இதழ்கள்

உன் உழைப்பால் சிகரம் தொடு!

அடுத்தவரின் உழைப்பை அபகரித்தல் முரணே!தடுத்ததனை தவிர்ப்பதே தருமத்தின் முறையே!எடுக்கின்ற காரியத்தில் எதிர்வரும் தடைகள்முடுக்கிவிடும் திறனை முயற்சிக்கு முதற்கல்! உழைக்கின்ற சுயமும் உள்ளத்து உறுதியும்விழைகின்ற யாவிலும் வெற்றிக்கு வழியே!உடன் உழைப்போர்க்கும் வழியை விடு!உன் உழைப்பால் சிகரம் தொடு!

Read more

சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 7

This entry is part 7 of 12 in the series பயணக்கட்டுரைத் தொடர்

தேவர்களின் தேசம் நோக்கி: தேவப்பிரயாகையிலிருந்து பத்ரிநாத் வரை ரிஷிகேஷிலிருந்து பேருந்து அதிகாலையில் புறப்பட்டது. மலைகள் இன்னும் தூக்கத்திலிருந்து விழிக்கவில்லை. கங்கை மட்டும் நித்தமும் போல் விழிப்பாக ஓடிக்கொண்டிருந்தது. “தேவப்பிரயாகை வரை இரண்டு மணி நேரம்தான்” என்று தேவநாதன் சொன்னது கேட்டு, முதியோர்…

Read more

நல்லாச்சி – 24

This entry is part 24 of 41 in the series நல்லாச்சி

உலகத்து வெயிலெல்லாம் உம்மேலதான்’செல்லமாகக் கடிகிறாள் நல்லாச்சிநட்புகளுடன் விளையாடும் பேத்தியைஉச்சிப்பொழுதின் வெப்பம்வாட்டுமென்ற அக்கறையில்கலந்தாலோசித்த பட்டாளம்திருவிழா விளையாட்டைத் தேர்கிறதுஅறங்காவலராக்குகிறது நல்லாச்சியை செங்கற்களே மூர்த்தங்களாய்அகப்பட்ட பூக்களே தோரணங்களாய்வடிவெடுக்கிறது சப்பரம்பூஜைப்பொருட்கள் ஒருவன் உபயம்நைவேத்யம் ஒருத்தி கொணர்கிறாள்காற்றில் ஒருவன் கொட்டுமுழக்கதாத்தாவின் கைத்தடி நாகஸ்வரமாகிறதுஏதும் கொணராத ஒருத்தியைவிலக்குகிறது கூட்டம் பதைக்கிறாள்…

Read more

நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 6 (நிறைவுப்பகுதி)

“ஏஞ்சலினா பாடிக்கொண்டிருந்தாள்… “மேய்ப்பன் அவனே, ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில். மன்னவன் அவனே, மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்”. நானும், என் தம்பியும், மனைவியும் கேட்டுக்கொண்டிருந்தோம்.. அப்போது எங்களுக்குத் தமிழ் தெரியாது.. போனது ஜான் பெர்ணான்டஸின் வீடு… ஏஞ்சலினா குரல் இனிமையில்…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 8 – மொழியாக்கம்

காக்கம்மா கிளியம்மா ‎ஒரு புளியமரத்தில் காக்கம்மாவும் கிளியம்மாவும் இருந்தன. காக்கம்மாவுடையது கூடு. கிளியம்மாவுடையது வீடு. ஒருநாள் இராத்திரி பலத்தச் சூறாவளி காற்றும் மழையுமாக இருந்தது. அதில் அந்தக் காக்கம்மாவின் கூடு கொஞ்சம் பறந்துபோனது. கிளியம்மாவுடையது வீடு இல்லையா… அதற்கு எதுவும் ஆகவில்லை.…

Read more

சின்ன வேஷம்

சின்னது, நடுத்தர அளவு, பெரியது எனக் கலந்துகட்டி இருக்கும் உருளைக்கிழங்கு மூட்டையை டபக்கெனத் திறந்து உருட்டி விட்டாற்போலச் சின்னப் பையன்கள், பெண்கள், கொஞ்சம் வளர்ந்தவர்கள், கொஞ்சம் உயரமானவர்கள் என மாணவ மாணவிகள் பள்ளிக்கூடத்தில் பரவி இருந்தார்கள். என்ன… நோ யூனிஃபார்ம். ஏனெனில்…

Read more

மருத்துவர் பக்கம் -17: H5N1 பறவைக் காய்ச்சல் 

இப்போது பறவைகளிடத்தில் பரவி வரும் H5N1 வைரஸ் நமது பூமியில் பிறந்து கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேல் ஆகிவிட்டது. 1996-1997-களில் தென் சீனாவில் உள்ள வாத்துப் பண்ணைகளில் ஆரம்பித்து, அங்கிருந்து வலசை செல்லும் வனாந்திரப் பறவைகளில் தொற்றி, ஐரோப்பா – அமெரிக்க…

Read more

காற்றில் உதிரும் கணம்

சாளரத்தைத் திறந்தவள்சன்னமாய்ச் சிரித்தாள்காத்திருப்பின் ரகசியம்காற்றில் கலந்த கணம் உள்ளக் கிளர்ச்சி எல்லாம்ஊர்வலமாய்ப் போகுதுவெள்ளம் திரண்டது போல்வெகுளித்தனம் மீறுது கள்ளத்தனம் எல்லாம்காணாமல் போனதுகரை கடந்த அன்பு இங்கேகரம் கோர்க்கப் பார்க்குது ஒற்றை மலர் தனியேஒய்யாரமாய் நின்றதுஎட்டிப் பார்த்த அவளைஏறெடுத்துப் பார்த்தது சாய்வது போல்…

Read more

அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 5: விதியா? வஞ்சனையா?) 

This entry is part 26 of 54 in the series அசுரவதம்

விந்திய மலைத்தொடரின் சிகரங்களில் விடியற்காலையின் முதல் பொன்னிற ஒளி விழுந்தபோது, துங்கபத்திரை நதி தன் நீலத் தோள்களில் அந்த ஒளியை ஏந்திக்கொண்டு, சலசலத்துக்கொண்டு ஆக்ரோஷமாகப் பாறைகளுக்கிடையே நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்தச் சலசலப்புகள் கிஷ்கிந்தைக்கு வர இருக்கும் துயரங்களுக்கான கிசுகிசுப்பைப் போன்று இருந்தன.…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 14 – மொழியாக்கம்

This entry is part 13 of 18 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

தனாபதா (たなばた) முன்னொரு காலத்தில் ஜப்பானியக் கிராமத்தில் ஒரு இளைஞன் வசித்து வந்தான். அவன் வயல்களில் வேலை செய்வான். ஒரு நாள் அவன் வயல்வெளியில் தன் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினான். வழியில் குளத்தின் கரையில் அழகிய ஆடை கிடந்தது. அது…

Read more