கனி, விக்கல், ப்ரவீன் எல்லாம் கிச்சன் ஏரியால நின்னுட்டு
கனி: ஏண்டா…இப்பிடி காலையில எந்திரிச்சு ஒரு காபி போட கூட வழியில்லாம இருக்கே…! இவனுங்க எப்ப எந்திரிக்கிறது…நாம எப்ப வேலைய ஆரம்பிக்குறது?
ப்ரவீன்: பெல்ட்ட எடுத்து எல்லாரையும் நாலு சாத்து சாத்தவா?
கனி: எதுக்கு விஜய சேதுபதி வந்து நம்மள நாலு ஏத்து ஏத்தவா? பேசாம அவனுங்க வாசல்ல நின்னு எந்திரிங்க எந்திரிங்கன்னு பள்ளி எழுச்சி பாடுவோமா?
சபரி: ஏன், காலையில் பாடும் ராகம் பூபாளத்துல ஒரு பாட்டு பாட வேண்டியதுதான? இப்ப மட்டும் நாம இங்க அமைதியாவா பேசிட்டு இருக்கோம்? நாம பேசுறது மைக்கே இல்லாம நம்ம வீடு வரைக்கும் கேக்கும் போல…அதுக்கே அசர மாட்டேங்குறானுங்க….இதுல நீ வேற
கனி: பரவால்ல எதையாச்சும் செய்வோம்…//
நார்மல் ஹவுஸ் ஆளுங்க எல்லாம் கைல கிடச்ச பாத்திரத்த எடுத்துட்டுப் போயி வாசல்ல நின்னு தட்டிட்டு இருந்தானுங்க. இவனுங்க அடிச்ச தாளத்துக்கு ஆட்டக்காரி ரம்யா மட்டும்தான் அசஞ்சுச்சு. அது மட்டும் வெளிய வந்துச்சு. மத்தவனுங்க கூந்தலுக்கு கூட அசையல. ரொம்ப சத்தம் வந்ததால எந்திரிச்ச சுபியும், வியான்னாவும் அந்த சத்தத்துக்கு டான்ஸ் ஆட அரம்பிச்சுதுங்க. ஆனா வெளிய வரல.
இவ்வளவு களேபரம் நடக்குறப்போ…அந்த பக்கம் ரெண்டு பேரு
ஆதிரை: ஆமா நீ ஏன் எங்கிட்ட பேச மாட்டேங்குற? பேசுனா என்ன? பேசுனாதான நல்லாயிருக்கும். பேசப் பேசத்தான புரியும். என்ன பேசாம அமைதியா இருக்க?
FJ: என்னய பேசு பேசுன்னு நீதான் பேசிட்டே இருக்க. அதயும் மீறி வாயெடுத்தா வானமே இடிஞ்சு விழுகுற மாதிரி வாதாடுற. இதுல நான் எங்க பேசுறது?
ஆதிரை: அதுக்காகவெல்லாமா பேசாமா இருப்பாங்க. நான் பிக்பாஸ கூடத்தான் கத்துறேன் அதுக்காக அவரு எங்கூட பேசாமையா இருக்காரு?
FJ: அந்தாளுக்கு அதான் வேல…
ஆதிரை: சரி…இனிமே நான் உங்கிட்ட கத்த மாட்டேன். நான் வெளிய போற வரைக்கும் என் கூட நீ இருக்கனும்
FJ: வெளிய போனப்பறம்?
ஆதிரை: எங்கூட இருக்க மாட்ட…இது கூட உனக்கு தெரியலயே…மக்கு! சரி, நான் லான் ஏரியால உக்காந்து யாரயாச்சும் திட்டிட்டு இருக்கேன்…அப்பறமா வந்து நீ என் மடியில படுத்துக்கோ
FJ: (மை.வா: இவ நம்மள எங்க இழுத்து விடப்போறான்னு தெரியலயே)//
இப்பிடி அந்த கலவர பூமிய காதல் நிலவர பூமியா மாத்த முயற்சி நடந்துட்டு இருந்துச்சு.
“அடுப்ப பத்த வைக்கதான கூடாது? நைட்டு தண்ணி ஊத்தி வச்ச பழைய சோறு இருக்கு. அத குடிப்போம்”னு முடிவு பண்ணானுங்க. “நீங்க குடிங்கடா, எவன் வந்து கேட்டாலும் நான் பாத்துக்குறேன். எவனா இருந்தாலும் வெட்டுவேன்…எவனா இருந்தாலும் வெட்டுவேன்”னு கனி அக்கா வனி அக்காவா மாறி நின்னுச்சு.
உள்ள கண்ணாடி வழியா அரோரா வாட்டர் லெமனுக்கு கிஸ்ஸடிக்க, பூரிச்சு போனாரு மனுஷன். இப்ப இந்தாள வெளிய அனுப்புனா கூட வந்ததுக்கு கால் கிலோ கிஸ்ஸு மிச்சம்னு சந்தோஷமா போயிருவாப்ல. அந்தளவு காஞ்சு போயிருக்காப்ல.
ஒரு வழியா கஞ்சிய குடிச்சிட்டு இருந்தானுங்க. சட்டுன்னு கமருதீன் வெளிய ஓடி வந்து கஞ்சித் தொட்டிய களவாடிட்டு உள்ள ஓடிட்டான். “சீப்பா போட்ட ப்ளான சீப்ப வச்சு முடிச்சேன்ற மாதிரி. இங்க “நமக்கு பழைய சோத்துக்கு கூட வக்கில்ல”ன்னு பொலம்பிட்டு இருந்தானுங்க நார்மல் ஹவுஸ்மேட்ஸ். பொசுக்குன்னு ரம்யா மயங்கி விழுந்துருச்சு. மேடையில சுத்தி சுத்தி ஆடுன பொண்ணு…ஒரு வாய் சோறில்லாம பசி மயக்கத்துல தல சுத்தி விழுந்துருச்சு.
வாட்டர் லெமன்: (மை.வா: நல்லா வேள இங்க டாக்டர்ன்னு நான் ஒருத்தன் இருக்குறத மறந்துட்டானுங்க
சபரி: டாக்டர் இருக்குறத மறக்கல…நீ டாக்டர்ன்றதயே மறந்துட்டானுங்க. சரி, நீ ஏன் போயி அந்த பொண்ண செக் பண்ணல?
வாட்டர் லெமன்: பிரசவ கேஸ்லாம் நான் பாக்குறது இல்லையேப்பா.
சபரி: (மை.வா: எதே மயங்கி விழுந்தா மசக்கையா? இவனுக்கு ஏன் கலயாணம் ஆகலன்னு மட்டும் இல்ல இவனுக்கு ஏன் கல்யாணமே ஆகாதுன்னு இப்பதான் புரியுது.//
அப்பறம் எல்லாரும் வெளிய வந்தப்பறம். மார்னிங்க் சாங்கா “அடி போட்டு வளத்தாக்கா” பாட்டு ஓடுச்சு. இருக்குற ஆகாவலிங்க எல்லாம் ஆடுச்சு.
நடிகன் டா-ன்னு ஒரு டாஸ்க். தனி ரூம்ல டிவில காமிக்குற சீனப் பாத்துட்டு, அத லிவிங்க் ஏரியால எல்லாருக்கும் முன்னாடி டப்பிங்க் குடுக்கனும். சூப்பர் டீலக்ஸ் ஜெயிச்சா Swap கிடையாது, நார்மல் ஹவுஸ் ஜெயிச்சா, சூப்பர் டீலக்ஸ்ல இருந்து 2 பேரு நார்மல் ஹவுஸுக்கும், நார்மல் ஹவுஸ்ல இருந்து மூணு பேரு சூப்பர் டீலக்ஸுக்கு போகலாம். காத்து வாக்குல ரெண்டு காதல் சீன்.
ஜட்ஜா வியான்னாவும், FJ-வும். ஜட்ஜஸ் பக்கத்துல பாருவும், வாட்டர் லெமனும் உக்காந்திருந்தாங்க. அப்பவே தெரிய வேணாமா அங்க ஒரு வியட்நாம் போர் உருவாகும்னு. பக்கத்துல உக்காந்து பாரு நொய் நொய்ன்னவும் FJ பாருவ கொஞ்சம் “அங்குட்டுப் போயி உக்காரு”ன்னு சொல்ல, “போறதா இருந்தா நீ போடா, போறதா இல்லேன்னாலும் நீயே போடா”ன்னு ஆரம்பிக்க, “அதான பாருவ எவண்டா பத்தடி தள்ளி போக சொன்னது? பாரு மேல பர்சனல் வெஞ்சென்ஸ் காட்டுனா, இப்போவே உங்களுக்கு வீராசாமி பட க்ளைமாக்ஸ நடிச்சு காட்டுவேண்டா”ன்னு பயமுறுத்துனாப்ல வாட்டர்.
இந்த கலவரத்துக்குள்ள பர்பார்மன்ஸ் பண்ண வந்த ப்ரவீன், ஒழுங்கா டயலாக் பேச முடியாம சொதப்ப…”ஏண்டா ஒரு 5 நிமிஷம் உங்களால அமைதியா இருக்க முடியாதா? இந்தியா – பாகிஸ்தான் எல்லையில கூட அப்பப்ப போருக்கு பிரேக் இருக்குடா. ஆனா உங்க அக்கப்போருக்கு ஒரு பிரேக்க இல்லாம போச்சேடா”ன்னு பொலம்ப, “உனக்கு நடிக்க தெரியாம எங்கள வந்து வையுறியா? நடிகன்னா ஒரு டெடிகேஷன் வேணும்டா என்னய மாதிரி, நடிகன்னா ஒரு நெளிவு சுளிவு வேணும்டா என்னய மாதிரி, நடிகன்னா ஒரு ஸ்டைல் இருக்கனும்டா என்னய மாதிரி, நடிகன்னா நடிக்கனும்டா என்னய மாதிரின்னு வாட்டர் சுத்தி அடிக்க “எல்லாம் இவனால வந்தது, இந்த னாயி ஒழுங்கா நடிக்காம வாட்டர் லெமன் வாயக் கிளறி இப்ப அவன் பேசுற பேச்ச கேக்க வச்சுட்டானே”ன்னு எல்லாரும் ப்ரவீன பாத்தாய்ங்க.
ஆமா இந்த டாஸ்க்ல நடிப்பு அரக்கன ஏன் கலந்துக்க விடல?
நார்மல் ஹவுஸ் ஆளுங்கதான் ஜெயிச்சாங்க. இப்போ யாரு யாரு Swap ஆகுறதுன்னு முடிவு பண்ணி சொல்லுங்கன்னு சொன்னதும் கனி ரூம்ல வந்து“யப்பா புண்ணியமாப் போகும், பாருவ பார்சல் பண்ணுங்கடா”ன்னு கையெடுத்துக் கேட்டுச்சு. பாருவும், வாட்டர் லெமனும் ஆல்ரெடி அந்த ப்ளான்ல இருந்ததால ஓகே சொல்லிட்டாய்ங்க. கூட ஆதிரையவும் கோர்த்து விட்டுட்டாய்ங்க.
அந்தப் பக்கம் இருந்து அரோராவும், கமருதீனும் இந்தப் பக்கம் வந்தானுங்க.
இப்ப சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ்ல எந்த மூணு பேருக்கு நாமினேஷன் ஃப்ரீன்னு சொல்லுங்கன்னு சொன்னதும். அடுத்த பஞ்சாயத்து.
வினோத்து மொதையே நான் நாமினஷன் போகலன்னு சொல்லிட்டான்.
பாரு: நான் நாமினேஷன் போகல…க்ரைம் ரேட் கூடுறதப் பாத்தா மொத்தத் தமிழ் நாடும் என்னய எவிக்ட் பண்ணி அனுப்பிருவானுங்க
வாட்டர் லெமன்: பாரு சொல்றதுதான் சரி
ரம்யா: நீ என்ன சொல்ற?
வாட்டர் லெமன்: அதான் சொன்னேனே பாரு சொல்றதுதான் சரி
ரம்யா: யோவ் வாட்டரு, அவ சொல்றதுக்கு அவளுக்கு சரி. நீ என்ன சொல்ற
வாட்டர்: அதான் சொன்னேனே பாரு சொல்றதுதான் சரி
ரம்யா: பொற போட்டு வளத்தாக் கூட ஒரு ஜென்மம் இப்டி விசுவாசமா வளர்றது கஷ்டந்தான்//
பாருவும் வாட்டரும் எப்டியாச்சும் நாமினேஷன் பாஸ் வாங்கலாம்னு தலகீழ ஆடியும் வேலைக்காகல. ரம்யாவும், சுபியும் கடைசி வரை விட்டுக்குடுக்காம பாருவ ஏத்தி விட்டு நாமினேஷனுக்கு ஒத்துக்க வச்சுட்டானுங்க. “இப்ப நாமளும் ஒத்துக்கலேன்னா இவ நைட்டு சங்கக் கடிச்சுருவாளே”ன்னு பயந்து வாட்டரும் நாமினேஷனுக்கு ஒத்துக்கிட்டாப்ல.
எதிர்பார்த்ததை எதிர் பாருங்கள்ன்ற மாதிரி பாருக்கு தான் அதிக ஓட்டு, அடுத்து வாட்டருக்கு.
பாரு, கமருதீன், வாட்டர், FJ, அரோரா, சபரி, கெமி, அப்ஸரா & ரம்யா. இவங்கதான் நாமினேஷன்.
பாரு, வாட்டர், கலை உக்காந்திருக்க
பாரு: இவனுங்க சூப்பர் டீலக்ஸ்ல இருக்குறதே நாமினஷன் பாஸ் வாங்கதான்
கலை: நீங்களும் கேட்டீங்களே?
பாரு: டேய், நான் சூப்பர் டீலக்ஸ் வீட்டுக்கு போனதுக்கு அதுவும் ஒரு காரணம் ஆனா அது மட்டும்தான் காரணமா அப்டின்னா ஆமா அதுதான் காரணம். ஆனா சூப்பர் டீலக்ஸ் வீட்டு ஆளுங்க அப்டியா? இல்லேல்ல! அவனுங்க நாமினேஷன் பாஸுக்காகத்தான் அங்க இருக்க ஆசப்படுறாங்க. புரியுதா?
கலை: ரொம்ப நல்லாவே புரியுது
பாரு: ஆனா வாட்டரு…நம்ம கிட்ட சலம்புன கனிய விட்டுட்டானுங்க. அன்னை தெரசா மாதிரி வெளிய காமிச்சுக்குற அதுக்குள்ள தான் ஆயிரம் அண்டர்டேக்கர் இருக்கான்.
வாட்டர்: அத அப்டி சொல்ல முடியாது….எதுக்
பாரு: என்ன சொல்ல முடியாது…எல்லாம் சரியாத்தான் சொல்றேன்
வாட்டர்: என்ன சொல்ல வரே
பாரு: நீ சொல்ல வரதெல்லாம் ஓகே ஆனா நான் சொல்றேன்ல அதான் சரி
வாட்டர்: என் வாய வேணும்னா நீ வாங்கி வச்சுக்குறியா? வீட்டுக்கு போறப்ப பத்திரமா திருப்பிக் குடு. என்னமோ பிக்பாஸ் வீட்ல பேசுறதுக்கு கான்ட்ராக்ட் எடுத்த மாதிரி என்னய பேச விடாம நீயே பேசித் தள்ளுற
பாரு: (மை.வா: ஆகா சிட்டிக்கு கோவம் வருது. புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு மொளைக்குது. இவன கழட்டி விட்டுட்டு கலைய கூட வச்சுக்கலாம்னு பாத்தா எந்த நேரம் அகோரியா மாறி என் கழுத்துக் கறிய டேஸ்ட் பண்ணுவான்னு தெரியாது…பேசாம வாட்டர வச்சே மேட்டர சமாளிப்போம்//
கடைசியா கனிய எப்பிடியாச்சும் நாமினேஷனுக்கு கொண்டு வரணும்னு பாரு சபதத்தோட முடிஞ்சது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^