நான் நெனச்சது வீண் போகல. விசேவால இந்த ஷோவுக்கு பைசா காசுக்கு பிரயோஜனமில்ல. குறிப்பா எந்த விஷயத்தப் பத்தி பேசனும், அந்த விஷயத்தோட இம்ப்பாக்ட்ட அவனுங்களுக்கு எப்பிடி புரிய வைக்கனும்? அந்த விஷயத்த எப்பிடி முடிக்கனும்? இப்பிடி எந்த ஒரு ஃபார்மெட்டும் இல்லாம இருக்கு…! விசே பாஷைல சொல்லனும்னா சொத சொதன்னு இருக்கு…! இது எப்டி இருக்குன்னா….
விசே கேரவனுக்கு வந்தப்பறம். டைரக்டரும், ரைட்டரும் பாக்க வராங்க.
விசே: வாங்க நீங்கதான கதை சொல்ல வந்தீங்க? ஆரம்பிங்க
டைரக்டர்: சார் நான் பிக்பாஸ் டைரக்டர்
விசே: ஓ….ஆமால்ல, சரி இன்னைக்கு யாரு எவிக்ஷன்னு சொல்லனும்?
டைரக்டர்: சார் எவிக்ஷன் நாளைக்கு
விசே: சரி இன்னைக்கு என்ன?
டைரக்டர்: ம்ம்ம்… வெள்ளிக்கிழமை….! சார் கொஞ்சம் ஸ்க்ரிப்ட் பாத்துக்கிட்டீங்கன்னா நல்லா இருக்கும்
விசே: அதான் நல்லா இருக்காதே…சரி குடுங்க
ரைட்டர்: எடுத்ததும் நீங்க சபரியப் பாத்து பேசுறீங்க
விசே: நான் திவாகரப் பாத்து பேசுறேனே…
ரைட்டர்: சரி சார்…அடுத்து நீங்க கனியப் பாத்து பேசுறீங்க
விசே: நான் கமருதீனப் பாத்து பேசுறேனே
ரைட்டர்: சரி சார்….அதுக்கப்பறம் நீங்க வியான்னாவப் பாத்து பேசுறீங்க
விசே: நான் FJ-வப் பாத்து பேசுறேனே….
ரைட்டர்: நீங்க பேசுனா சரி…
விசே: என்னயா ஸ்க்ரிப்ட் இவ்ளோ பெருசா இருக்கு? சுருக்கி குடுங்கையா
ரைட்டர்: இதுக்கு மேல சின்னதான்னா திருக்குறள தான் எழுதி குடுக்கனும்
விசே: சரி நறுக்குன்னு மூணே மூணு விஷயம் மட்டும் சொல்லு அத மட்டும் போயி பேசிட்டு வரலாம். மத்ததெல்லாம் அவனுங்கள காமிச்சு ஃபில் பண்ணிக்கோ.
இப்டிதான் கேரவன் டிஸ்கஷன் இருக்கும் போல. உருப்படியா ஒரு விஷயத்தப் பத்தி கூட பேசல. இதுல க்ரூப்பா விளையாண்டா பாக்க நல்லா இருக்காதுன்னு அட்வைஸு வேற. அந்த டாஸ்க்க குரூப்பா ப்ளான் பண்ணி விளையாடாம இருந்திருந்தா இன்னேரம் வீட்டுக்குள்ள இருந்து 3 டெட்பாடி வெளிய வந்திருக்கும். கய கயன்னு கத்திட்டே தான் இருந்திருப்பானுங்க.
சொன்ன மாதிரி மூணே மூணு விஷயம் தான் . கத்தி குத்து டாஸ்க்குல கமருதீனோட செயல் அப்பறம் டாஸ்க்குல குரூப்பா விளையாண்டது அப்பறம் யாருக்கு ரெண்டு முகம். இவ்வளவுதான்.
விசே: ஆமா கமருதீனு, கத்தி குத்து டாஸ்க்குல உன் பிரச்சனை என்ன?
கமருதீனு: கத்தியால குத்துறதுதான். அதெப்பிடி ஜெயிச்சு வந்த என்னய கத்தியால குத்தலாம்?
விசே: ஏண்டா ரூல்ஸே உனக்கு தெரியாம உன்னய குத்துறதுதான். அப்பிடி குத்துறவங்கள ஏன் கத்துற?
கமருதீனு: அதெப்பிடி ஜெயிச்சு வந்த என்னய கத்தியால குத்தலாம்?
விசே: தம்பி, நான் சொல்றது புரியுதா? இந்த கேமோட ரூல்ஸே அதான்…டேய் விக்கலு அந்த ரூல் புக்க எடுத்துப் படிடா
கமருதீனு: அதெல்லாம் சரி… ஆனா ஜெயிச்சு வந்த என்னய எப்பிடி கத்தியால குத்தலாம்?
விசே: அப்டி இல்லப்பா இங்க ரூல்ஸுன்னு ஒண்ணு இருக்குல்ல…
கமருதீனு: ஆமா இருக்கு ஆனா ஜெயிச்சு வந்த என்னய எப்பிடி கத்தியால குத்தலாம்?
விசே: வரிசையா 4 படம் இருக்கு…இல்லேன்னா உன்ன நான் குத்திட்டு உள்ள போயிருவேன்.
விசேவுக்கும் என்ன பேசுறதுன்னு தெரியல, கமருதீனும் என்ன சொல்றான்னு புரியல…ஏதோ கால தெரியாம மிதிச்ச மாதிரி சாரி கேட்டுட்டு உக்காந்துட்டான்.
சம்பந்தமில்லாம கனியையும், சபரியையும் அடிச்சாப்ல. அவனுங்களுக்கு இப்ப எதுக்கு நம்மள அடிக்கிறாய்ங்கன்னு தெரியாம அடி வாங்குனாய்ங்க.
கமருதீன் மறுபடியும் பாரு கூட சேர்ந்து அதே மாதிரிதான் சுத்துறான். இவன் திருந்த மாட்டான் போல.
இப்போ இந்த வீட்ல யாருக்கு ரெண்டு முகம்னு கேட்டதுல சபரிக்கு 4 ஓட்டும், கனிக்கு மூணும், பாருவுக்கு 3ம் கிடச்சது. பாருவுக்கே இது ஆச்சர்யம்.
ஆனாலும் பாரு இல்லாம ஒரு எபிசோடா? ரெண்டு முகம் ஆகிட்டிவிட்டில விக்கல் “பாரு, திவாகர் கூடவே சுத்திட்டு…பேஷன் ஷோன்னு வரப்போ அவன் கூட நடந்தா பாக்குற மாதிரி இருக்காதுன்னு சொல்றா”ன்னு சொல்லிட்டான். அதே போல துஷாரும், “இவ எங்கிட்ட மாறி மாறி பேசுறா இவள எனக்கு பிடிக்கவும் இல்ல, நம்பவும் முடியல”ன்னு சொல்லிட்டான்.
விக்கல்கிட்ட போயி விளக்கம் குடுக்குது, துஷார் கிட்ட போயி அழுகுது, அப்பறம் என்னன்னே சரியா தெரியல…வாட்டரு கூட செம்ம சண்ட போட்டுட்டு இருந்துச்சு. மூக்குபொடி போட்ட குரங்கு ப்ரோ மாதிரி கிருட்டு கிருட்டுன்னு சுத்திட்டு இருந்துச்சு. உங்க மூஞ்சியப் பாத்தா சோறு இறங்க மாட்டேங்குதுன்னு தனியா போயி அழுதுட்டு இருந்துச்சு. எப்படா திங்கக்கிழம வரும்னு இருக்கு.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^