கொங்கு வட்டாரவழக்கு – 10: திடும்பம்

This entry is part 6 of 11 in the series கொங்கு வட்டார வழக்கு

த்த பெரியவனுக்கு சாதகம் வந்துதுல்ல கருக்கம்பாளையத்துல இருந்து,நேத்துதா போயீ நம்ம சென்னிமலாபாளத்து குட்டிப்பவுண்டர்ட்ட பாத்துட்டு வந்தம் நல்லாருக்குதுனு சொன்னாங்க..

பொண்ணூட்டலயும் நல்லாருக்குதாமா..

எல்லாம் விசாரிச்சும் நம்ம குமாரு சொல்லிட்டான்,குடும்பமெல்லாம் நல்ல குடும்பம்னு..

நானும் கருக்கம்பாளையத்து நங்கைட்ட கேட்ட அவுங்களும் அருமையா பண்ணலானு சொன்னாங்க..

அடப் பொழையாக்குப்பா,அவட்டபோயி எதுக்கு கேட்ட,

அவ ஊரச்சுத்தி திடும்பம்(ஊர் முழுக்க சொல்வது)அடுச்சுருவா..

நமக்கு ஆவாதவ எவனாச்சும் போய் குசலம் வெச்சறமாட்டானா பொண்ணூட்ல..

அந்த நங்க அப்டீலாஞ்சொல்லாதுங்கத்த..

உனக்கஞ்சாறு தெரிது போ..

Series Navigation<< கொங்குவட்டாரவழக்கு: 8 – கொசலம்

Author

Related posts

நாள்: 21

நாள்: 20

நாள்: 19