கொழுந்து வெயிலின்
நிழலினை
முகவாயேந்தி நெற்றிமுத்தமிடுகிறேன்.
அச்சிலிர்ப்பில் பிறக்கும் வலிமையினை
ஓர் நெடிய வரலாற்றின் மீதமர்ந்து
தூதெழுதுகிறேன்
இப்படியாக!
எனக்கு பாத்தியப்பட்ட
கடலின் பவளக் காடுகளை
துண்டாட நீளாத
நின் கரங்களுக்கு
எனது ரேகையில் கோர்த்தெடுத்த
நீர்துளியினை
அணிவிக்க காத்திருக்கிறேனெ!!