நாள்: 17


நாளுதான் கடக்குது. ஆனா ஒரே பஞ்சாயத்துதான் எப்பவுமே நடக்குது. “குடுத்த வேலைய செய்யல! குடுத்தா வேலைய செய்ய மாட்டேன்!” பாக்குறதுக்கே கடுப்பாகுது. பாரு வேற நம்மள கடுப்பாக்குது. இன்னைக்கும் அதேதான், ஆதிரை & FJ குடுத்த வேலைய செய்ய மாட்டேன்னு பாரு ஆரம்பிச்சு வச்சுச்சு. எங்க எந்தப் பஞ்சாயத்தா இருந்தாலும் அதோட மூல காரணம் நம்ம பாரு தான். இத விக்ரம் FJ கிட்ட “அடே அவ யாரு மேல கோவப்பட்டாலும், அவ மேல யாரு கோவப்பட்டாலும் அவ மேல தான் கேமரா போகஸ் போகும். அவ ஸ்க்ரீன் டைம் தான் அதிகமாகும். அதனால வேல பாக்காத அவள நோண்டாம. வேல பாக்குற ஆளுங்ககிட்ட க்ரியேட்டிவா வேலை வாங்கி பொழைக்கப் பாருங்கடா”ன்னு கீதோபதேசம் குடுத்துட்டு இருந்தான்.
இந்தப் பஞ்சாயத்த பேச வந்த FJ லைட்டர தூக்கி வைக்க. “யப்பா சாமி உன் கையால குதூப் மினார கூட உடச்சுப்புடுவ. அத அங்கயே வைடா ராஜா”ன்னு ப்ரவீன் சொல்ல, கெமியும் அவன வைக்க சொல்ல “போங்கடா டேய்”ன்னு சொல்லிட்டு போய்ட்டான். “இந்த ரவுஸயெல்லாம் பாருகிட்ட வச்சுக்க சொல்லு, இப்ப வந்து ஒழுங்கா எங்கிட்ட வந்து மன்னிப்பு கேக்க சொல்லு அவன, இல்லேன்னா இன்னைக்கு எவனுக்கும் வயித்துக்கு புவ்வா கிடையாது”ன்னு கெமி கட்டையப் போட, “இதெல்லாம் பாருவால வந்தது”ன்னு போற போக்குல பாருவுக்கு ஒரு அடியப் போட்டானுங்க.
கசகசகசன்னு கத்திட்டே இருக்கானுங்க இந்த பாருவும், FJ-வும். பாருவுக்கு FJ மேல கொலவெறி. டைரக்டாவே அவன ட்ரிக்கர் பண்ணுது. அவன் என்னைக்கு கைய மடக்கி குத்தப் போறான்னு தெரியல.
மறுபடியும் ஜூஸ் டாஸ்க். இந்த தடவ ஜட்ஜஸ் ஜூஸ் கடைக்குப் போயி செக் பண்ணலாமாம். ஜட்ஜஸ குஷிப்படுத்துனா அவங்களுக்கு சாதகமா ஜட்ஜிங்க் நடக்குமாம். இதுல பாருவோட கேம் என்னன்னா எப்டியாச்சும் யார்கிட்டயாச்சும் இருந்து நாமிநேஷன் ஃப்ரீ பாஸ வங்கிக்கனும்ன்றது. ஆனா கூடவே இருந்த கொடுக்கு வாட்டர் மெலன் இன்னைக்கு பாருவுக்கு பங்கமா போயிட்டாப்ல.
கடைய செக் பண்றேன்னு சொல்லி FJ கடைக்கு வந்து மேல ஏறி உக்காந்துச்சு பாரு. “ஏன் இன்னும் சீலிங்க்ல போயி உக்கார வேண்டியதுதான? சாப்பாட்டு பொருள் வைக்குற எடத்துல வந்து இப்பிடி டிக்கிய பார்க் பண்றியே 5 கிராமாவது உனக்கு அறிவிருக்கா?”ன்னு அலசி விட்டான். பாருவும் அந்த டிக்கின்ற வார்த்தைய வச்சு எப்டியாச்சும் அவன் மேல கேசு குடுக்கலாம்னு பாத்துச்சு. ஆனா அதுக்குள்ள வாட்டரு வேற பக்கம் டைவர்ட் பண்ணிட்டாப்ல.
வாட்டரு பாருகிட்ட “நீ ஒன் சைடா பண்ணாத அது நல்லா இல்ல”ன்னு எல்லாருக்கும் முன்னாடி வாயத் தொறந்து சொல்லிட்டாப்ல. அது போக பாருவோட சாப்பாட்ட வேற திருடி தின்னுட்டாப்ல. அத வச்சு வாட்டர வறுத்தெடுச்சு பாரு.
ரம்யா பாருவுக்கு ஃப்ரீ பாஸ் தரேன்னு டீல் பேசுனதால பாரு வட்டர் கிட்ட “நாம FJ-வ ரிஜெக்ட் பண்ணுவோம்”னு சொல்ல, “உனக்கு பிடிக்காத FJ வ நான் ரிஜெக்ட் பண்ணனும்னா, எனக்கு பிடிக்காத வினோத்த நீ ரிஜக்ட் பண்ணுன்னு வாட்டரு சொல்ல….பாரு அடேய் இந்த ஒட்டு மொத்த வீட்டுல இருந்து எனக்கு உதவி பண்றேன்னு ஒரே ஒருத்தி ஏதோ ஞானோதயம் வந்து வந்திருக்கா…இந்த நேரத்துல நீ வேற ஏண்டா என்னய படுத்துற?”ன்னு பொலம்ப “நீ மட்டும் தான் கேம் விளையாட வந்த. நாங்கல்லாம் சட்டி பான சொரண்ட வந்தோம்”ன்னு வாட்டரு இன்னைக்கு ஹீட் வாட்டரா மாறி பாருவ செஞ்சாப்ல.
ஆனா ரம்யாவோ பாருகிட்ட அப்ரூவ் வாங்கி ஜெயிச்சப்பறம் பாருவ ஏமாத்திரலாம்னு ஒரு கணக்குல இருந்துச்சு.
ஜட்ஜ் பண்ண உக்காந்தானுங்க. ஆனா இன்னைக்கு பாருவ பெருசா அடிச்சது யாருன்னா மூடர் கூடத்துல இருந்த ரெண்டு பேரு தான். வாட்டரும், கலையும். ஆதிரை பாட்டில பறக்க விட, கலை சேர பறக்க விட, பாருவ எவனும் பறக்க விடுறதுக்கு முன்னாடி அதுவே போங்கடா நீங்களும் உங்க ஜட்ஜ் பதவியும்ன்னு சொல்லிட்டு ஜட்ஜு பேனல்ல இருந்து வெளிய போயிருச்சு. அப்பறம் வாட்டர பாரு மறுபடியும் திட்ட, வாட்டரும் பதிலுக்கு திட்டி விட்டாப்ல.
உண்மையாவே கண்டென்ட் இல்லாம ரொம்ப மொக்கையாப் போகுது பிக்பாஸ். இதுக்கு என்னைக்கு ஒரு விடிவு காலம் வரப்போகுதோ.


Series Navigation<< நாள்: 16

Author

Related posts

நாள்: 21

நாள்: 20

நாள்: 19