ஏனுங்க்கா.. எங்குட்டு போய்ட்டு வர?
மாறம் பொண்டாட்டி தவறீட்டாளமா போ..
அட..
என்னாச்சு,நேத்து கோட பால் கொண்டுவந்தாளே சொசைட்டிக்கு..
பாத்து பேசிட்டு கோட வந்தனே..
நேத்து எல்லாங் கோயலுக்கு போயிறுப்பாங்களாட்ட இருக்குது டெம்பால,இவ சொல்ல சொல்ல கேக்காம கங்குலயே ( ஓரத்துல) உட்கார்ந்துருக்கறா,எப்படியோ தவறி கீழ உழுந்துட்டாளாமா.. ஆஸ்பத்திரி போவ போவ உசுரு போயிறுச்சாமா..
அடப் பேரெழவே.
சவத்த கொண்டுவந்துட்டாங்னா சொல்லு போயிட்டு வந்துருவம்.
பி.கு: கங்குனு, தீ எறிஞ்சவாட்டி கெடைக்கற தணலயும் சொல்வாங்க.