இலக்கியம்

அதிசயப்புல்லாங்குழல்

மூங்கிலூர் கிராமத்தில் உள்ள சிறுவன் ஆனந்தன் பள்ளி விடுமுறை நாட்களில் அப்பாவுக்குத் துணையாக ஆடு மேய்ப்பான். அன்று அப்பா வரவில்லை. அவன் மட்டும் ஆடுகளை மேய்த்துக் கொண்டு மூங்கில் காட்டுக்குள் போய்விட்டான். மூங்கில் காட்டில் யானைகளும் புலிகளும் பாம்புகளும் நரிகளும் அதிகம்…

Read more

தமிழ் ஒளியின் சிறார் பாடல்கள்

சிட்டு குள்ளக் குள்ள சிட்டுகொட்டைப் பாக்கு சிட்டுஅம்பு போல தாவிஆகா யத்தில் பறக்கும்!கம்பு நெல்லு பொறுக்கும்காட்டில் எங்கும் இருக்கும்கூரை மேலே வந்துகுந்தி சீட்டி அடிக்கும். கிளி அழகுக் கிளியே இங்கே வா!அருமைக்கிளியே இங்கே வா!பழத்தைப் போல உன்மூக்கு!பச்சைக் காய் போல் உன்…

Read more

கரும்பைக் கண்ட களிறன்

களிறனும் பிடிகாவும் யாருனு தெரியுமா? களிறன் அண்ணன் யானை, பிடிகா  தங்கச்சி யானை. ரெண்டு பேரும் எப்பவும் ஜாலியா விளையாடுவாங்க. பிடிகா மரத்தில் இருந்து பழங்கள் பறிக்கும், தங்கச்சிக்கு அன்பாக் கொடுக்கும். களிறனுக்குத் தந்தம் இருக்கு, அதனால மண்ணுக்குள்ள இருக்கற கிழங்குகளைத்…

Read more

ஜிங்கா ருசித்த தேன் 

“போட்டி ஆரம்பிக்கப் போறோம் வாங்க வாங்க” உற்சாகமா எல்லாரையும் அழைச்சாங்க பாட்டிப்பூச்சி. அது பட்டாம்பூச்சி உலகம். அங்க பல விதமான பட்டாம்பூச்சிகள் வாழ்ந்தன. பல வண்ணங்கள்ல இருந்தன. பல வடிவங்கள்ல இருந்தன. பட்டாம்பூச்சிகள் உலகத்தில ரொம்பப் பெரிய பூந்தோட்டமும் இருந்தது. உலகத்தில…

Read more

நல்லாச்சி – 14

This entry is part 14 of 17 in the series நல்லாச்சி

கிடத்திய கிடுகில் வைக்கோல் பரப்பிஅதற்குக் குளிராது வேட்டி போர்த்திசுடுசாதம் கொட்டிப்பரத்துகிறாள் நல்லாச்சிமுத்தாய்ச்சொட்டும் துளிகளெல்லாம்சத்தமில்லாமல் பயணிக்கின்றன கிடுகு வரை அம்பாரச்சோறு அடங்குகிறது அண்டாவில்சம்பாரம் பயணிக்கிறது அத்தோடுமுற்றத்து முருங்கை சாம்பார் உசத்தியாம்கிரீடமாய்ப் பயணிக்கிறது நல்லாச்சி தலைமேல்சோற்றுப்படையெடுத்துச் செல்கிறாள்நடவு வயல் வீரர்களை நோக்கிகுழம்பும் கறியுமாய் ஆயுதமேந்தி…

Read more

மன்னிப்புக் கோர மறுப்பவள்

அவர்கள் அவளிடம் சொன்னார்கள்அவள் ஒரு அழகி அல்ல என்று,அழகுக்காக அவர்கள் வரையறுத்திருந்தலட்சணங்கள் எதுவும் அவளிடம் இல்லையென்று. அவளது உடலின் எடை அதிகமென்றார்கள்அவளது சிரிப்பு உரத்ததென்றார்கள்அவளது தோலின் நிறத்தைக் குறிப்பிட்டார்கள்அவளது கனவுகள் மிக உயரமானவை,ஒரு பெண் எட்ட முடியாதவை என்றார்கள். அவர்கள் ஒருபோதும்…

Read more

வறுமையும் விழாக் காலத் தனிமையும்

விழா நாள்கள் பலருக்கும் மகிழ்ச்சியைக் கூட்டும் நாள்கள். குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஒன்றுகூடும் நாள்கள். ஆனால் கோடிக்கணக்கான மக்களுக்கு, இதே விழாக் காலங்கள் தனிமையின் கொடூரமான நினைவூட்டல்களாக, சமூகப் புறக்கணிப்பின் வேதனையான அனுபவங்களாக மாறுகின்றன. வறுமை என்பது வெறும் பொருளாதாரப் பற்றாக்குறை…

Read more

நல்லாச்சி – 13

This entry is part 13 of 17 in the series நல்லாச்சி

திடலின் ஓரத்திலிருக்கும்ஆலமரத்தைக் கண்ணுறுந்தோறும்ஆவலும் பயமும் கொள்வாள் பேத்திகிளிகளைப்போன்ற அக்காக்களும்அக்கக்கோவெனும் கிளிகளும்இறுகப்பற்றி ஊஞ்சலாடும் விழுதுகள்ஆசையையும் பயத்தையும் விதைத்திருந்தன அவளுக்குள் விண்ணுக்கும் மண்ணுக்கும்பாலமாயிருந்த விழுதுகளில் சிலபாதாள லோகத்தையும் பார்த்துவரப்புகுந்திருந்தனஎண்ணெய் தடவாத முடிக்கற்றையெனநுனிகளில் பிளந்து கிளைத்திருந்தன சிலஅக்கையொருத்தி கைபற்றிச்சேர்க்கவிழுது பற்றி ஆடிய பேத்திஅதே வீச்சில்பூமியை முத்தமிட்டுப்…

Read more

நூலகம்

நீங்கள் அந்தச் சொல்லைக் கேட்டதும் என்ன நினைக்கிறீர்கள்? அமைதியான பெரிய மர அலமாரிகளில் ஒழுங்காக அடுக்கப்பட்ட புத்தகங்களா? அல்லது தூசி படிந்த பக்கங்கள், யாரும் படிக்காத பழைய புத்தகங்களா? அவர் அந்தக் கதவைத் தள்ளிப் பார்த்தார், உள்ளே ஒரு குளிர் காற்று…

Read more

வழி நடத்தும் நிழல்கள்

மந்தையில் ஆடுகள் ஒன்றாக நகருகின்றனதலை குனிந்து குளம்புகளின் தூசியைத் தட்டிமேய்ப்பனின் நிழலைப் பின்தொடருகின்றன.அதுவே சத்தியம் எனகூட்டம் கூட்டமாகக் குவிகின்றன.அவற்றின் காதுகள்பொய்யான உறுதிமொழிகளுக்கு மட்டுமேசெவிமடுக்கப் பழகி விட்டன. செல்லும் பாதை குறித்து எந்தக் கேள்வியுமில்லைஅடைய வேண்டிய தூரம் பற்றி அளவீடு ஏதுமில்லைகோலை உயர்த்தி…

Read more