இலக்கியம்

சின்னதாய் ஒரு சர்வீஸ்

“என்னோட லுங்கியைத் துவைக்கலியா?” என்று தலையைத் துவட்டிக்கொண்டே கேட்டான் தியாகு. “குளிச்சு முடிச்சாச்சா?” கேட்டாள் மனைவி வசந்தி. “ஆமா” “பாத்ரூம்ல கால் அடிக்கு ஏன் தண்ணீ நிக்குது?” “நின்னுகிட்டே குளிச்சேன். அதான்” “போய் அடைப்பைக் குத்தி விடுங்க” “இப்போ தான் குளிச்சேன்…

Read more

மகளே.. என் மகளே!

வீட்டுத் திண்ணையில் காலைச் சூரியன்அந்தி சாயும் வரைக்கும் என் கண் தேடும்,இத்தனை வருடம் காலடிச் சத்தம்கேட்டதெல்லாம் இப்போதேன் தூரம். ஊர் தாண்டி நீ போனதனால்,சுவரெல்லாம் நீ சாய்ந்த இடம்,பாயெல்லாம் நீ படுத்த நினைவுகள்,பேச ஒரு வார்த்தை இல்லையே நீயின்றி. பழைய சோற்றைக்…

Read more

பூப்போட்ட மஞ்சள் சட்டை

  இன்னும்கூட நன்றாக நினைவிருக்கிறது. அது பூப்போட்ட வெளிர் மஞ்சள் நிறச்சட்டை. அவன் அப்பொழுது ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். வீட்டிலிருந்த ஐவரில் மூவர் பெரிய மனிதர்களாகிவிட, நான்காவது அண்ணன் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். இவன்தான் கடைக்குட்டி. அனைவருக்கும் செல்லப்பிள்ளை என்றாலும் அப்பாவிற்கு…

Read more

இலக்கம் 136

136, என் மனதுக்கு இணக்கமான எண். என் பால்ய, பதின்ம வயது நினைவுகளால் நிரம்பிய வீட்டின் கதவு எண். வாசல் முதல் பின்புறம் வரை சுமார் நூறடிக்கு மேல் நீண்டிருக்கும் பழங்கால வீடு. வாசல் திண்ணையில் ஆரம்பித்து ஒவ்வொரு இடமும் தன்னுள்…

Read more

என் பேனா மையின் நிறம்

நன்னாளும் நன்முழுத்தமும் நன்கறிந்துபகை நாட்டார்க்குப் பறையறைந்துதூதன் சொல் கேட்டறிந்துசமாதானத்திற்கு வழியில்லை என்றுணர்ந்துஆநிரையும் முதியோரும் பிணியுடையோரும்அந்தணரும் குழவிகளும் பெண்டிரும்அரணுக்குள் பொத்திய பிறகு… குறித்ததொரு உதயப் பொழுதில்முரசறிவித்து படை நிறுத்திஅந்தி வரை சமரிட்டுஎதிர்ப்புறம் மடிந்த வீரர்கள்எரியூட்ட நேரங் கொடுத்துஇறுதியில் நிராயுதபாணியாய் சரணடைந்தோரைமரியாதையோடு சிறைப்பிடித்துஅறநெறியில் நிலம்…

Read more

பிள்ளை மனசு

விஜி நான் உள்ளே வரும்போதே சொல்லிவிட்டாள். “பட்டாளத்தம்மா உங்களைப் பார்க்கணும்ன்னு சொன்னாங்க..” சட்டையைக் கழற்றப் போனவன் நிறுத்திவிட்டேன். “வா.. போயிட்டு வந்தரலாம்…” “டிபன்?” “அதெல்லாம் அப்புறம்..” நான்கு வீடுகள் தள்ளித்தான் அவர்கள் வீடு. ‘பட்டாளத்தம்மா’ என்பது நாங்கள் வைத்த பெயர். சொந்தப்…

Read more

வாழ்தல் இனிது

“நான் வரணுமா? வாய் சும்மா இருக்காதே… எசகுபிசகா கேட்டு வைப்பேனே” என்றான் தர்மன். அவனிடம் காஃபி தம்ளரைக் கொடுத்தபடி முறைத்தாள் ஜீவிதா. இந்த ஞாயிறு ஜீவிதாவின் நெருங்கிய பள்ளித் தோழி பாமா வீட்டுக்குச் செல்வதாகத் திட்டம். இரண்டு ஆண்டுகளுக்குமுன் ஒரு திருமண…

Read more

மயிற்பீலி- சிறுகதைத் தொகுப்பு – மதிப்புரை – கல்பனா ரத்தன்

எழுத்தாளர் அனுராதா ஆனந்த் இதுவரை ஏழு மொழிபெயர்ப்பு கவிதைத்தொகுதிகள் வெளியிட்டுள்ளார். மயிற்பீலி சிறுகதைத் தொகுப்பு இவரது எட்டாவது புத்தகம் மற்றும் முதல் சிறுகதைத்தொகுப்பு. இப்புத்தகம் இவ்வருட ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது பெற்றுள்ளது. இது சால்ட் பதிப்பக வெளியீடு. தொகுப்பில் மொத்தம் ஏழு…

Read more

அனைவரும் போற்றும் அன்னை!

நவராத்திரி என்றழைக்கப்படும் ஒன்பான் இரவில் முப்பெருந்தேவியரான மலைமகள், அலைமகள், கலைமகளை வழிபடும் மரபு நம்மிடம் இருந்துவருகின்றது. முதல் மூன்று நாள்கள் வீரத்தின் அடையாளமான மலைமகளும் (துர்க்கை), அடுத்த மூன்று நாள்கள் செல்வத்தை அளிக்கும் அலைமகளும் (இலட்சுமி), இறுதி மூன்று நாள்கள் கல்வியின்…

Read more

கி. சரஸ்வதி கவிதைகள்

காதல் கோள்கள் நாம் பூமியில் மட்டும்சந்தித்துக் கொள்ளவில்லை நண்பனே மின்னிக் கிடக்கும் பலகோடி நட்சத்திரங்கள்எப்படி வந்தன என்று கேட்டாய்நான் உடனே ஒரு முத்தம் தந்தேன்அவை ஆகின பல கோடியே ஒன்றுதாரகைகளெல்லாம் முத்தங்களெனில் நிலவு?அது சற்றே நீண்ட முத்தம் பால்வெளி நிரப்பிய காதலின்போதாமையில்…

Read more