இலக்கியம்

என்ன செய்ய?

இருந்தபோது தெரியவில்லை இதயமும் இருப்பும்உணர்ந்துவிட்டான் இப்போது!கிடைக்கையில் உணரவில்லை கிட்டுவது பெரிதெனஅறிந்துகொண்டான் இப்போது! அன்பென அறிந்தே செய்தவனின் அலட்சியத்தைஅள்ளியெறிந்தான் இப்போது!தனிமையைத் துணைகொண்டவன் தவிக்கிறான்!அணங்கவளின் நினைவை என்ன செய்ய.

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 16 – மொழியாக்கம்

This entry is part 15 of 15 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

சிகாராதாரோ (力太郎) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஒரு தாத்தாவும் பாட்டியும் தனியாக வசித்தனர். அவர்கள் தண்ணீரில் குளிப்பதற்கு அச்சப்பட்டனர். நீண்ட நாள்களாக அவர்கள் குளிக்காமல் இருந்தனர். அதனால் அவர்கள் தோல் சொரசொரப்பாகவும் அழுக்காகவும் இருந்தது. ஒருநாள் அந்தச் சொரசொரப்பை அவர்கள் தேய்த்துக்…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 12 – மொழியாக்கம்

கல்யாணம் ஆகாத கொசு தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன்  ஒரு ஊரில் ஒரு கொசு இருந்தது. அதற்கு ஒருநாள் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற ஆசை வந்தது. அதோடு நல்லவனாகப் பார்த்துக் கல்யாணம் செய்துகொள்வோம் என்று புறப்பட்டது. கொசு சென்றுகொண்டிருக்கையில்…

Read more

கீழ்நிலை உயிரினம்

ஆயிரமாயிரம் ஆண்டு காலம் மடியும் உயிர்கள்ஆழியின் ஆழ மடியில் சேரும்;மண்ணும் சேறும் நீரும் மூடமருளச் செய்யும் இருள் அங்கே சூழும்! பூமித் தாயின் வெப்பம் கனன்றுபுதைந்த உயிர்கள் கொள்கலனில் உருவம் மாறும்;அழுத்தம் தந்து மேலும் இயற்கை சமைக்கஅடியில் உருவாகும் அமுதம் கருப்புத்…

Read more

இனியவன் – 3

This entry is part 3 of 3 in the series இனியவன்

”முகத்தைப் பார்க்க முடியாது.. விழிகளைப் பார்த்தேன்.. கிடுகிடுவென என் இதயத்தைத் துளைத்தது.. யாருக்கும் வசப்படாத ஹிருதயம் என்னுடையது.. எதிரிகளுக்கு வாளால் பேசும்.. நண்பர்களைக் கௌரவிக்கும்.. ஆனால்… ஆனால் இவளது பார்வை.. பின் கைகளை மறைக்கவில்லையே அவள்.. என்ன அழகான ஓவியம் ஹென்னா…

Read more

நல்லாச்சி – 26

This entry is part 26 of 26 in the series நல்லாச்சி

நல்லாச்சியிடம் கதையளக்கிறாள் பேத்திகண்டபடி பறக்கிறது கற்பனைக்குதிரைகதை சொல்வதும் அளப்பதும்ஆச்சிகளின் வழக்கம்இங்கு இன்றுஅது பேத்தியின் முறை நல்லாச்சியின் முதல் விமானப்பயணம்குதூகலம் பாதிகலவரம் பாதியென இருப்பவளிடம்தான்கண்ணகல உரைக்கிறாள் பேத்திமேகங்களின் மேல் ஓய்வெடுக்கும் நிலவைவன்னமிகு இந்திரலோகத்தைமேலோகம் சென்ற மூதாதையரைகண்குளிரக் காணலாமென்கிறாள்அறிவுக்கும் சந்தேகத்துக்குமிடையேஊசலாடுகிறது நல்லாச்சி உள்ளம் உயரப்பறந்த…

Read more

அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 9: புதிய நட்பு

This entry is part 30 of 30 in the series அசுரவதம்

மதங்கமுனியின் ஆசிரமம் சற்றே காலத்தில் உறைந்து நின்றது போல இருந்தது. சபரியின் மரணம் குறித்த செய்தி சுற்றி இருந்தவர்களுக்குத் தெரிந்து அங்கே குழும ஆரம்பித்திருந்தார்கள். இராமன் கலங்கி நின்றான். சற்று முன்பு வரை தாய் அன்பின் ஊற்றாக நின்ற ஒரு மூதாட்டி,…

Read more

வலைப்பூ – 1

This entry is part 1 of 1 in the series வலைப்பூ

அர்ஜுனுக்கு வயது நாற்பத்திரண்டு. போன மாதம்தான் முடிந்தது. பெரிய கொண்டாட்டமெல்லாம் இல்லை. அவனது நாட்காட்டியில் அது வெறும் ஒரு வேலைக்குறிப்பு மட்டும்தான். ‘வழக்கமான சுயபரிசோதனை, முப்பது நிமிடங்கள்’ என்றிருக்கும். பின் அதை முடிந்தது என்று குறியிட்டுவிட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்துவிடுவான். அவன்…

Read more

மாறாததொன்றே மாறாதது

“திவாளிக்கு டிரஸ் கலர் பார்த்துட்டியா?” என்றாள் ராஜி. அது அவர்களின் அலுவல் அறை. சுவரில் பதிந்திருந்த அந்த அழகிய சதுர காலண்டரில் 7 நவம்பர்-2050 என்று காட்டியது. இன்னும் ஆறு நாளில் தீபாவளி. இடைவேளை நேரம். தினமும் மதியம் பத்து நிமிடம்.…

Read more

ஒற்றையடிப் பாதை

பிறவாமை வேண்டும் என்பதேஅனைவரின் இறைஞ்சலாகினும்வேண்டாமல் பிறத்தலும், இறத்தலும்இடையே போராடி வாழ்தலும்காலத்தின் கட்டாய விதி. அவரவர் வகுத்துக்கொண்டகுறுகிய வட்ட எல்லையில்செக்கைச் சுற்றி உழன்றுஓய்வில்லாது பொருள் ஈட்டிடபணிப்பது வாழ்வின் அயற்சி. கதிரொளியும் புள்ளினக் கூவலும்சாளர வழி கூட ரசிக்க இயலாதுநில்லாது ஓடும் காலச்சக்கரத்தினைதுரத்தி ஓடிக்கொண்டே…

Read more