நாள்: 11

பிக்பாஸ் வீட்டுக்குள்ள இன்னும் அந்த நா*ய் சுத்திட்டும் கத்திட்டும் தான் இருக்கு போல. இன்னைக்கு காலையில அலராம் அடிச்ச பிறகும் FJ தூங்குனத பாத்த டாகி வழக்கம் போல கத்த ஆரம்பிச்சுச்சு.

பின்ன நார்மல் ஹவுஸ் ஆளுங்க எல்லாம் சுத்தி உக்காந்திருக்க கலையும், ஆதிரையும் ஒரு பர்மார்மென்ஸ் பண்ணானுங்க. நல்லாத்தான் இருந்துச்சு. கலை இந்த பாரு கூட சேராம இவனுங்க கூட இருந்தா கொஞ்சம் சைன் ஆவான். பாரு கூடவே ஒட்டிட்டு இருந்தா மறுபடியும் சூன்யம் வைக்கதான் போகனும்.

மார்னிங்க் சாங்க்: GBU மாமே…

ஆதிரை காதல் குறும்பு விளையாட்டுகள FJ கிட்ட காமிக்க ஆசப்பட்டு அத டாஸ்க்கோட இணைச்சு புது மாதிரியா காதல் சடுகுடுல ஈடுபட்டுச்சு.

ஆதிரை: நீ பாடு FJ….உன்ன பாடையில பாக்கனும்

FJ: அதுக்கு இன்னும் நாள் இருக்கு…அப்ப முடிஞ்சா நீ பாடிக்கு முன்னாடி பாடி ஆடு

ஆதிரை: அடே நீ பாடும்போது பாக்கனும்னு சொன்னேன்….பாடிக்கிட்டே தோசை ஊத்து

FJ: அப்பறம் தோசை வராது “சை”ன்னு தான் வரும்.

ஆதிரை: சரி அப்ப உக்கி போடு.

FJ: அப்போ தோசைய தூக்கி குப்பையில தான் போடனும். சரி நீ லவ் மூடுல இருக்க, செஞ்சு தொலையுறேன்.

முக்கி முக்கி உக்கி போட்டப்பறம் மறுபடியும் தோசை ஊத்த வந்தான்.

ஆதிரை: இப்ப நீ டான்ஸ் ஆடிட்டே தோசை சுடு.

FJ: உன் கைல இது வரைக்கும் ப்ராக்சர் ஆகியிருக்கா?

ஆதிரை சட்டுன்னு அவன் கையப் பிடிக்க. டென்ஷனாகி மாவுக் கரண்டிய தூக்கிப் போட்டுட்டு போயிட்டான். கரண்டி கோனுனதப் பாத்து ஆதிரை “ஆத்தி கொஞ்சம் விட்டுருந்தா கரண்டி கோனுன மாதிரி என் வாய் கோனியிருந்திருக்கும்”ன்னு டர்ராச்சு.

துஷார் வந்து என்ன ஏதுன்னு கேக்க, “அவன ஆட சொன்னா அப்பிடியே கூட சேர்ந்து நாமளும் ஜல்சாவா ஒரு சல்சா ஆடலாமேன்னு ஒரு நல்ல எண்ணத்துல தாண்டா சொன்னேன். அவன் என்ன கோவத்துல இருந்தானோ….கரண்டிய கோனையாக்கிட்டுப் போயிட்டான்”னு பொலம்புச்சு.

இந்த கேப்புல பார்வதி, கனி அக்கா தொட்டிக்குள்ள ஒளிச்சு வச்ச சாக்லேட் டிப்ப எடுத்திருச்சு. “யாரு எடுத்தான்னு மட்டும் சொல்லுங்க”ன்னு கதறிட்டு இருந்துச்சு. பாரு எதாவது பேசுனாலோ, இல்ல எதாச்சும் கேட்டலோ வீட்ல எவனும் பிக்பாஸ் நா*ய மதிக்குற அளவுக்குக் கூட மதிக்கிறது இல்ல. கனி அக்காதான் “இந்த Saturn எப்டி அத கண்டு பிடிச்சுதுடா?”ன்னு அங்கலாய்ப்பா இருந்துச்சு.

ஆதிரை எல்லாருக்கும் முன்னாடி

ஆதிரை: சும்மா தின்னுட்டு தின்னுட்டு தூங்குறீங்கன்னு சொல்லிட்டு டாஸ்க் குடுத்தா மட்டும் செய்ய முடியல…ஏன்டா டேய் என்னடா நெனச்சுட்டு இருக்கீங்க

பாரு அப்போ நைசா வந்து

பாரு: அதெல்லாம் சில பேரு பண்றாங்க….உனக்கு FJ பண்ணலன்றதுக்காக…

ஆதிரை: இந்தா நான் அவங்கிட்ட பேசிட்டு இருக்கேன்…போறியா நீயி

பாரு: ஓகே…வர வர ரொம்ப பிராங்கா பேசி அனுப்பிடுறாய்ங்க…

ஆதிரை மெல்ல உள்ள போச்சு

ஆதிரை: ஏம்ப்பா ரூல்ஸ் படி தான உனக்கு டாஸ்க் குடுத்தேன். நீ ஏன் மாவுக்கரண்டிய தூக்கி அடிச்ச?

FJ: கரண்டி டார்கெட் உனக்குதான் கடுகளவுல மிஸ் ஆகிட்ட.

ஆதிரை: சர்தான்…ஆக்சுவலா உன்ன மன்னிப்பு கேக்க வைக்கலாம்னு வந்தேன்

FJ: எதே?

ஆதிரை: இல்ல உங்கிட்ட மன்னிப்பு கேக்குறதுதான் நியாயம்னு புரிஞ்சு வந்தேன். திருந்தினேன், வருந்தினேன்…மன்னிச்சுடுடா…! எங்க இப்ப நான் சொல்ற வார்த்தைக்கு அப்போசிட் என்னன்னு சொல்லு பாக்கலாம்? மன்னிக்காத இந்த வார்த்தைக்கு ஆப்போசிட் என்ன?

FJ: மன்னிச்சுரு…

ஆதிரை: (மை.வா: அப்பாடி அவனுக்கே தெரியாம அவன மன்னிப்பு கேக்க வச்சாச்சு) சரிப்பா வரியா கட்டிப்பிடிச்சுக்கலாம்.

ஒரு வழியா கட்டிப்பிடி வைத்தியம் முடிஞ்சது.

டாஸ்க். அப்டி இப்டின்னு கடசியா சபரி, துஷார், கமருதீன் மூணு பேரு இருந்தாங்க. பிக்கி “விளையாடி ஜெயிக்க போறீங்களா? இல்ல பேசி ஒரு ஆளுக்கு குடுத்துடப் போறீங்களா?”ன்னு கேக்க, இவனுங்ககிட்ட பேசி ஆவி தீருறதுக்கு, விளையாடியே ஆவியாகலாம்”ன்னு சொல்லிட்டானுங்க.

இதுல அவங்களுக்கான defenders-அ அவங்களே வீட்டுக்கொரு ஆளா தேர்வு செய்யலாம்னு சொல்ல, சூஸ் பண்ணானுங்க. சபரி பாரு & விக்கல்ஸ சூஸ் பண்ணா, பாரு அவனோட எதிர் டீம் மாதிரி “என் போட்டோவ 3 தடவ எடுத்து என்னய வெளிய அனுப்புனேல்ல. இப்பப் பாருடா காலம் பதில் சொல்லும்”னு இப்ப ஆரம்பிச்சது, எபிசோட் முடியுற வரைக்கும் சொல்லிட்டே இருந்துச்சு. ஆனா அதெயெல்லாம் எவனும் எறும்பு கடிச்ச அளவுக்கு கூட எடுத்துப்பாக்கல.

சபரி வெளிய வந்துட்டான். கடைசியில கமருதீன் ஜெயிச்சான். இவனுக்கு அடுத்த வாரம் நாமினேஷன் ஃப்ரீ பாஸ். நார்மல் ஹவுஸ் ஆளுங்க ஜெயிச்சதால அவங்களுக்கு இன்னைக்கு டின்னர். அது போல சூப்பர் டீலக்ஸ் வீட்டுக்கு இங்க இருந்து 5 பேரு போகலாம். பாருவுக்கு சபரி வெளிய போனது பெரும் சந்தோஷமா இருந்துச்சு.

பாரு தன் கட்சிக்கு ஆள் சேர்ப்பு பணியில தீவிரமா இருக்கு. வாட்டரு, கலை போக இப்போ கமருதீனும், வினோத்தும் மூடர் கூடத்து ஆளுகளா மாறுவாங்க போல.

“போக்குவரத்துக்கு சிறந்தது காரு, பொரணிக்கு இன்னோரு பேரு பாரு”ன்னு நாளைக்கு சமச்சீர் கல்வி சிலபஸ்ல வந்தாலும் வரும், அந்த அளவுக்கு மாறி மாறி பொரணி பேசுது. வாட்டரு கிட்ட ரம்யா, சுபி, வினோத்த தூக்கனும்னு சொல்லிட்டு, இந்தப் பக்கம் வந்து வினோத்து கிட்ட வந்து ரம்யா, சுபிய தூக்கனும்னு சொல்லுது. இதுல இந்த வீட்ல யாருக்கு விஷம் அதிகம்னு சர்வே ரிசல்ட் வேற.

வீடு எக்கேடு கெட்டா எனக்கென்னன்னு வீட்டாளுக சுத்தலாம், வீட்டு கேப்ட்டனே சுத்தலாமா? அதுவும் அரோரா கூட. அரோரா எப்படா இவன கடிச்சு திங்கலாம்னே பரபரன்னு அலையுது. ஹிந்தி பிக்பாஸ் கண்டெஸ்டெண்டா போக வேண்டிய பொண்ண இங்க கூட்டி வந்து வச்சதுக்கே தமிழ் பிக்பாஸ தடை செய்யலாம். ஆதிரை வந்து FJ கூட சரசம் பண்ணலாம்னு பாத்தா எப்பப் பாத்தாலும் கார்ப்பரேஷன் பார்க் பெஞ்சுல கட்டிங்க போட்டு படுத்துத் தூங்குறவன் மாதிரியே தூங்கிட்டு இருக்கான்.

திடீர்னு கோவப்பட்ட பிக்கி எல்லாரும் வீட்டு ஹாலுக்கு வாங்கடான்னு கூப்ட்டு “டேய், எவனாவது எப்பாயாவது தூங்குனாலோ, இல்ல ரூல்ஸ மீறுனாலோ கத்துறதுக்கு ஒரு நா*ய வடகைக்கு எடுத்து வச்சிருந்தேன். ஆனா இந்த சீசன்ல உங்களுக்கு டியூட்டி பாக்க வந்த அந்த நா*ய், குலைச்சே செத்து போகும் போல. ஏண்டா நாள் முழுக்கவாடா தூங்கிக்கிட்டே, மைக்கப் போடாம, ரூல்ஸ ஃபாலோ பண்ணாம இருப்பீங்க? ஏண்டா இவனுங்ககிட்ட என்னய விட்டன்னு இப்போ அந்த நா*ய் என் டிக்கிய கறில காக்கிலோ கேக்குதுடா. வீட்டாளுக தப்புப் பண்ணா பரவால்ல…நீ அவனுங்கள விட மோசம்டா. இனி உன்னய கேப்ட்டனா வச்சிருந்தா…என் பேரு கெட்டுரும். உன் பதவி பறிக்கப் பட்டுருச்சு. ஒழுங்கு மரியாதையா ரூமக் காலி பண்ணிட்டு நார்மல் ஹவுஸுக்கு போ”ன்னு விரட்டி விட்டுட்டாப்ல.

பாருவுக்கு ரொம்ப சந்தோஷம். வியான்னாவுக்கும், சுபிக்கும் திடீர்னு பசி எடுக்க “நாமளா சமச்சு சாப்டுவோமா? பிக்கி நீங்க என்ன சொல்றீங்க?”ன்னு கேட்டுட்டு இருந்தத பாரு கேட்டுக்கிடே கேசுவலா வெளிய போயி “புள்ளைங்களுக்கு பசிக்குது ஏதாவது செஞ்சு குடுங்களேன்”னு சொல்ல, கனி அக்காவும் “சரி சமையல் தான பண்ணிக்கலாம்”னு சொல்லி பண்ண ஆரம்பிக்க, சபரி கூப்ட்டு சுபிகிட்ட “பாத்திரத்த கழுவிக் குடு”ன்னு சொன்னதும், “அது ரூல் பிரேக்கு பண்ண மாதிரி ஆகாதா?”ன்னு யோசிக்க, “இப்ப உனக்கு ரெண்டாவது வாட்டி சமைக்குறது கூடத்தான் ரூல்ஸ் பிரேக் பண்றதா அர்த்தம். ஆனா பண்றோம்ல. சரி நீ கிளம்பு, நாங்களே கழுவிக்கிறோம்….நீங்க நல்லா தின்னுட்டு தூங்குங்கன்னு FJ சுபிய கழுவி ஊத்த, சுபி உள்ள போயி வியான்னா கிட்ட “ஆமா இப்ப என்ன நடந்துச்சு? இந்த பாருவா வந்தா…நாம பேசுனத கேட்டா…அவனுங்க கிட்ட போயி சொன்னா….எல்லாத்தையும் நம்மள கழுவி ஊத்த வச்சுட்டு….அவ பாட்டுக்கு போயிட்டா…!”

சுபி வந்து வெளிய எல்லர்கிட்டயும் இந்த விளக்கத்த குடுக்க “அவ அப்பிடி பண்ணலன்னாதான் ஆச்சர்யம்”னு கேசுவலா இருந்தானுங்க. சுபி அழுதுட்டே உள்ள போயிடுச்சு. அப்பறம் சபரி வந்து அவள சமாதானப் படுத்துனான். பாவத்த.

அப்பறம் நார்மல் ஹவுஸ் ஆளுங்களுக்கு கேண்டில் லைட் டின்னர் கிடச்சது. அத லிவிங்க் ரூம்ல இருந்து சூப்பர் டீலக்ஸ் ஆளுங்க பாத்து வயிறெரிஞ்சுக் கிட்டு கெடந்தானுங்க.

Series Navigation<< நாள் – 10நாள்: 12 >>

Author

Related posts

நாள்: 20

நாள்: 19

அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு