சிறுகதை

திரைச்சீலை

நல்ல கஜல் வரிகள் கிடைத்தால் போதும், உம்ராவ் அதை முணுமுணுத்துக்கொண்டே நிலையில் சாய்ந்திருந்து சுட்டு விரலில் என்னைச் சுற்றிச்சுற்றி அவிழ்ப்பாள். பம்பரத்தில் சாட்டையைச் சுற்றுவதுபோல் அடுக்கடுக்கான வரிகளாக இல்லாமல் கோணல்மாணலாக இருந்தாலும் அழகாக இருப்பேன், சுற்றப்படுவது அவள் விரலில் அல்லவா. கடைசிச் சுற்றில் நான் நிற்கும்போது சுட்டுவிரலின் நுனியைப் பார்ப்பேன், சிவந்து போயிருக்கும், அவளுக்குத் தெரியாமல் லேசாக வருடிக்கொடுத்துவிடுவேன். மருதாணிச் சிவப்பும் இரத்தம் கன்றிய சிவப்புமாக ரோஜாவையே தோற்கடிக்கும் நிறத்தில் அப்பப்பா விரல்களா அவை.

Read more

உலகின் சின்னஞ்சிறு காதல் கதை

பாதி ஒளியிலும் பாதி இருட்டிலுமாக மூழ்கிக் கிடந்தது அந்தப் பேருந்து நிறுத்தம். அதற்கு நேர் மேலே கிட்டத்தட்ட நீல நிறமாயிருந்த நிலா வானில் மிதந்து கொண்டிருந்தது. சன்னமாகத் தூறிக் கொண்டிருந்தது மழை. கூரையின் கீழ் எதிரெதிர் முனைகளில் அவர்கள் நின்றிருந்தார்கள் – அவன் ஒளியிலும் அவள் இருளிலும்.

Read more

ஸேவியர்

“கதவு திறந்து தான் இருக்கு. வா”**வாயை நன்றாகத் திறந்து கொஞ்சம் பின்பக்கத்தைச் சுருக்கி சாக்ஸை வலதுகாலில் நுழைத்து நிமிர்கையில் செல்லிடைப் பேசியின் சிணுங்கல் பார்த்தால் மேலாளர். உள்ளே அறையுள் உடை மாற்றிக் கொண்டிருந்த மனைவியும் பெண்ணும் இன்னும் வரவில்லை. எடுத்தான். “ஹலோ..…

Read more

பயம்

”வாழ்த்துக்கள் துர்காஆஆஆ! நம்ம காதலுக்கு இன்னியோட நாலாவது
அனிவர்சரி” அங்கிருந்த பெயர் தெரியாத பூக்களின் இதழ்களை
உள்ளங்கையில் வைத்து அவள் மீது ஊதினான்.
துர்கா எதுவும் பேசவில்லை.

Read more

லட்டு

மருத்துவர் சரவணக்குமார்  பின்னங்கால்களைத் தூக்கிப் பார்த்தார். லட்டு வலி தாங்கமுடியாமல்  கத்தினான்.தலையைத் திருப்பிக் கடிக்க முயன்றான் . கூம்பு வடிவிலான அந்தப் பிளாஸ்டிக்கை மட்டும்  அவனது தலையில் பொருத்தமால் இருந்திருந்தால் மருத்துவரின் விரல்கள் துண்டாகியிருக்கும்.அது பாதுகாப்புக் கவசமாக  உதவியது.

Read more

சிறுகதைப் போட்டி – கானல், அமீரகம்

வணக்கம். மீண்டும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமத்தின் சார்பில் ‘கானல் அமீரகம்” வழங்கும் மாபெரும் உலகளாவிய சிறுகதைப் போட்டியை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தச் சிறுகதைப் போட்டியை உங்கள் நண்பர்களுக்கும், நீங்கள்…

Read more

டயானா ஹேர் கட்

டயானாவின் அதீத அழகு அவளைக் கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆண்களைப் போல இடதுபுறம் வகிடு எடுத்து மற்ற முடிகளை ஆங்காங்கே துண்டு துண்டாக வெட்டி பின்புறம் லேசாக ஒட்ட வெட்டிய அவளின் ஹேர்கட்தான் டயானாவின் அழகு மேலும் தனித் தன்மையோடு மிளிரக்காரணம் என்று நினைத்தாள். விதவிதமான ஓவர் கோட்டுகளுடன் முட்டி வரையிலான ப்ராக் அணிந்து அதற்கு மேட்சான சிறிய வகை தோடுகள் கைப்பைகள் கழுத்தில் முத்துப் பெண்டன்ட் என அவள் ஒரு ட்ரண்ட்செட்டராக வலம் வந்த காலத்தை அவள் புகைப்படமாக இருப்பதை எங்கே பார்த்தாலும் சேகரித்து வைத்துக் கொள்வாள்.

Read more

ஐயுறவு

ரம்யா எதுவும் பேசவில்லை. அவளுக்கு அதிர்ச்சி இல்லை. பழகி விட்டது. நேற்றே மனம் தயாராகி விட்டது. நரம்புகள் உணர்விழந்து புண் புரையோடி இருப்பதே தெரியாமலாகி விட்ட காயத்தில் ஊசி குத்துவது போல் எந்த உணர்வும் காட்டாமல் தேநீர் தயாரித்தாள்.

Read more