மழைக் கவிதைகள்

எத்தனை யுகங்கள் 

கடந்திருக்கும்

இந்தப் பிரியத்தின் 

மழைத்துளி!


அதன் கண்ணாடி 

மோன உடல்

மிதந்தலைந்தது 

எங்கெங்கே!

மேகத்தின் சுருக்குப்பையில்

நதி சேமித்த வைப்பு நிதியாய்

உப்புக் கடியில்

கடல் பதுக்கிய 

கள்ளப் பணமாய்.

இன்று

மேலிருந்து கீழ் 

குதித்த துள்ளலோடு

என்  உள்ளங்கை

நனைந்து செலவானது

எந்த மேகம்?

எந்த  நதி?

எந்த கடல்?

****************************************************************************

உனக்கென்ன 

என் பிரிய மழையே

வாஞ்சையின்றி

பெய்துவிட்டு போகிறாய்.

இப்போது என் 

வெளியெங்கும் 

நினைவுக் காளான்கள்!

****************************************************************************

Author

Related posts

வழி நடத்தும் நிழல்கள்

நல்லாச்சி – 12

க. அம்சப்ரியா கவிதைகள்

1 comment

தணிகை July 2, 2025 - 9:15 pm
அருமையான கவிதை.
Add Comment