நாள்: 22

இல்லாத திருநாளா கமருதீன் துஷார கூப்ட்டு “ப்ராட் அப்-ன்னா வளர்ப்ப பத்தி பேசுறதாமே? அது உங்க டாடி, மம்மிய அசிங்கப்படுத்துற மாதிரியாமா? ஆக்சுவலா நான் ப்ராட் அப் னா “வாங்கிட்டு மேல வா”ன்னு தான் அர்த்தம்ன்னு நெனச்சேன். நல்ல வேள பாருவும், வினோத்தும் என்ன எஜுகேட் பண்ணாங்க. அது நாற வாயி, இது வேற வாயி. டோன்ட் ஒரி….ஐ ஆம் சாரி”ன்னு மன்னிப்பு கேட்டான். பாவம் இவனே லூஸு.

கேப்டன்ஸி டாஸ்க். இதெல்லாம் ஒரு டாஸ்காடான்னு தான் இந்த டாஸ்க்குக்கு பேரு வச்சிருக்கனும். இதுக்கு ப்ரவீன் தான் கேப்ட்டன்னு வாயாலயே சொல்லி இருக்கலாம்.

பதவி ஏத்த உடனேயே கேப்டன் பிரபாகரனா மாறி…”இனி இந்த வீடு ஒரு ஆர்மி கேம்ப். டிசிப்பிளீன்…டிசிப்பிளீன் தான் எனக்கு ரொம்ப முக்கியம். ரூல்ஸ மீறுனா மீல்ஸ கட் பண்ணுவேன்”னு சொல்லிட்டு பாருகிட்ட “என் கேப்டன்ஸிக்கு எதுவும் பங்கம் வராம பாத்துக்கோம்மா”ன்னு கெஞ்சுனான்.

இப்போ டீம் பிரிச்சானுங்க. என்னத்த பிரிச்சானுங்கன்னே தெரியல, எல்லாரும் எல்லா இடத்துலேயும் இருக்கானுங்க. பாருவும், கமரும் மட்டும் தனி இடத்துல இருக்கானுங்க. இப்போ வீடு ஸ்வாப். சுபிக்சா நார்மல் ஹவுஸ் போக, கலை சூப்பர் வீட்டுக்கு வந்தான். “வீட்டு தல, சூப்பர் வீடு, ஃப்ரீ நாமினேஷன் எல்லாத்தையும் ஒரே ஆள் வச்சுக்க முடியாது உனக்கு தேவையான ஒண்ணு மட்டும் எடுத்துக்கோ”ன்னு சொல்ல, ப்ரவீன் கேப்டன் பதவிய எடுத்துகிட்டு சூப்பர் வீடு & ஃப்ரீ நாமினேஷன கனி அக்காவுக்கு தார வாத்துட்டான். பாருவுக்கு பொறுக்க முடியல “குடுத்த வச்சு ஆத்மா…மூணு வாரமா நாமிநேஷன் ஃப்ரீயா இருக்கா…எனக்கும் வந்து வாய்க்குறானுங்களே…நீ நல்லா இரும்மா”ன்னு வயித்தெரிச்சல்ல வாயில புகையோட வாழ்த்துச்சு.

இப்போ சுபி அவ ஃப்ரீ நாமிநேஷன குடுக்குற நேரம். யோசிக்கவே இல்ல வியான்னாவுக்குன்னு சொல்லிட்டா. என்ன காரணம்னு பிக்கி கேட்டதுக்கு நீட்டி முழக்குனா…இதக் கேட்டதுக்கு அப்பறம் பாரு “எனக்கு ஏன் குடுக்கலன்றதுக்கு ரீசன் சொல்லு?”ன்னு கேக்க, “அதெல்லாம் அப்பறம் சொல்லுவாங்க அந்தப் பக்கமா போயி கேட்டுகோ”ன்னு ப்ரவீன் சொல்லிட்டான்.

சூப்பர் வீட்டுக்கு வந்த கனியக்கா முத டாஸ்கா அவங்களோட துணி மணிகள பாருவ எடுத்துட்டு வந்து டோர் டெலிவரி செய்ய சொல்ல, “ஏண்டா, சொந்த வேலையெல்லாம் சொல்றீங்க? இதெல்லாம் செய்ய முடியாதுடா”ன்னு பாரு வழக்கம் போல ஆத்த….அப்பறம் “சரிடா கொண்டாந்து குடுக்கனும் அவ்வளவுதான?”ன்னு கொண்டு போச்சு, அங்க கைய நீட்டி நின்னுட்டு இருந்த கனி கைல குடுக்காம கீழ போட்டுட்டு போயிருச்சு. “இது மரியாதை குறைவு சோ மஞ்சப்பை நெறையா மன்னிப்பு வேணும்”னு கனியக்கா சொல்ல, பாரு நோன்னு சொல்லிடுச்சு.

பின்ன கனியக்கா தர்ணா பண்ண, பாருவும் பக்கத்துல வந்து உக்காந்துச்சு. நியாயம் பேச வந்த ப்ரவீன “தள்ளி நில்லு, சொல்லுவதெல்லாம் பொய்…மேல வைக்காத கை”ன்னு கேச மாத்தப் பாக்க, கனியக்கா “சரி அப்ப வேணும்னா நான் மன்னிப்பு கேக்குற வரைக்கும் சாப்டாம இருக்கேனே”ன்னு ஒரு குண்டப் போட. பாரு “ரைட்டு, சாப்பாட்டு விஷயத்த கைல எடுத்துட்டாயா! இனி நம்ம சோத்துல தான் மண்ணு விழும்”ன்னு புரிஞ்சுக்கிட்டு மன்னிப்பு தான யார்கிட்ட கேக்குற, பாருகிட்ட தான கேக்குற இந்தா வாங்கிக்கோ ராஜமாதா”ன்னு நக்கல் பேச்சு பேச…”ராஜமாதன்னா ரயிப்புன்னு ஒண்ணு விட்டுருவேன்”னு சொல்லவும் ஓடிருச்சு.

உங்கள அடையாளம் காட்டதான் இந்த ஷோ. “மேடையில திறமைய காட்ட வந்தவங்களுக்கு மேக்கப் எதுக்கு? சோ உங்க ஆடைகள், ஆபரணங்கள், மேக்கப் உபகரணங்கள் இதெல்லாத்தையும் எடுத்துகிட்டு உங்க உள்ளாடைகளையும், யூனிபார்ம் சட்டையையும் குடுப்பேன். ஆனா ஒரு கண்டிஷன். மேக்கப் இல்லாத மூஞ்சியோட யாரும் கேமராக்கு முன்னாடி வந்து நிக்கக் கூடாது”ன்னு சொல்ல, எல்லாரும் பொட்டிகள கட்டி உள்ள வச்சுட்டானுங்க.


Series Navigation<< நாள்: 16

Author

Related posts

நாள்: 21

நாள்: 20

நாள்: 19