ஆக இந்தத் திங்கக்கிழமையும் பங்கக் கிழமையா தான் இருந்துச்சு. குழந்தை, குட்டி, குடும்பம்ன்னு எதையும் பாக்காம உள்ள உர்ருன்னு திரியுற இவனுங்கள தீபாவளிய கொண்டாட வைக்கலாம்ன்னு ப்ளான் பண்ணாய்ங்க போல. எல்லாரையும் எண்ணெய் தேச்சு குளிக்க சொன்னாய்ங்க. “வாட்டருக்கு ஆயில் தேச்சு விட்டா ஆயுள் கூடும்னு கும்முட்டி அடுப்பு சித்தரே சொல்லியிருக்காரு”ன்னு ராம்ப் வாக்குல ஏற்பட்ட களங்கத்தப் போக்க வம்படியா வாயத் தொறந்த படி வாட்டருக்கு எண்ணெய் தேச்சு விட்டுட்டு இருந்துச்சு பாரு. பாருவுக்கு கமருதீன் தேய்க்க, FJ-க்கு ஆதிரை தேய்க்கன்னு ஆளாளுக்கு நல்லா தேச்சானுங்க. அநேகமா இந்த சீசன்ல தான் மெயிண்டனன்ஸ் செலவு செட்டு போட்டத விட அதிகமா இருந்திருக்கும். இதோட 1330 பொருள உடச்சிருக்கானுங்க. இன்னைக்கும் ஆதிரையும், துஷாரும் ஓடி விளையாடி ஒரு பெரிய பொருள பந்தாடிட்டானுங்க.
அதாகப்பட்டது இந்த துஷார் மைக்க மறக்குறதெல்லாம் இல்ல. அவன் வேணும்னேதான் அப்பிடி பண்றான் போல. அதுவும் இவனும் அரோராவும் மைக்கு கூட போடாம ஊருல இல்லாத அதிசயமா அப்பிடி என்ன பேசிக்குவானுங்க பாத்தா அதுவும் இப்டிதான் இருக்கு…
அரோரா: உப்புமால உப்பு அதிகமா இருந்தா எப்டி சொல்றது? உப்புமால உப்புமான்னா?
துஷார்: அப்டி சொன்னா தப்புமான்னு யாரும் சொல்ல சான்ஸ் இருக்கு…வார்த்தைய அளந்து பேசு
அரோரா: வீடு கூட்ட விளக்கமாறு தேவைன்னு எப்டி தெரிஞ்சது?
துஷார்: இப்பிடி சம்பந்த சம்பந்தமில்லாம பேசிட்டு இருந்த ரெண்டு பேரால தான் அத கண்டுபிடிச்சிருக்க முடியும்
அரோரா: வெளிய என் சப்ஸ்கரைபர்ஸ் என்னயப் பத்தி என்ன நெனப்பாங்க?
துஷார்: அவனுங்க இன்னும் உன்னயப் பத்தி நெனச்சுட்டு இருப்பானுங்கன்னு நெனைக்கிற பாத்தியா…அத நெனச்சாத்தான் ஆச்சர்யமா இருக்கு//
சூப்பர் டீலக்ஸ் சார்பா எதாச்சும் கோமாளித்தனம் பண்ணலாம்னு முடிவு பண்ணி வியான்னா, சுபி, வாட்டரு எதோ ப்ராக்டீஸ் பண்றப்ப வழக்கம் போல நம்ம நடிப்பு அரக்கன் சொதப்ப, அத சரி பண்ண சொன்ன வியான்னாவ வாட்டரும், பாருவும் ரொம்ப இன்புட் குடுக்காதன்னு சொன்னதுக்கு வியான்னா சட்டுன்னு “இந்தாளுக்கு நடிக்கத் தெரியாம என்னய குத்தம் சொல்றான். நான் இந்த விளையாட்டுக்கே வரலப்பா”ன்னு கண்ணக் கசக்க, பாருவுக்கு அள்ளு விட்டுருச்சு. “இவன கூட்டு சேத்ததுக்கு இன்னும் என்னென்னலாம் பாக்க போறேனோன்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டு “யோவ், வாட்டரு…கசங்காம இருந்த பொண்ண கண்ண கசக்க விட்டுட்ட. என்னன்னு பாரு”ன்னு சொல்லிட்டு ஓடிருச்சு. வினோத்து வாட்டர வம்பிழுத்து வெளிய கூட்டிட்டு போக, வியான்னாவ எல்லாரும் நட்டாத்துல விட்டுட்டு போயிட்டானுங்க. “இவனுங்கள நம்பி எதையுமே பண்ண முடியாது போல”ன்னு சோலோவா பொலம்பிட்டு இருந்துச்சு வியான்னா.
கனி அக்கா மொறப்படி தலயா பதவி ஏத்துச்சு. இப்ப டீம் ஸ்வாப்பிங். சூப்பர் டீலக்ஸ்க்கு யாரு வேல பாக்கனும்னு நீங்க செலெக்ட் பண்ணுங்கன்னு சொன்னதுக்கு பாரு மாஸ்டர் ப்ளான் போட்டு சபரியையும், FJ-வையும் சொல்லி பல்லக் காட்டுச்சு. உடனே அடுத்த குண்டப் போட்டாப்ல பிக்கி. இப்ப நார்மல் ஹவூஸ்ல இருந்து சூப்பர் டீலக்ஸ்க்கு யாரு வரலாம்னு சூப்பர் டீமே செலக்ட் பண்ணலாம்னு கேட்டதுக்கு மறுபடியும் பாரு அதே ரெண்டு பேர சொல்லிச்சு. அவனுங்கள வச்சே கனிக்கு குடச்சல் குடுக்கலாம்ன்றது தான் அதோட ப்ளான். வாட்டருக்கு வந்த வினோத்து பேர் சொல்லும் வியாதி போல, பாருவுக்கு சபரி, FJ பேர் சொல்லும் வியாதி வந்துருச்சு. அந்தளவுக்கு இந்த ரைட் பிரதர்ஸ்….பாருவ கடிக்குற பைட் பிரதர்ஸ்சா அதுக்கு தெரியுறானுங்க.
இப்ப அடுத்த ட்விஸ்ட். குடுக்கப்போற டாஸ்க்குல சபரி, FJ ஜெயிச்சா சூப்பர் வீட்ல இருந்து ரெண்டு பேர நார்மல் ஹவுஸுக்கு அனுப்பலாம்னு சொல்ல…டாஸ்க்குல ஜெயிச்சு பாருவையும், வியான்னாவையும் நார்மல் ஹவுஸுக்கு அனுப்புனானுங்க. பாருவுக்கு என்ன நடக்குதுன்னே புரியல…நம்ம எந்த பால் போட்டாலும் இவனுங்க கோல் போடுறானுங்கன்னு அது யோசிச்சது, அதோட மூஞ்சி போன போக்குலையே தெரிஞ்சது.
அதே போல நாமினேஷன் ஃப்ரீயில இருந்து ரம்யாவையும், சுபியையும் கழட்டி விட்டுட்டானுங்க. வாட்டரு & FJ க்கு பாஸ் கிடச்சது. இதுவரைக்கும் நாமினேஷன்னா என்னான்னே தெரியாத சுபி, ரம்யா, வியான்னா இந்த முப்பெரும் தேவியரும் முகம் குப்புன்னு வேர்த்துப் போயி உக்காந்து இருந்துச்சுக. நாமிநேசன் படலம். அதிசயமா பாரு & கம்ருதீன் நாமிநேஷன்ல இல்ல. இத பாருவாலயே நம்ப முடியல. ஆதிரை, துஷார், கலை, சுபி, ரம்யா, வியான்னா அப்றம் அரோரா இவங்கள்லாம் நாமிநேஷன் லிஸ்ட்டுல இருக்குற ஆளுங்க. பின்ன பைசன் டீம் உள்ள வந்து தீபாவளி கொண்டாடுனானுங்க. முடிஞ்சது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^