொல்லனுமாம். 10 நாள் தாண்ட மாட்டான். இதுல இவனுக்கு ஃபாலோயர்ஸ் அதிகமாகி இருக்கும்னு நெறைய பேரு சொல்லலயாம். இவன் பொண்டாட்டி இவனுக்காக தினமும் ரிவ்யூ போட்டு இவனுக்கு சப்போர்ட் சேக்குறேன்னு சொல்லுச்சாம். யாரு, போன வருஷம் யூ ட்யூப் சேனல்ல ஃபுல்லா இவன அசிங்க அசிங்கமா திட்டி தில்லானா பாடுச்சே அதே சம்சாரம் தான்.
இப்ப எலிமினேஷன்…! “யாரு போவான்னு நெனைக்கிறீங்க?”ன்னு கேட்டதுக்கு நெறைய பேரு அப்சராவ சொல்ல….அப்டியே அப்பீட் அடிச்சு ரட்சகன் காந்திய வெளிய வர சொல்லிட்டாய்ங்க.
அந்தாளு அந்த நிமிஷம் ஆரம்பிச்சு வீட்டுக்கு போறதுக்குள்ள இருக்குற எல்லாத்தையும் கிறுக்கனாக்கி விட்டுட்டான். வெளிய போறதுக்கு கேட்டு பக்கத்துல வந்து நின்னாப்ல
ரட்சகன்: ஏண்டா நான் பாடையில போற மாதிரி இவ்வளவு பேரு நிக்கிறீங்க ஓடுங்கடா
கமருதீன்: சார் உங்ககிட்ட இருந்து நெறைய கத்துக்கிட்டேன்
ரட்சகன்: எங்கிட்ட இருந்தா? பொய்யா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா? அப்பிடி என்னடா கத்துக்கிட்ட?
கமருதீன்: நாம பேசுறது எல்லாமே கிறுக்குத்தனமா இருக்குன்னு தெரிஞ்சும், நாலு பேரு நம்மள கிறுக்கன்னு சொல்லுவானேன்னு புரிஞ்சும் அசராம அதே மாதிரியே இருக்கீங்களே அந்த மனநிலய கத்துக்கிட்டேன்
ரட்சகன்: அதான பாத்தேன்…சந்தோஷம்டா…சரி வரேன்
அவரு பாட்டுக்கு நடக்க
சபரி: யோவ் அது கக்கூஸுக்கு போற வழி…கதவு இந்தப் பக்கமா இருக்கு…தள்ளாடாம போ
அவரு போனதும்
பாரு: ஒரு பாய் கூட சொல்லாம போறாரு
சபரி: அத அவரு இருக்குறப்போ கேக்க வேண்டியதுதான?
பாரு: எதுக்கு அந்தாளு என்னய அசிங்கமா கேக்கவா…ஆள விடுங்கடா
வெளிய போன ரட்சகன் காந்தி விசே கிட்ட போனாரு.
ரட்சகன்: நான் தோக்கவே இல்ல…தோக்கவே மாட்டேன்…தோத்த மாதிரி நெனைக்க மாட்டேன். நான் பிரபஞ்சம்….நான் எங்கயும் இருப்பேன்…இங்க இருப்பேன், உள்ள இருப்பேன், அதோ அங்க இருப்பேன், இதோ இந்த பொண்ணு பக்கத்துல இருப்பேன்
விசே: அப்பறம் நீ ஜெயில்ல தான் இருப்ப…இப்ப நீ என்ன சொல்ல வர?
ரட்சகன்: நான் தோக்கவே இல்ல…தோக்கவே மாட்டேன்…தோத்த மாதிரி நெனைக்க மாட்டேன்….
விசே: யப்பா சாமி….நீ கொஞ்சம் வெளிய போறியா? போ.
ரட்சகன் கிளம்ப
விசே: போயிட்டானா? எழவு இப்போ அவன் இங்க இருக்கானா? இல்ல வீட்டுக்குள்ள இருக்கானான்னு வேற தெரியல குழப்பி விட்டுட்டு போயிட்டான்…
அப்டியே உள்ள போயி, ஆதிரைகிட்ட “பிக்பாஸ் ஒரு விஷயம் சொன்னா கேக்கனும். உன்ன காலத்துக்குமா மாஸ்க் போட சொன்னானுங்க? ரெண்டு நாள் போடுறதுல என்ன உனக்கு வாலா மொளச்சுரும்? போ போயி மாஸ்க்க போடு”ன்னு சொன்னாப்ல. அதுவும் வேண்டா வெறுப்பா போட்டுக்கிச்சு. விசே பாய் சொல்லிட்டு கிளாம்பிட்டாப்ல.
விசே போனதும் உள்ள காமிச்சானுங்க. ப்ரொடக்ஷன் குடுத்த சாப்பாட பாரு ரெண்டாவது தடவ கொஞ்சம் எடுத்துச்சு. உடனே கனி வந்து “யம்மா இருக்குறவங்க எல்லாம் சாப்ட்டதுக்கப்பறம் கூட எடுத்துக்கோ”ன்னு சொல்லுச்சு. சபரியும் “அவங்க சொல்றது சரிதான..பாத்து எடு”ன்னு சொன்னதும். பாரு, “டேய் இது ப்ரொடக்ஷன் சாப்பாடு தான? அரக் கரண்டி எடுத்துப் போட்டதுக்கு போர்க்கொடி தூக்குறீங்களே?’ன்னு சொல்லிட்டுப் போக, வாட்டர் லெமன் வந்து “ஆச ஆசையா சாப்புட வந்த பாருவ இப்பிடி சாப்ட விடாம பத்தி விட்டீங்களேடா…நீங்க நல்லா இருப்பீங்களாடா?ன்னு கேக்க, சபரி டென்ஷனாகி “இந்தா, மத்தவனுங்கள சொல்லும்போது ஒண்ணும் பேசாம, இப்ப பாருவ சொன்னதும் வந்து வெளக்கடிக்கிற? சும்மா சாப்ட விடல கிடலன்னு ப்ளேட்ட திருப்புனன்னு வை, கழுத்த திருப்பிருவேன்”னு சொன்னான்.
பாரு அந்தப் பக்கமா உக்காந்து சாப்ட்டுக்கிட்டே “நான்னு வந்துட்டா போதும்…லாரில ஆளக் கூட்டீட்டு வந்து வம்பிழுக்குறானுங்க. வேணும்னா நீங்களும் அள்ளிப்போட்டு தின்னுங்களேன்டா…என் வாயில ஏண்டா விழுகுறீங்க”ன்னு வில்லுப்பாட்டு பாட ஆரம்பிச்சுடுச்சு.
அப்பறம் சபரி வந்து பாருகிட்ட விளக்கம் சொல்ல வந்தப்ப ஒழுங்காதான் கேட்டுட்டு இருந்துச்சு….பின்னாடியே வாட்டர் லெமன் வந்து நின்னதும் மறுபடியும் தலையில கிர்ருன்னு ஏறி அட்ராசிட்டியா பேச ஆரம்பிச்சது. முடிஞ்சது.

Series Navigation<< நாள் – 6நாள் – 8 >>

Author

Related posts

நாள்: 20

நாள்: 19

அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு