நாள்: 12


நாலடியார் மாதிரி நாலே நாலு வரியில எழுத முடியுற எபிசோட். ஆரம்பிச்சதுமே “நான் சுத்தி வளச்சு பேச விரும்பல. நேரடியா விஷயத்துக்கு வரேன்”ற மாதிரி நேரா “கேப்டன்ஸி டாஸ்க்குக்கான ஆள தேர்ந்தெடுப்போம் வாங்கடா”ன்னு கூப்ட்டு “இந்த வார பெஸ்ட் பெர்பார்மர் யாரு?ன்னு சொல்லுங்கடா பாக்காலம்”ன்னு ஆரம்பிச்சாப்ல. சபரி, கனி, கெமின்னு மாறி மாறி வந்து கடைசியா சபரி அப்பறம் கனி அக்கா செலெக்ட் ஆனாங்க. ஆல்ரெடி டாஸ்க்குல ஜெயிச்ச கமருதீன், கனி, சபரி இவங்கதான் கேப்டன் கேண்டிடேட்ஸ்.
உலகத்துல நல்லதுன்னு ஒண்ணு இருந்தா “பாரு”ன்னு ஒண்ணும் இருக்குமில்லையா? பெஸ்ட் பாத்தாச்சு அப்டியே ஒர்ஸ்ட்டையும் உங்க திருவாயால சொல்லுங்கன்னு சொன்னதும். A for Aroura & Adhirai-ன்னு எல்லாரும் சலிக்காம சொல்லிட்டானுங்க. “எந்திரிச்சதுல இருந்து மேக்கப் போடவே பாதி நாளாகிடுது, அப்பறம் துஷார தூக்கிக் கொஞ்ச மீதி நாளுன்னு கழிக்கிறா”ன்னு அரோராவுக்கும், “இவ என்னமோ சூப்பர் டீலக்ஸ் வீட்ல ரூம் புக் பண்ணவ மாதிரிதான் இருக்கா. ஒரு நாள் கூட எங்க கூட ஒண்ணு மண்ணா பழகுனது இல்ல. பவர யூஸ் பண்ணுவான்னு பாத்தா FJ-வ கவரத்தான் வழி பாக்குறா. அட, குளிக்குறதுக்குக் ஜக்கூஸி, கக்கூஸின்னு இருக்குற இந்த வீட்டு பாத்ரூம்ல குளிக்காம அதுக்கு கூட அங்கதாங்க ஓடுறா. பாரு என்னடான்னா ஓவரா பெர்பார்ம் பண்ணி கெடுக்குறா, இவ என்னடான்னா ஒரு வேலையும் பாக்காம கெடுக்குறா”ன்னு ஆதிரைக்கு காரணம் சொன்னானுங்க. FJ-வும் ஆதிரைய சொன்னான். “என் பேர எவ்வளவு அழகா சொல்றான் பாரு என் செல்லாக்குட்டி”ன்னு தான் எடுத்திருக்கும். அரோராவும், ஆதிரையும் ஜெயில் பறவைகள். பொண்ணும் பொண்ணும் ஜெயிலுக்கு போறாங்க. இந்த மாதிரி ஏற்கனவே நடந்திருந்தாலும் இதுதான் பர்ஸ்ட் டைம்.
இப்ப அரோராவும் பாருவும் பேசிக்கிட்டாங்க….
பாரு: ஐன்ஸ்டீன் என்ன சொல்றாருன்னா E=mc2
அரோரா: ஆனா கண்டக்டர் என்ன சொல்றாருன்னா ஆஃப்டர் காந்தி சிலை அண்ணா ஸ்கொயர்
பாரு: ஒரு அமெரிக்க டாலர் 87 ரூபா ஆகிடுச்சே
அரோரா: பழனி முருகன் கோவில் வாசல்ல ஒரு டாலர் 10 ரூபாதான்
பாரு: செஞ்சுரின்னா அது விராட் கோழிதான்
அரோரா: ஆனா பிரியாணிக்குள்ள எப்பவும் செத்த கோழிதான்
பாரு: ஃபோன்ல பெஸ்ட் சாம்சங்குதான்
அரோரா: ஆனா ஃபோன் பேசிட்டே பைக் ஓட்டுனா சேம் டே சங்குதான்// (நன்றி: வை ராஜா வை – திரைப்படம்).
இப்பிடிதான் ரெண்டும் பேசிட்டு இருந்துச்சு. கடைசி வரைக்கும் ஒண்ணுமே புரியல.
அட இன்னும் கொஞ்ச பேரு கத சொல்லனும்ல?ன்னு திடீர்னு நியாபகம் வந்து யாரச்சும் ஒரு 2 பேரு கத சொல்லுங்கடான்னு பிக்கி சொன்னாப்ல. பாரு முந்திக்கிட்டு எந்திரிக்க, “நீ எப்டியும் உண்மக்கதை இல்லாம வன்மக்கதைய தான் சொல்லப்போற. அதுக்கு தனியா ஒரு நாள் எடுத்துக்கோ. எப்ப வேணும்னாலும் வெளிய போலாம் எனக்கு இன்னைக்கு சான்ஸ குடுத்துக்கோ”ன்னு அப்சரா கேக்க. “நீ இன்னும் வீட்டுக்குள்ள தான் இருக்கியா? சரி வாயத்தொறந்து கேட்டுட்ட, ஆனா அடுத்த கதை சொல்ற சான்ஸ்ல நான் கண்டிப்பா சொல்லிருவேன்”னு சொல்லிட்டு உக்காந்துச்சு பாரு.
கமருதீன் கதை: உருக்கமா சொல்லனும்னு ஆசப்பட்டு அங்க அங்க கண்ணெல்லாம் கூட கலங்குனான். ஆனா இவன் எப்படா முடிப்பான்னு நமக்கு தான் கலக்கமா இருந்துச்சு. அனா இவனோட எக்ஸ் ஆதிரைன்னு தெரிய வந்துச்சு. அத சொல்லும்போது அவனோட பாடி லாங்குவேஜ் எக்ஸாக்ட்டா பாருவோட பாடி லேங்குவேஜ்.
அப்சரா கதை: போராட்டமான கதை தான் ஆனா அவங்க கதையோட ஹீரோ அவங்க அம்மா ஜாக்குலின் மேரி. அவங்களுக்கு எல்லாரும் கை தட்டுனானுங்க.
இப்போ கேப்டன்ஸி டாஸ்க். “குத்துங்க எசமான் குத்துங்க” இதக் கேட்டதுமே “இருங்க கத்தி எடுத்து இப்பவே சபரிய குத்தி கொன்னுடுறேன்”னு எந்திரிச்ச பாருவ அமத்தி “ரூல்ஸ ஒழுங்கா கேளு”ன்னு சொன்னாப்ல. கமருதீன், சபரி, கனி மூணு பேரோட கட்டவுட் இருக்கும். ஒரு ஆள 3 பேருதான் குத்த முடியும். குத்துறப்போ சம்பந்தப்பட்டவங்க பாத்துட்டா அது செல்லாது & அவங்க அதுக்கடுத்து யாருக்கும் குத்த முடியாது. கம்மியா குத்து வாங்குனவங்க அல்லது குத்தே வாங்காதவங்க கேப்டன்.
மொத குத்த ரம்யா சதக்குன்னு கமருதீனுக்கு இறக்கிடுச்சு. பயலுக்கு பொறுக்கல. பாரு ரெண்டு நாளா வாட்டர கழட்டி விட்டுட்டு கமருதீனுக்கு கொக்கி போட்டு வச்சிருக்கு. கமருதீனோட உடம்புல பாரு கூடு விட்டு கூடு பாஞ்சா மாதிரி அப்டியே பாருத்தனம் பண்றான் கமருதீன்.
அநேகமா அவன் கத சொன்ன அழகுக்கு தான் ரம்யா மொத குத்து குத்துச்சு போல.
கமருதீன்: என்ன ரம்யா இப்ப குத்துனப்போ மட்டும் கால் வலிக்கலையா?
ரம்யா: கைலதான குத்துனேன் கால் வலிச்சா என்ன?
கமருதீன்: அண்ணன்னு கூப்ட்டுட்டு இப்பிடி அநியாயமா குத்துறியே
ரம்யா: அப்டி கூப்ட்டதுக்குதான் செருப்பெடுத்து ரெண்டு தடவ தலைய சுத்தி என்னயவே அடிச்சுக்கிட்டேன்….உனக்கு அசிங்கமா இருந்தா சொல்லு உன்னய ரெண்டு சாத்து சாத்துறேன்.
கமருதீன்: செருப்பு கிருப்புன்னா அப்பறம் நெருப்பாயிருவேன்
ரம்யா: நீ பெரிய பருப்பா கூட இருந்துக்கோ. என்னயப் பத்தி தெரியலன்னா….என் ஸ்டேஜ் ஷோ வைரல் ரீல்ஸ பாத்து தெரிஞ்சுக்கோ.//
கமருதீன் பக்கத்துல இருந்துக்கிட்டு பாரு “இப்ப கமருதீன் கைய முறுக்குவான் பாரேன்…இப்ப முறச்சு பாப்பான் பாரேன்…இப்ப நாக்க துருத்துவான் பாரேன்”னு ஏத்து ஏத்துன்னு ஏத்தி விட்டுட்டு இருந்துச்சு.
இந்த பஞ்சாயத்து ஓடிட்டி இருக்கும்போதே பாரு சரக்குன்னு சபரி கடவுட்ட குத்துறப்போ சபரி பாத்துட்டான். அத சொன்னதும் பாரு “நீ பாக்குறதுக்கு முன்னமே குத்திட்டேன்”னு கத்த. பிக்கி “பாரு அவுட்டு”ன்னு சொல்லிட்டாப்ல.
இந்தப் பஞ்சாயத்துல சுபி கமருதீன குத்த “உனக்கு அறிவே இல்ல நீ ஒரு முட்டாள். இதெல்லாம் ஒரு பொழப்பா”ன்னு கேட்டு “தூ”ன்னு துப்புனான். இவன் இந்த ஷோல எத்தன தடவ துப்புனான்னு கேட்டு ஒரு காண்டெஸ்டே நடத்தலாம். அவ்வளவு துப்புறான். இதென்னடா புதுவித கோவமா இருக்கு? டாஸ்க்கே குத்துறதுதான். இன்னும் இவன் என்னய குத்துனா குத்துனவன் அம்மா சிலுக்குடான்னு தான் சொல்லல. அவன 3 பேரு குத்தியாச்சு. அவன் கேப்டன் டாஸ்க்குல இருந்து அவுட்.
கனிய சபரியே குத்துனான். இப்போ கனிய இன்னும் 1 ஆளு குத்துனா அதும் அவுட். சபரி ஒரு குத்தோட குத்த வச்சு உக்காந்திருக்கான். இடையில தீபாவளி இன்டெகரேஷனா ஜெயச்சந்திரன் ஒரு பேஷன் ஷோ நடத்துனானுங்க. ஜோடியா ஜெயச்சந்திரன் உடைகளப் போட்டுகிட்டு நடந்து வரணும். சும்மா சொல்லகூடாது ஆதிரைக்கும், FJ-வுக்கும் செம்ம கெமிஸ்டிரி. நடந்து வந்து நின்னுட்டு ரெண்டு பேரும் ஒரு லுக்கு குடுத்துக்கிட்டாங்க பாருங்க…செம்ம! அவங்கதான் ஜெயிச்சாங்க. அரோரா ஜெயில்ல உக்காந்துகிட்டு பாருகிட்ட துஷார நெனச்சு நம்மள யாரு பிரிச்சா குறுக்க கம்பி கிழிச்சா”ன்னு ஒப்பாரி வச்சுச்சு. அய்யோ இவனுங்க பரவால்ல இன்னைக்கு விசே வருவாப்லயே…ரைட்டுடா!

Series Navigation<< நாள்: 11நாள்: 13 >>

Author

Related posts

நாள்: 21

நாள்: 20

நாள்: 19