நல்லாச்சி – 14
கிடத்திய கிடுகில் வைக்கோல் பரப்பிஅதற்குக் குளிராது வேட்டி போர்த்திசுடுசாதம் கொட்டிப்பரத்துகிறாள் நல்லாச்சிமுத்தாய்ச்சொட்டும் துளிகளெல்லாம்சத்தமில்லாமல் பயணிக்கின்றன கிடுகு வரை அம்பாரச்சோறு அடங்குகிறது அண்டாவில்சம்பாரம் பயணிக்கிறது அத்தோடுமுற்றத்து முருங்கை சாம்பார் உசத்தியாம்கிரீடமாய்ப் பயணிக்கிறது நல்லாச்சி தலைமேல்சோற்றுப்படையெடுத்துச் செல்கிறாள்நடவு வயல் வீரர்களை நோக்கிகுழம்பும் கறியுமாய் ஆயுதமேந்தி…